மூலிகைச்செடி
காரை
(Canthium
coromandelicum)
எட்டி மரம், இலவமரம், இன்டஞ்செடி மற்றும் காரைச்செடிகள் படர்ந்திருக்க பிணங்களைச் சுட்ட சுடுகாட்டில் சூழ்ந்துள்ள கள்ளிக்காட்டில் சிதறிக் கிடந்த குடல்களை பேய், நரி என கவ்விச் செல்ல, பிணங்கள் செறிந்துள்ள இடுகாட்டில் பறை போன்ற கண்களை உருட்டி விழிக்கும் பேய்கள் மத்தளம் கொட்டவும், பூதங்கள் பாடவும் திருவாலங்காட்டில் இறைவன் திருநடனம் புரிந்ததை காரைக்கால் அம்மையார் கவிதையில் காட்சிப் படுத்தியுள்ளார்.
காரைக்கால் அம்மையார் இறைவனின் திருவாலங்காட்டு திருநடனத்தை வியந்து பாடுவதாக அமைந்த கீழ்கண்ட பாடலில் காரை செடிகளைப் பற்றி எப்படி குறித்துள்ளார் என்று பாருங்கள்.
“எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர் கௌவப்பட்ட
பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட் பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே (பதிகம் 2:1) “
களா, குருவிப்பழம், குட்டிப்பலா, சங்கன் செடிகள் செடிகள் இவற்றோடு காரை முட்செடிகள் வளர்ந்து கிடப்பதை கிராமங்களில் பார்க்கலாம். காது மூக்குக் குத்த வேண்டும் என்றால் “கொண்டா ஒரு காரை முள் என்று இன்றும்கூட கிராமங்களில் குரல் கொடுப்பார்கள்.
காரைச்செடியின் பல மொழிப் பெயர்கள
தமிழ் பெயர்: நல்ல காரை, குதிரம், செங்காரை (Nallakarai, Kuthiram, Sengarai)
மராத்தி: கிர்மா, கட்பார் (Kirma, Kadbar)
மலையாளம்: கன்டன்கரா, நிரூரி, செருகரா (Kantankara, Niruri, Serukara)
தெலுங்கு:
சின்னபாலுசு, பாலுசு (Chinnabalusu, Balusu)
கன்னடா: கரிமுள்ளி, ஒல்லிபொடி)
ஒரியா: டுட்டிடி (Tutidi)
கொங்கனி: காயிலி (Kayili) சமஸ்கிருதம்: நாகபாலா (Nagabala)
பொது பொதுப்பெயர்: கோரமண்டல் கேன்தியம் ( Coramandel Cantheum)
தாவரவியல் குடும்பம்: ரூபியேசி (Rubiaceae
இது ரூபியேசி என்னும் காப்பி குடும்பத்தைச் சேர்ந்தது.
காரைச் செடிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியுள்ளன.
தமிழ்நாட்டில் பரவியிருக்கும் மாவட்டங்கள். கோயம்புத்தூர், திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் வேலுர்
ஆந்திர பிரதேசத்தில் அனந்தபூர், சித்தூர், கடப்பா, குண்டூர், கிருஷ்ணா, கர்னூல், நெல்லூர், பிரகாசம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜயநகரம், மற்றும் வெஸ்ட் கோதாவரி
தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா, கம்மம் மற்றும் மெக்பூப்நகர்.
கர்நாடக மாநிலத்தில் பல்லாரி, சாம்ராஜ்நகர், மற்றும் கோலார்.
கேரள மாநிலத்தில் காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், மற்றும் திருவனந்தபுரம்.
மகாராஷ்டிராவில் அக்கோலா மாவட்டம், ஒரிசா மாநிலத்தில் பரவியிருக்கும் மாவட்டங்கள் அங்குல், பலாசோர், பர்கார், பொலாங்கீர், பவுத், கட்டாக், தியோகார், தென்கானல், கஜபதி, கஞ்சம், கல்கண்டி, கந்தமால், கேந்திரப்பரா, கியோஞ்கார், குர்தா, கோராபுட், மல்காங்ரி, மயூர்பஞ்ச், பூரி, ராய்கடா, சம்பல்பூர், மற்றும் சுந்தர்பூர்.
சர்வதேச அளவில் இந்தியா, இந்தோசைனா, மலேசியா, ஸ்ரீலங்கா, ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.
பூக்கள் சிறியதாக இருக்கும் பசுமையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும்.
