Wednesday, April 19, 2023

CHINGLEPUT VILLUPURAM RIVER ONGUR - ஓங்கூர் ஆறு


ONGUR RIVER WATERSHED AREA


ONGUR RIVER

ஓங்கூர் ஆறு

ஓங்கூர் ஆறு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓடும் சிற்றாறு மொத்தம் 1480.08 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள ஆற்றுப்படுகையைக் கொண்டது.

  

வந்தவாசி மரக்காணம்

வந்தவாசியின் தெற்கே உற்பத்தியாகி 50 கிலோ மீட்டர் தூரம் ஓடும் இந்த ஆறு மரக்காணம் அருகில் வங்கக் கடலில் (BAY OF BENGAL)சங்கமம் ஆகிறது.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 கிராமங்களில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது இந்த ஓங்கூர் ஆறு


தடுப்பணை வேண்டும் 

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை பிரிக்கும் எல்லையாக உள்ள இந்த ஆற்றில் மருந்துக்கு கூட ஒரு தடுப்பணை (CHECK-DAM) இல்லை. அதனால் 2022 ஆம் ஆண்டு ஒரு தடுப்பணை கட்ட முடிவு செய்தார்கள். முடிவு செய்து அதனை கட்டவும் தொடங்கினார்கள்.

 

வன்னியநல்லூர் ராயநல்லூர்

வன்னியநல்லூர் மற்றும் ராயநல்லூர் கிராமங்களுக்கு இடையே தொடங்கிய இந்த தடுப்பணை கட்டுமான பணி அனேகமாய் முடிந்திருக்கும் என்று சொல்கிறார்கள். இதற்காக 4.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின. 

ஓங்கூர் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் சூனாம்பேடு, காணிமேடு, குண்டுஅகரம், நல்லம்பாக்கம், ராயல் நல்லூர், நகர், ஆவணிப்பூர், பந்தாடு, மண்டகப்பட்டு, புதுப்பேட்டை, ஆகிய சுற்றுவட்டார கிராமங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள்

இதன் படுகைப் பரப்பில் (RIVER BASIN) மொத்தம் 129 ஏரிகள் உள்ளன இதில் 170 சிஸ்டம் ஏரிகள், நான்-சிஸ்டம் ஏரிகள் 7 (SYSTEM & NON SYSTEM LAKES) என்று சொல்லுகிறார்கள். 


சாரம் ஆறு மற்றும் நரி ஆறு

ஓங்குர் ஆறு விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வட்டாரத்தில் உருவாகிறது. இரண்டு சிறு ஆறுகள் (TRIBUTORIES) சேர்ந்து ஓங்கூர்ஆறு உருவாகிறது. அவை  சாரம்ஆறு,  மற்றும் நரி ஆறுஆறு அல்லது பெரியார் ஓடை அல்லது முருங்கை ஓடை. இந்த இரண்டு ஆறுகள் அல்லது ஓடைகள் ஓங்கூர் கிராமத்தில் ஒன்று சேர்ந்து ஓங்கூர் ஆறாக புறப்படுகிறது.


நெடுங்கல் ஆறு 

அதன் பின்னர் நெடுங்கல் ஓடை எனும் உள்ளூர் ஆறு ஓங்கூர் ஆற்றுடன் சேர்கிறது. நெடுங்கல் ஓடை மதுராந்தகம் தாலுகாவில் வெளியம்பாக்கம் என்ற இடத்தில் ஓங்கூர் ஆற்றுடன் சேர்கிறது. பின்னர் தென்கிழக்காக ஓடி இடையன் திட்டு என்ற இடத்தை அடைகிறது. அங்கு உள்ள கருவேளி ஏரியை (KARUVELI LAKE) சென்றடைகிறது பின்னர் வங்க கடலில் சங்கமம் ஆகிறது. 

இந்த ஓங்கூர் ஆறு சங்கமம் ஆகும் கழுவேலி ஏரியை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா அது ஒரு முக்கியமான ஏரி தெரியுமா உங்களுக்கு 

பூமி ஞானசூரியன், எனது மின்ன்ஞ்சல்:gsbahavan@gmail.com

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...