தமிழ்நாட்டில் சென்னையில் ஓடும் முக்கியமான மூன்று ஆறுகளில் ஒன்று இந்த பக்கிம் கால்வாய். ஆந்திர பிரதேசத்திலிருந்து தமிழ்நாடு வரையில் 796 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ள செயற்கையான அமைத்த ஆறு.
சர்வதேச ஆறு
அதுமட்டுமல்ல சர்வதேச அளவில் இது முக்கியமான ஆறு என்பது உங்களுக்கு தெரியுமா ? தோட்டத்து பச்சிலையின் மகத்துவம் தெரியாது என்பார்கள். அப்படித்தான் இதுவும்.
உலக அளவில் மிக நீளமான செயற்கை ஆறுகளில் பக்கிங்காம் ஆறு நான்காவது நீளமான ஆறு என்பது நமக்குத் தெரியுமா ?
உலகின் மிக நீளமான செயற்கை ஆறு சைனாவில் இருக்கும் கிராண்ட் கெனால், அதன் நீளம் 1776 கி.மீ. இரண்டாவது நீளமான செயற்கை ஆறு ரஷ்யாவின் காரகம்கெனால், இதன் நீளம் 1375 கி.மீ. மூன்றாவது மிக நீளமான ஆறு ரஷ்யாவின் சைமாகெனால், இதன் நீளம் 814 கி.மீ.
உலகின் நான்காவது மிக நீளமான செயற்கை ஆறு, நம்ம ஊர் பக்கிங்காம் கெனால், இதன் நீளம் 765 கி.மீ.
வெள்ளைக்காரர்கள் வெட்டியது
வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட செயற்கையான கால்வாய் இது சாலை வசதியும் ரயில் வசதியும் இல்லாத அந்த காலத்தில் பக்கிங்காம் கால்வாய் மிக முக்கியமான போக்குவரத்து வசதியாக இருந்தது.
பக்கிங்காம் கால்வாய் மொத்த நீளம் 796 கிலோ மீட்டர் தென்னிந்தியாவில் சோழ மண்டல கடற்கரைக்கு இணையாக வெட்டப்பட்டது இது.
உப்பங்கழிகளை இணைக்கிறது
சென்னை துறைமுகத்தின் அருகமைந்த வங்க கடலின் உப்பங்கழிகளை இணைக்கும் படியாக இந்த கால்வாயை அமைத்துள்ளார்கள்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் முக்கியமான நீர்வழி போக்குவரத்தாக அமைந்தது, இந்த பக்கிங்காம் கால்வாய்.
விஜயவாடா - விழுப்புரம்
1806 ஆம் ஆண்டில் படகு போக்குவரத்திற்காக நீர் வழித்தடமாக இதனை வெட்டினார்கள். அதுவும் சென்னை முதல் எண்ணூர் வரையில், எட்டு கிலோமீட்டர் நீளத்திற்கு முதல் தவணையாக வெட்டப்பட்டது. பின்னர் அது விஜயவாடாவையும் விழுப்புரத்தையும் இணைத்தது..
1886 ஆம் ஆண்டு சென்னை பெரும்பஞ்சத்தின் போது அதனை எதிர்கொள்ள மக்களுக்கு கூலி தந்து மேலும் அந்த கால்வாயை ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு நீட்டித்தார்கள். அத்துடன் அந்தப் பணி நிறைவு பெற்றது.
உங்கள் கருத்து ?
Dear friends, you know this is the only blog having so many categories like an encyclopedia, From today onwards I will post daily at least one post to meet you all. I love seeing your comments, so I can give you very useful and much-improved stuff.
Gnanasuria Bahavan Devaraj
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment