ஆண்குட்டிகளுக்கு வெண்ணை
பெண்குட்டிகளுக்கு சுண்ணாம்பு
ஆச்சரியம் ஆனால் உண்மை
UNBELEIVABLE FACTS
ON KANGARU’S MILK FEEDING HABITS
DESCRIMINATION BETWEEN MALE &
FEMALE
BY KANGARUS
(பொருள் புதிது! சுவை புதிது!)
ஆண்பிள்ளைக்குத்தான் தாய் அதிகம் கவனிக்கிறாள் என்பது காலம் காலமாய் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பிரச்சினை. பெண்கள் பெண்கள் மீதே சொல்லும் குற்றச்சாட்டு.
எனக்கு இப்போது 74 வயது, என் அக்காவுக்கு 77 இருக்கும், இன்றும்கூட என் அவர் இந்த குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே பிரச்சினை சிவப்பு கங்காருக்களின் குடும்பத்திலும் பெரிய பிரச்சினையாக ஓடுகிறது.
தெரியுமா உங்களுக்கு, சிவப்பு கங்காருக்கள் ஆண்க்குட்டிகளை கவனிக்கும் அளவுக்கு பெண்குட்டிகளை கவனிப்பது கிடையாது.
கங்காருக்களின் பெண்குட்டிகள் இது நியாமா ? அடுக்குமா ? என்று நியாயம் கேட்கின்றன. இதைப்படிக்கும் பெண்கள் கண்டிப்பாய் கேட்பார்கள் நீயுமா கங்காரு ? என்று.
ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்லுகின்றன. இதைப் படித்துப்பாருங்கள்.
வித்தியாசமான புதிய செய்திகளை தெரிந்துகொள்ளுவதில் நீங்கள் ஆர்வமுள்ளவர் என்றால் உங்களுக்கு இந்தப் பதிவு கண்டிப்பாய் பிடிக்கும். படியுங்கள்.
கங்காருவும் ஈமு கோழியும், ஆஸ்திரேலியாவின் அடையாளங்கள். கங்காருவில் மொத்தம் 40 இனங்கள் உண்டு. இவற்றில் “ரெட்கங்காரு” என்பவை நம்மைவிட உயரமாக இருக்கும், உடல் எடை 85 கிலோவரை இருக்கும்.
உலகத்தில் இருக்கும் உயிரினங்களிலேயே, தன் குட்டிக்கு வித்தியாசமாக பால் கொடுக்கும் பிராணி இது ஒன்றுதான்.
கங்காருக்கள் ஒரு சைவப்பிராணி. புல் பூண்டுதான் சாப்பிடும். குறைவாகத்தான் தண்ணீர் குடிக்கும். தண்ணீர் இல்லாமலே பல மாதங்கள் தாக்குப் பிடிக்கும்.
கங்காருக்கள் மட்டும்தான் ஒரே சமயத்தில் இரண்டு வகையான பாலைத் தன் குட்டிகளுக்குத் தருகின்றன.
ஒண்ணரை வருஷம் வளர்ந்த குட்டி ஒரு பால்காம்பில் பால் குடிக்கும். அதன் மடியில் வைத்திருக்கும் ஆறுமாதக்குட்டி இன்னொரு பால் காம்பில் குடிக்கும். இரண்டும் இரண்டு விதமான பாலை குடிக்கும், ஒரே சமயத்தில்.
இதைவிட ஆச்சரியமான செய்தியைச் சொல்லுகிறேன் கேளுங்கள்,
இளம் குட்டிகளுக்கு கொடுக்கும் பால் அடர்த்தி குறைவாக இருக்கும். வளர்ந்த குட்டிகளுக்கு தரும் பால் அடர்த்தி கூடுதலாக இருக்கும். காரணம் அதில் இருக்கும் திடப்பொருட்கள் (TOTAL MILK SOLIDS) 11% முதல் 26% வரை இருக்கும்.
இளம் குட்டிகளுக்கு கொடுக்கும் பால் சாதாரண மாவுப்பொருள் (CARBS) கொண்டதாக இருக்கும். சுலபமாக செரிமானம் ஆகக்கூடியதாக இருக்கும். வளர்ந்த குட்டிகளுக்கு கொடுக்கும் பாலில் மாவுப்பொருள் குறைவாக இருக்கும். இதன் பாலில் 2% முதல் 6.2% மாவுப்பொருட்கள் இருக்கும்.
இளம் குட்டிகளுக்கு தரும் பாலில் கொழுப்பும் புரதமும் கூடுதலாக இருக்கும். வளர்ந்த குட்டிகளுக்குக் கொடுக்கும் பாலில் கொழுப்பும் புரதமும் குறைவாக இருக்கும். புரதம் 5% முதல் 7% வரை இருக்கும். கொழுப்பு 3.9% முதல் 10.3% வரை இருக்கும்.
இன்னொன்று கங்காருக்களின் பால் ரொம்பவும் இனிப்பானது. இதில் இருக்கும் சர்க்கரை 14%. தாய்ப்பாலை விடை தோராயமாக இரண்டு மடங்கு இனிப்பு தன்மை உடையது.
கங்காருக்கள் கருவுற்ற 36 நாட்களில் குட்டி போடும். பிறந்த குட்டிகளின் எடை ஒரு கிராமைவிட குறைவாக இருக்கும். குட்டிகள் 18 மாதம் வரை பால் குடிக்கும்.
கங்காருக்களுக்கு இரண்டு பால் காம்புகள் இருக்கும், அவை இரண்டும் குட்டிகளுக்கு வசதியாக, இரண்டும் அதன் வயிற்றுப் பையில் இருக்கும்
டம்மார் வல்லபிகள் மற்றும் ஈஸ்டெர்ன் கிரே கங்காருக்கள் (TAMMAR WALLABIES & EASTERN GREY KANGARUS) எனும் இரண்டு இனங்கள், ஆண் குட்டிகளுக்கு சத்தான பாலையும், சத்து குறைவான பாலை பெண்குட்டிகளுக்கும் தருகின்றன. இது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒரு கண்ணில் வெண்ணை
! ஒரு கண்ணில் சுண்ணாம்பா ?
கங்காரு நீயுமா இப்படி ?
இந்த செய்திகளில் உங்களுக்கு பிடித்தமான செய்தி எது என்று சொல்லுங்க
உங்களை மாதிரியே புதிய செய்திகளை தெரிந்துகொள்ளுவதில் ஆர்வமுள்ள
உங்கள் நண்பர்களுக்கு இதனைப் படிக்கப் பரிந்துரையுங்கள்,
நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment