பரவனாறு படுகை |
நெய்வேலி
சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சேமகோட்டை, ராகவன் குப்பம், கோவிலாங்குளம் ஆகிய பகுதிகள் மற்றும் நெய்வேலி
நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் இருந்தும் வடியும் நீர்தான் பரவனாறு எனும் ஆறாக ஓடுகிறது.
சிறிய ஆற்றுப்படுகை (AYACUT AREA)
ஓர் ஆராய்ச்சி நிலைய புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த ஆறுகள் 34, ஆற்றுப்படுகைகள் என்பது 17, இவற்றில் பரவனாறு படுகையும் ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப் படுகைகளில் இதுதான் இரண்டாம் நிலையில் உள்ள மிக சிறிய ஆற்றப்படுகை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பறக்கும் சாம்பலும் பாதரசமும் (FLY ASH & MERCURY)
நிலக்கரிகளை கழுவிய வடிவாகும் வெளியாகும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளின் பறக்கும் சாம்பல் (FLY ASH) ஆகியவை ஆற்றுநீரில் கலந்துள்ளது மட்டுமல்ல, மேலும் இதில் பாதரசத்தின் அளவு கூடுதலாக உள்ளது என்று கண்டறிந்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பரவனாறு ஆறு, தெர்மல் பவர் பிளாண்ட், மற்றும் அணுசக்தி உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் பறக்கும் சாம்பல், கழிவுநீர் ஆகியவை, பரவனாற்று நீரை வெகுவாக மாசு படுத்தி உள்ளது.
அதிக மழை பெறும் பகுதி (HIGH RAINFALL AREA)
நெய்வேலி டவுன்ஷிப், குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், கம்மாபுரம், வடலூர், கருங்குழி, காட்டுக்கூடலூர், ஆலயமாதேவி, எளம்பூர், குள்ளஞ்சாவடி, மற்றும் புவனகிரி ஆகிய ஊர்கள் பரவலாக ஆற்றின் படுகையில் அமைந்துள்ளன. இந்த படுகைப்பகுதி அதிகமான மழை பெறும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது இங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழையின் அளவு 1197.7 மில்லி மீட்டர்.
பரவனாறு மற்றும் உப்பனாறு (PARAVANARU & UPPANARU)
இந்த
ஆற்றுப்படைகையின் மேல் பகுதி பரவனாறு ஆற்றிலும் கீழ்ப் பகுதி உப்பனாற்றிலும் வடிகிறது. பரவஇன் படுகைப் பரப்பு 435.01 ச.கி.மீ., உப்பனாற்றின் படுகைப்பரப்பு 437.32 சதுர கிலோமீட்டர், இதன் மொத்த பரப்பளவு 872.34 ச.கி.மீ.
நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் சுரங்கங்கள் மூன்றும் இந்த ஆற்றுப் படுகைக்கு உள்ளாகவே அமைந்துள்ளன. இந்த சுரங்கங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் பெருமாள்ஏரி, மற்றும் வாலாஜா ஏரியில் சேகரிக்கப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
வாலாஜா மற்றும் பெருமாள் ஏரி (WALAJA & PERUMAL LAKES)
சுரங்கத்தில்
இருந்து வரும் தண்ணீர் என்பதால் இது நிலத்தையோ பயிர்களையோ பாதிப்பதில்லை என்றும்
கண்டறிந்துள்ளார்கள். பரவனாற்றின் படுகைப் பரப்பில் மொத்தம் 37 ஏரிகள் உள்ளன.
இந்தப் பகுதி ஏரிகள் மற்றும் குளங்களுக்கு எல்லாம் நெய்வேலி சுரங்க நீர் தான் வினியோகம் ஆகிறது. வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிக்கு வருஷம் 365 நாளும் தருவது, இந்த சுரங்க தண்ணீர் தான்.
பொங்குநீர்ஊற்று (ARTESIAN AQUFERS)
நெய்வேலி பகுதியில்
இருப்பது ஆர்ட்டீசியன் அக்குஃபர் என்கிறார்கள். அப்படி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். நெய்வேலி சுரங்கங்களில் இருந்து இதன் மூலம் தான் அதிக தண்ணீர் கிடைக்கிறது.
பூமிக்கு அடியில்
இருக்கும் நீர் அழுத்தத்தின் விளைவாக ஒரு சிறு துளை இருந்தாலும் அதன் மூலம் பீச்சி
அடிப்பது தான் ஆர்ட்சியன் ஊற்று என்கிறார்கள். இதனை பொங்குநீர்ஊற்று.
ஆர்ட்டீசியன் ஊற்றுக்கள்பற்றி கூடுதலாக தகவல் ஏதும் உங்களுக்குத் தெரியுமா ?
GNANASURIA BAHAVAN D
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment