Sunday, April 9, 2023

CHENNAI RIVER KORTALAIYAAR சென்னை மாநகரின் கொற்றலையார் ஆறு

கொசத்தலையார்
வரைபடம்

சென்னை மாவட்ட்த்தில் ஓடும் மூன்று ஆறுகளில் ஒன்று இது. இதனை கொசத்தலை ஆறு, குயத்தலை ஆறு, கொசஸ்தலை ஆறு, குறல்தலை ஆறு, குறத்தி ஆறு என்று பல பெயர்களில் சொல்லுகிறார்கள். ஆனால் இன்றையப் பெயர் கொற்றலை அல்லது கொசஸ்தலை ஆறு.

ஆந்திரமாநிலம் கிருஷ்ணாபுரம் (ANDHRA KRISHNAPURAM ORIGIN)

கொற்றலை ஆறு. ஆந்திரமாநிலம் கிருஷ்ணாபுரம் தொடங்கி  காவேரிப்பக்கம் வழியாக 138 கிலோமீட்டர் தூரம் ஓடி பூண்டி நீர்த்தேக்கம் அடைகிறது, சென்னை எண்ணூர் அருகே வங்கக் கடலில் சங்கமாகிறது. 

நகரிஆறு முக்கியத் துணையாறு (TRIBUTARY RIVER NAGARI)

நகரிஆறு எனும் கொற்றலையார் ஆற்றின் முக்கியத் துணையாறு.   நகரி ஆறு ஆந்திரப்பிரதேசத்தில் சித்தூரில் உற்பத்தி ஆகி பூண்டி நீர்த்தேக்கத்தில் கொற்றலையாற்றுடன் சேர்கிறது.

கிளை ஆறு கூவம் (COOUM BRANCH RIVER)

பழைய வேலூர், சித்தூர், மாவட்டங்களில் கொற்றலையாற்றின் நீர்பிடிப்புப் பகுதி பரவியுள்ளது. இதன் கிளை நதிதான் கேசவரம் அணைக்கட்டில் கூவம் நதியாக சென்னை நகரில் நுழைகிறது.

எண்ணூர் முகத்துவாரம் (ENNORE ESTUARY)

கொற்றலைஆறு திருவள்ளூர் மாவட்டம் கடந்து சென்னைப் பெருநகரில், 16 கிலோமீட்டர் பயணம் செய்து  எண்ணூர் முகத்துவாரத்தில் வங்கக்கடலில் சங்கமமாகிறது.

தாமரைப்பக்கம் தடுப்பணைகள் (THAMARAIPPAKKAM CHECKDAMS)

இந்த ஆற்றின் குறுக்கே ஒன்பதுத் தடுப்பணைகள் உள்ளன, அவற்றுள் தாமரப்பாக்கம் மற்றும் வள்ளூர் கிராமங்களில் இருக்கும் தடுப்பணைகள் முக்கியமானவை, இவற்றின் பாசனம் விவசாயத்திற்கு பயன்படுகிறது.

கொரட்டூர் அணைக்கட்டு

திருவள்ளூர் மாவட்டத்தில், ஜமீன் கொரட்டூர் பகுதியில் 1876 ம் ஆண்டு கட்டியிருக்கும் கொரட்டூர் அணைக்கட்டு சரித்திரப் பிரசித்தி பெற்றது. இதுதான் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்தைக் கட்டுப்படுத்துவது. மாசுப்படாத நீரோட்டம் உள்ள கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணை இது என்றும் சொல்லுகிறார்கள்.

கொற்றலையார் ஆறு ஒரு காலத்தில் பாலாற்றின் துணை நதியாக இருந்து இருக்கும் என்றும் சொல்லுகிறார்கள். இதுபற்றி நமது பழந்தமிழ் இலக்கியம் கலிங்கத்துப்பரணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலிங்கத்துப்பரணி பாடல் (ANCIENT TAMIL LITERATURE)

கலிங்கத்துப்பரணி பாடலில் பாலாறு, குசத்தலையாறு, முகரியாறு, பழவாறு, கொல்லியாறு, பெண்ணையாறு, வயலாறு, மண்ணாறு, பெயலாறு, பேராறு, கோதாவரி, மேலாறு, பம்பாஆறு, கோதமையாறு, என பதினான்கு ஆறுகளை பட்டியலிடுகிறார் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் ஜெயம்கொன்டார்.

இதுதான் அந்த கலிங்கத்துப்பரணி பாடல் (POEM OF KALINGATHUPARANI)

பாலாறு குசைத்தலை பொன் முகரி

பழவாறு படர்ந்தெழு கொல்லிஎனும்

நாலாறு மகன்று ஒரு பெண்ணை எனும்

நதியாறு கடந்து நடந்துடனே

வயலாறு புகுந்து மணி புனல்வாய்

மண்ணாறு வளங்கெழுகு குன்றியெனும்

பெயலாறு பரந்து நிறைந்துவரும் பேராறும்

இழந்தது பிற்படவே.

கோதாவரி நதிமேலாறொடு குளிர்பம்பா

நதியோடு சந்தப்பேர்

ஓதாவருநதி ஒரு கோதமையுடன் ஒலிநீர்

மலிதுறை பிறகாக..

(கலிங்கத்துப்பரணிபாடல் 56 – 58)

கருணாகரத் தொண்டைமான்,

(கருணாகரத் தொண்டைமான், காஞ்சியை விட்டு போர்முரசு கொட்டி  கலிங்கம் செல்லும்போது அவன் பாலாறு, குசத்தலை, பொன்முகரி, பழவாறு, பெண்ணை என பல ஆறுகளை கடந்து சென்றான் என்கிறது இந்த கலிங்கத்துப்பரணி பாடல்.) 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் டைரக்டர் பாலச்சந்தர் படபிடிப்புக்காக கொசஸ்தலை ஆற்றில் என்னை குதிக்கச் சொன்னார். அப்போது இந்த ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடியது. இப்போது சேறும் சகதியுமாக மாறிவிட்டது.” பிரபலமான  நடிகர் கமலஹாசன் சொன்ன கருத்து இது. 

உலகநாயகன் கமலஹாசன் எந்தப் படத்தில் கொற்றலை ஆற்றில் குதித்தார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா ?

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

  

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...