Thursday, April 13, 2023

BUCKINGHAM CANAL A FAMINE RELIEF - பஞ்சகாலத்தில் வெட்டிய பக்கிங்காம் கால்வாய்

 

BUCKINGHAM CANAL 

சென்னைப் பெரும் பஞ்சம் 1876-78
 A FAMINE RELIEF 

பஞ்சகாலத்தில் வெட்டிய  

பக்கிங்காம் 

கால்வாய்

தண்டையார்பேட்டையில் உருவாக்கி தெற்கு நோக்கி பயணித்து கூவத்துடன் சேரும் எளம்பூர்ஆறு மற்றும் திருவொற்றியூரில் பிறந்து எண்ணூர் ஏரியில் சேரும் திருவொற்றியூர் ஆற்றையும் சேர்த்து உருவாக்க வேண்டும் என்றுதான் பாப்பம் அவர்கள் திட்டமிட்டார்.


பாப்பம் - எட்வர்டு கிளைவ் - ஹீஃப்கி 

பாப்பம் அவர்களுக்கு அடுத்தபடியாக இதற்கு காரணமாக இருந்தவர் எட்வர்டு கிளைவ் .அவரால் தான்  ஹீஃப்கி ஒரு திட்டத்துடன் வந்து கிளைவ்விடம் முதல் கட்ட அனுமதி வாங்கினார். ஆக இந்த மூன்று பெயர்களும் பக்கிங்காம் ஆற்றுக்கு வேண்டிய பெயர்கள்.

 

இது எண்ணூர் சத்திரத்திலிருந்து சென்னை பேசின்பிரிட்ஜ் வரை 11 மைல் கால்வாய் வெட்டுவதற்கான அனுமதி. தனைத் தொடர்ந்து காட்டுப்பள்ளி தீவினை தாண்டி பழவேற்காடு வரை இன்னும் 14 மைல் கூடுதலாக இந்த கால்வாயை வெட்டவும் அனுமதி பெற்றார் ஹீஃப்கி. 

  

எண்ணூர் - பழவேற்காடு - படகு சவாரி

அனுமதி பெற்றது மட்டுமல்ல, ஐந்தே ஆண்டுகளில் 25 மைல் வெட்டியும் முடித்தார். இதுதான் பக்கிங்காம் கால்வாய் அமைவதற்கான முதல் கட்ட வேலை. இதனை அனுமதித்தவர் எட்வர்ட் கிளைவ். கால்வாயை வெட்டி முடித்தவர் ஜான் லூர்து ஹீஃப்கி. இப்போது யார் வேண்டுமானாலும் எண்ணூரில் இருந்து காட்டுப்பள்ளி தீவினை கடந்து பழவேற்காடு வரை படகு சவாரி செய்யலாம்.

 

கவர்னர் பக்கிங்காம்

இந்த கால்வாய்க்கு கோச்சிரையின் கால்வாய், கிளைவ் கால்வாய், காட்டுப்பள்ளி கால்வாய், ஈஸ்ட் கோஸ்ட் கெனால், என மாறி மாறி பெயர் வைத்தார்கள்.


அனாலும், கவர்னர் பக்கிங்காம் பெயர்தான் இன்று வரை நீடித்துள்ளது. விஜயவாடாவில் இருந்து சென்னை வரை திட்டமிட்டபடி பக்கிங்காம் கால்வாயை வெட்டி முடித்தார்கள்.

 

1806 முதல் 1886 வரை

இவை எல்லாமே 1882 ஆம் ஆண்டு வாக்கில் நிறைவு பெற்றது. அதற்குப் பிறகு சென்னை அடையார் ஆற்றில் இருந்து மரக்காணம் வரை ஒரு கால்வாயை அரசு வெட்டியது. அதனை சவுத் கெனால் என்று பெயரிட்டார்கள்.

 

அதன் பின்னர் தான் ஈஸ்ட் கோஸ்ட் கால்வாயை கூவம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் எழம்பூர் ஆற்றுடன் இணைத்தார்கள்.

 

சென்னை பெரும் பஞ்சம்

1876 ஆம் ஆண்டு வாக்கில் சென்னை பெரும்பஞ்சம் வந்தது. அந்த சமயம் பக்கிங்காம் என்ற வெள்ளைக்காரர் கவர்னராக இருந்தார். அந்த பஞ்சம் 1876 முதல் 1878 வரை மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது.

 

இந்த பெரும் பஞ்ச காலத்தில் மூன்று ஆண்டுகளில் பசியும் பட்டினியாலும் இறந்து போனவர்கள் மட்டும்  9.6 மில்லியன் பேர். இன்றைய சமூகத்திற்கு பஞ்சம் பசி பட்டினி என்பதற்கு அர்த்தம் தெரியாது. அதனால்தான் விவசாயம் பற்றியும் விவசாயிகள் பற்றியும் நாம் அதிகம் யோசிப்பதில்லை.

அந்த பஞ்சத்தின் கொடுமை பற்றிய கும்மிப் பாடல் இங்கே தந்துள்ளேன், படித்துப் பாருங்கள், கண்கள் குளமாகும். 

வீட்டினில் தான்யமும் 

இல்லாமல் ஒன்றை

விற்கவும் கையில் இல்லாமல்

கடன் கேட்ட  இடத்தில்

கிடைக்காமல்

சிலர் கெஞ்சி

இரக்கிறார் பாருங்கடி

 

எறும்பு வளைகளை வெட்டி

அதனில் இருக்கும்

தானியம்தான் எடுத்து

முறத்தால் கொழித்து

குத்திச் சமைத்து

உண்ணுகிறார் சிலர்

பாருங்கடி..


குடிக்கத் தண்ணீரும் இல்லாமல்

பணம் கொண்டு திரிந்தாலும்

கிட்டாமல்

இடிக்கு பயந்த பாம்புகள் போல

ஏங்குகிறார் சிலர் கேளுங்கடி..


சென்னை பெரும்பஞ்ச காலத்தில்,   நிவாரண உதவியாக, வேலைக்கு உணவு என்ற திட்டத்தை தொடங்கினார் கவர்னர் பக்கிங்காம் 


     LORD BUCKINGAM 
சவுத் கெனால் என்பதையும், கூவம் ஆற்றையும் இணைக்கும் படியாக வேலையை அவர்களுக்குக் கொடுத்து அதற்கு கூலியும் கொடுத்தார் பக்கிங்காம்.ரே ஆண்டில் இந்த கால்வாயை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வெட்டி, சவுத் கெனால் மற்றும் கூவம் ற்றையும் இணைத்தார்கள் பஞ்ச காலத்து மக்கள்.


சென்னை பல்கலைக்கழகத்தின் பின்புறம் இருந்து கிரீன்வேஸ் எம்ஆர்பி ரயில்வே ஸ்டேஷன் வரை அமைந்தது. அவர்கள் வெட்டிய அந்த கால்வாய். லார்ட் பக்கிங்காம் பெயரில் அமைந்திருந்தாலும் அவர் ஏற்பாடு செய்து வெட்டியது வெறும் ஐந்து கிலோமீட்டர்தான்.

இதனை தாது  வருஷப் பஞ்சம் என்றும் சொல்லுவார்கள். 

நண்பர்களே ! இந்தப் பதிவுபற்றிய உங்கள் கருத்துக்களைப் மின் அஞ்சலில் பதிவு செய்யுங்கள். gsbahavan@gmail.com 



 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...