இதன் காய்கள் பசுமையாக இருக்கும் காய்கள் முதிரும் பொழுது மஞ்சள் நிறமாக மாறிவிடும் பழங்கள் ஒரு சென்டி மீட்டர் விட்டமுடையதாக இருக்கும்.
காரை செடிகள் ஏப்ரல் முதல் ஜனவரி வரை சுமார் 10 மாதங்கள் கழித்து கனிகளாக மாறும்.
காரை செடிகளில் இந்திய கிராமங்களில் மிகவும் சாதாரணமாக தரக்கூடிய ஒரு முள் செடி. கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் இதன் பழங்களை பறித்து சாப்பிடுவார்கள்.
காரை செடிகளிலிருந்து பழங்களை வைக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதன் முட்களிலிருந்து தப்பிக்க முடியாது. இதன் முட்கள் மிகவும் உறுதியானவை. நீளமானவை. கூர்மையானவை.
காரைச் செடிகள் அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மூலிகைச்செடிகள் என்று சொல்கிறார்.
காரை செடிகளின் இலைகளில் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம் காரை சிறைகளை கீரையை தொடர்ந்து சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது கணிசமாக என்று சொல்லுகிறார்கள்.
காரைச்செடி ஒரு முட்செடி என்று சொன்ன காலம் மாறிவட்டது. தற்போது அது ஒரு கீரை செடி. அதுவும் சத்துள்ள கீரைச் செடி. இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தச் செடி. உடல் உபாதைகளை நீக்கும் மூலிகைச் செடி என்று சொல்கிறார்கள்.
உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற டானிக்காக இதை பயன்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள்.
உயர் ரத்தஅழுத்தநோய் சர்க்கரைநோய், காய்ச்சல், செரியாமை, வயிற்றுப்போக்கு, கருத்தரிக்காமை, விந்துவில் உயிர் அணுக்கள் குறைவாக இருத்தல், போன்றவற்றையெல்லாம் குணப்படுத்த காரை செடியினை மூலிகையாகப் பயன்படுத்துகிறார்கள்.
காரை செடியின் வேர்களை மைய அரைத்து கூழாக்கி அதனை பாலுடன் சேர்த்து குடிக்க கொடுத்து பாம்புக் கடியை குணப்படுத்த முடியும் என்று சொல்லுகிறார்கள்.
குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த இதன் பழங்களை சாப்பபிடத் தருகிறார்கள்.
காரைச்செடியின் பட்டைகளை அரைத்து கூழாக்கி அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சேர்த்து அதனை தலையில் பற்றுப் போட எப்படிப்பட்ட கடுமையான தலைவலியையும் காணாமல் போகும்.
இது ஒரு புதர்ச்செடி. இதன் சிம்புகளில் எதிரெதிர் திசையில் முட்கள் இருக்கும். இந்த மக்கள் இலை கணுக்களுக்கு மேலாக அமைந்திருக்கும்.
சில சமயங்களில் இந்த சிம்புகள் முட்கள் இல்லாமலும் இருக்கும்.
இலைகளின் நீளமான வட்டவடிவில் இருக்கும். தொட்டுப்பார்த்தால் இலைகள் மெத்தென்று இருக்கும்.
பூக்கள், இலைக் கணுக்களில் தோன்றும். சிறியதாக இருக்கும் மஞ்சள் நிறமாக இருக்கும். ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பூக்கும்.
தாய்நாடு: இந்தியா
காரை செடி என்பது ஒரு ஒரு சிறு மரம் இது. சுமார் இரண்டடி உயரம் வளரும். இதன் இலைகளை ஆடுகள் விரும்பி சாப்பிடும். இதன் பழங்கள் முற்றிய நிலையில் தேன் நிறத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு இவை இனிப்பாக இருக்கும். பழங்கள் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்று சித்த மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் காரைச் செடிகள் அதிகம் இருந்ததால் தான் அதற்கு காரைக்குடி என்று பெயர் வந்தது. காரைச் செடிகளை நீக்கித்தான் மக்கள் வாழும் இடமாக மாற்றினார்கள். அதனால்தான் அதற்கு காரைக்குடி என்று பெயர் வந்தது.
நாம் மறந்துபோன செடிகளை எல்லாம், மருந்து கம்பெனிகள், அள்ளி எடுத்து அம்சமான மாத்திரைகளாக நமக்கு மாற்றித் தருகிறார்கள். நாம் மறுபடியும் இந்த மரங்களை செடிகளைத் தேட ஆரம்பித்துள்ளோம். அப்படி காரைச்செடியையும் நாம் கவனத்திற்கு வருமா என்று உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment