Sunday, April 30, 2023

TIRUNELVELI DISTRICT AHUTHAKANNIYAR RIVER திருநெல்வேலி மாவட்ட அழுத கண்ணியார் ஆறு

 


அழுத கண்ணியார் ஆறு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு சொந்தமான ஆறு. சிற்றார் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்று. இது தாமிரபரணி ஆற்றுடன் திருநெல்வேலியில் சேருகிறது.

அழுதகண்ணியாறு மேற்கு தொடர்ச்சி மலையின் (WESTERN GHATS) கிழக்கு பகுதியில் பிறக்கிறது. பழைய குற்றாலம் நீர்வீழ்ச்சி (OLD COURTALLAM FALLS)இந்த ஆற்றில் தான் உள்ளது. புதிய நீர்வீழ்ச்சியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இந்த ஆற்று நீர் மருத்துவ குணங்கள் (MEDICINAL PROPERTIES)நிறைந்தது, பல நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது என்றும் சொல்லுகிறார்கள்.

அழுதகண்ணியார் பிறக்கும் இடத்தில் இருந்து இந்த ஆறு 10 கிலோமீட்டர் ஓடுகிறது பின்னர் கடப்பகொத்தி என்ற கிராமத்தில் இந்த ஆறு சிற்றாருடன் சேர்கிறது.

இந்த ஆற்றுக்கு ஏன் அழுகை கண்ணியார் ஆறு என்று பெயர் வைத்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ?

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...