Wednesday, January 4, 2023

WILLIAM EWART GLADSTONE READ 25000 BOOKS - 25 ஆயிரம் புத்தகம் படித்தவர்


25 ஆயிரம் புத்தகம்

படித்தவர்

1.உலகிலேயே அதிகமான புத்தகங்களைப் படித்தவர் வில்லியம் ஈவார்ட் கிளாட்ஸ்டோன் என்பவர்.

2.கிளாட்ஸ்டோன் அவர்கள் தனது வாழ்நாளில் 25 ஆயிரம் புத்தகங்களை விரும்பிப் படித்தவர்.

3.தனக்கு சொந்தமான 32,000 புத்தகங்களுடன் தனது சொந்த வீட்டையே, நூலகமாக மாற்றியவர் வில்லியம் கிளாட்ஸ்டோன் அவர்கள்.

4.வேல்ஸ் நாட்டில் ஹாவர்ட்டன் கேசில் என்ற அவருடைய வீடு, தற்போது "கிளாட்ஸ்டோன் நூலகம்" என்ற பெயரில் பொது நூலகமாக இயங்குகிறது. 

5.வில்லியம் கிளாட்ஸ்டோன் என்பவர் சாதாரண மனிதர் அல்ல. கிரேட் பிரிட்டனின் பிரதமராக இருந்தவர். அது மட்டுமல்ல தொடர்ந்து நான்கு முறை பிரதமராக இருந்தவர்.  

 6.தற்போது ஹாவர்டன்  சுற்றுலா நகரமாக விளங்குகிறது. அதற்குக் காரணம் கிளாட்ஸ்டோன் அவர்களின் பொது நூலகம்.  

7.யுனைடெட் கிங்டம்'ல் இருக்கும் நூலகங்களிலேயே "ரெசிடென்சியல் லைப்ரரி" அதாவது வசிப்பிட நூலகம் (Residential Library) இது ஒன்றுதான். 

8.இந்த வசிப்பிட நூலகத்தில், இரண்டு பெரிய அறைகளிலும், ஏழு சிறிய அறைகளிலும், புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ளன. 

அருமை நண்பர்களே ஜனவரி 6 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 46வது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனம், ஒய் எம் சி ஏ உடற் கல்வியியல் கல்லூரி மைதானத்தில்  நடைபெறுகிறது. 

வரும் 12ஆம் தேதி மாலை 3 மணி அளவில் இந்த புத்தகக் கண்காட்சியில், "பூமியை யோசி மரங்களை நேசி"எனும் எனது இரண்டாவது நூலை வெளியிட உள்ளேன்.

வாய்ப்புள்ள நண்பர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

நன்றி வணக்கம்

பூமி ஞானசூரியன்

 


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...