Wednesday, April 12, 2023

DEAD RIVER BUCKINGAM CANAL - இறந்துபோன பக்கிங்காம் ஆறு

 

EDWARD CLIVE, INITIATED 
BUCKINGAM CANAL FORMATION.

இந்த புகைப்படத்தில் இருப்பவர் எட்வர்ட்கிளைவ், இவர்தான் பக்கிங்காம் கால்வாய் வெட்ட உத்தரவிட்டவர், முதலில் எண்ணூர்  வரை, அப்புறம் காட்டுப்பள்ளி வரை, பிறகு பழவேற்காடு வரை செய்து முடிக்க அனுமதி தந்தவர். 

அந்த காலத்தில் பின்னி மில்லில் உற்பத்தியான பருத்தி துணிகள் அனைத்தும் பக்கிங்காம் கால்வாய் மூலமாகத்தான், படகுகள் மூலமாகத்தான்  வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

உப்பு நீர் போக்குவரத்து (TRANSPORT THROUGH SALT-WATER- WAYS)

தமிழ்நாட்டின் தலைசிறந்த உப்பு நீர் போக்குவரத்து உன்னதத்தை சுதந்திர இந்தியா அங்கீகரிக்கவில்லை, என்று சொல்லுகிறார்கள். உதாசீனப்படுத்தியதால் உன்னதமான போக்குவரத்து தடம் உபயோகம் இல்லாமல் கிடைக்கிறது. அது மட்டுமல்ல  நமது சுய நலப் போக்கினால், அந்த அற்புதமான நீர்வழிப் போக்குவரத்தை, நோய்களை உற்பத்தி செய்யும் நாசி பொறுக்க முடியாத நாற்றக் கால்வாய்களாக மாற்றி விட்டோம்.


மூன்று இறந்துபோன ஆறுகள்  

அதனால்தான் இன்று அரசே அறிவித்துள்ளது இதனை இறந்துபோன ஆறு என்று. அப்படி என்றால் இந்த கால்வாய் நீரில் மீன் உட்பட எந்த ஒரு உயிரினமும் உயிர் வாழ முடியாது. அந்த அளவுக்கு அந்த ஆற்றின் நீர் மாசு அடைந்திருக்கும் என்று அர்த்தம். கூவம் மற்றும் அடையார் ஆறுகளும்  இறந்த ஆறுகள் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமூக விழிப்புணர்வு வேண்டும்

இப்போதும் கூட இன்னும் கெட்டுவிடவில்லை இதனை சரி செய்ய முடியும் முன்பிருந்ததை விட மேம்பட்ட நிலையில் பக்கிங்காம் கால்வாயை  பயன் தரும் கால்வாயாக மாற்ற முடியும்அரசு இதற்கு முற்பட வேண்டும் என்று பலர் சொன்னாலும் கூட சமூக அளவிலான விழிப்புணர்வு சுத்தமாக இல்லை. இது நம்முடைய வேலை இல்லை என்ற மனப்பன்மைதான் பரவலாக உள்ளது.


“நான் என்ன எம் எல் ஏவா ? 

“நான் என்ன எம் எல் ஏவா ? எம்பியா ? மந்திரியா என்றுதான் பரவலாக்க் கேட்கிறார்கள். நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன மனப்பான்மைதான் பரவலாக உள்ளது. என் வாசலில் மட்டும் சுத்தம் இருந்தால் போதும் ! என்ன மனப்பான்மை இது ?

 

அற்புதமான நீர்வழி தயார்

சுமார் 100 மீட்டர் அகலமும் பத்து மீட்டர் ஆழமும் உடையதாக இந்த கால்வாயை மாற்றிவிட்டால் அற்புதமான நீர்வழி தயார். ஆந்திர முதல் மரக்காணம் வரை, பழைய படிக்கும் பலபடி மேலாக சரக்குகளை ஏற்றலாம் இறக்கலாம்.

 

 நீர்க்கொடை தரும் உப்பங்கழிகள் (BACKWATERING FROM ESTUARIES)

பேராசை என்று கூட சொல்லுங்கள் பரவாயில்லை. இந்த பக்கிங்காம் கால்வாயினை சீரமைக்க முடியும், காக்கிநாடா முதல் கன்னியாகுமரி வரை இதை நீட்டிக்க முடியும்அப்படி ஒரு ஏற்பாட்டினை செய்தால் கடலோர உப்பங்கழிகள் அனைத்தும் இந்த பக்கிங்காம் கால்வாய்க்கு நீர்க் கொடை செய்யும். வெள்ளம் வத்தம் (HIGH TIDE & LOW TIDE) உதவியாக இருக்கும்.

 

முட்டுக்காடு திட்டத்திற்கு முட்டுக்கட்டை (PROJECT  MUTTUKKADU)

கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து முட்டுக்காடு வரை பக்கிங் கால்வாயை சீரமைக்க முடிவு செய்தார்கள். ஆனால் அது முன்னெடுக்கப்படாமல் அதற்கு யாரோ புண்ணியவான்கள் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள். நாட்டில் சிலர் இதற்கென்றே அலைந்து கொண்டிருக்கிறார்கள் தங்கள்  நீளமான நாவை தொங்கவிட்டபடி.

 

ஸ்டீஃபன் பாப்போம் யோசனை (STEPHEN POPHAM) 

ஒரு செயற்கையான ஆற்றினை சென்னையிலிருந்து எண்ணூர் வரை உருவாக்கும் யோசனையை முதலாவதாக சொன்னவர் ஸ்டீஃபன் பாப்போம். என்பவர். 1782 ஆம் ஆண்டு தனது கருத்தினை சொன்னார் இவர் ஒரு பிரிட்டீஷ் அதிகாரிஎண்ணூரிலிருந்து சென்னைக்கு விறகுகள் கொண்டுவர சுலபமாக இருக்கும், போக்குவரத்து செலவு குறையும் என்பதுதான் ஸ்டீஃபன் அவர்களுடைய கருத்தாக இருந்தது.  

 

கவர்னர் எட்வர்ட் கிளைவ் (GOVERNOR EDWARD CLIVE)

ஆனால் அவருடைய ஆலோசனைக்கு 20 ஆண்டுகள் வரை உயிர் இருந்தது. அப்போது பிரிட்டிஷ் அரசில் எட்வர்ட் கிளைவ் என்பவர் கவர்னராக இருந்தார். அவர்தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார். ஆலோசனை இருந்தால் மட்டும் போதாது, அதனை எடுத்து செய்ய மனம் வேண்டும், பணம் வேண்டும். அந்த இரண்டும் கிளைவ்'விடம் இருந்தது. 

 

சென்னையில் இருந்து எண்ணூர் வரை ஒரு நீர் வழியை உருவாக்கித் தர விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பொது விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

 

ஜான் லுட்விக் ஹீஃப்கி (JOHN LUDWIK HEEFKI )

ஜான் லுட்விக் ஹீஃப்கி என்பவர் நான் செய்ய தயார் என்று முன் வந்தார். அது நடந்தது 1802 ஆம் ஆண்டு. அவருக்கு கிளைவ் அனுமதி கொடுத்தார். ஒரே ஆண்டுதான், அந்த வேலையை அவர் செய்து முடித்தார். எண்ணூர்  முதல் பேசின் பிரிட்ஜ் வரை கால்வாய் இப்போது தயார்.

 

ஆரணி ஆறு, கட்டளை ஆறு, ஓட்டேரி, கூவம் ஆறு, அடையார் ஆறு மற்றும் பாலாறு ஆகிய ஆறுகளுடன் சேரும்படியாக இந்த பக்கிங்காம் கால்வாயை அமைத்துள்ளார்கள்.

 

திட்டத்தை என்னிடம் கொடுங்கள், நான் செய்து தருகிறேன் என்று ஹீஃப்கி மாதிரி யாராவது ஒருத்தர் முன்வர வேண்டும். ஆனால் லார்ட் கிளைவ் மாதிரி யாராவது ஒருத்தர் அதற்கு அனுமதியும் தர வேண்டும். எதற்கா ? பக்கிங்காம் காலவாய்க்கு மீண்டும் உயிர் கொடுக்கத்தான். 

இந்த பூனைக்கு யாராவது ஒருத்தர் ஹீஃப்கி மாதிரி மணி கட்ட வேண்டும் !

Dear brothers, Please write your comments. gsbahavan@gmail.com.

Gnanasuria Bahavan Devaraj


 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...