Wednesday, January 11, 2023

SECRET OF CLEOPATRA'S BEAUTY DONKEY'S MILK - கிளியோபாட்ராவின் அழகின் ரகசியம்

 

 கிளியோபாட்ராவின் 

        அழகின் ரகசியம்


         கழுதைப்பால் சோப்பு 

உலகில் உள்ள ஆறாயிரம் பாலூட்டிப் பிராணிகள் தனது குட்டிகளுக்காக  பாலை உற்பத்தி செய்கின்றன

இவற்றில் அதிக அளவில் நாம் பயன்படுத்துவது மாட்டுப்பால்தான். இவற்றில் சிலவகை பாலைத்தான் நாம் விலை கொடுத்து வாங்குகிறோம்

அதில் அதிக விலைக்குப் போவது கழுதைப்பால்தான். இன்றையப் பதிவில் அதுபற்றிய முக்கியமான 20 செய்திகாளைப் பார்க்கலாம்.   

01. உலகில் உள்ள மொத்த கழுதைகள் 44 மில்லியன். உலகில் அதிக கழுதைகளை உடைய நாடு எத்தியோப்பியா, அங்குள்ள கழுதைகள் சுமார்  08 மில்லியன். இந்தியாவில் இருப்பவை சுமார்  3  மில்லியன் கழுதைகள்.

02. உலகிலேயே அதிகமாக கழுதைகளை உடைய நாடுகளை கழுதை நாடுகள் (Donkey Countries) என்கிறார்கள். டாங்கி கண்ட்ரிஸ் என்பவை எத்தியோப்பியா, பாகிஸ்தான், மற்றும் சைனா.

03. உலகில் அதிக கழுதைகளை உடைய நாடுகள் என்ற பட்டியலில் இந்திய 25 வது இடத்தில் உள்ளது. வளராத நாடுகள் அல்லது வளரும் நாடுகளில் இந்த கழுதைகளை வண்டிகள் இழுப்பதற்கும், பொதி சுமப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். 

04.கழுதை என்பது கும்பு உள்ள பாலூட்டி இனம் என்று அர்த்தம். குதிரைகள் மற்றும் கழுதைகள் இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை தான். இந்த பாலூட்டி குடும்பத்திற்கு ஈக்யூடே(Equidae) என்று பெயர்.  

05.ஈகோஸ் ஆப்பிரிக்கானஸ்  அசினஸ் (Equus africanus asinus) என்பது ஒரு ஆப்ரிக்க நாட்டின் கழுதை இனம். அதிலிருந்து தான் குதிரை இனம் உருவானது என்கிறார்கள்.

06.கழுதைளைப் போலவே குதிரைகளையும் வண்டி இழுப்பது மற்றும் பொதி சுமக்கும் வேலைக்குத் தான் ஆரம்பகாலத்தில் அவற்றைப் பழக்கினார்கள். பார்ப்பதற்கு குதிரைகள் வலிமையானவை போல் தோன்றினாலும் குதிரைகளை விட கழுதைகளே மிகவும் வலிமையானவை. அதிக பாரமான வண்டிகளையும் இழுக்கும் அதிக பொதியினையும் சுமக்கும்.

07. ஒரு கழுதை பாலைவன பகுதியில் கத்தினால் அது 60 மைல் தூரம் வரை கேட்குமாம். அதனால்தான் கழுதை மாதிரி கத்தாதே என்று சொல்கிறார்கள்.

 08. கழுதைகளால் அதிக நேரம் மழையில் இருக்க முடியாது காரணம் அதன் உடன் இங்கு இருக்கும் ரோமம் மழையிலிருந்து அதற்கு பாதுகாப்புத் தராது. 

 09. கழுதைகள் குதிரைகளை விட மிகவும் புத்திசாலித்தனமானவை. முக்கியமாக தனது முதலாளிகளிடம் அது பணிவாக நடந்து கொண்டு நல்ல பெயர் எடுக்கும். குதிரைகள் இதற்கு நேர் மாறானவை.

10.கழுதைப் பாலை ஆஸ்மில்க் அல்லது ஜென்னி மில்க் என்று சொல்லுகிறார் (Ass milk / Jenny milk).

11.கழுதைப் பாலை மருத்துவ ரீதியாக நோய்களை குணப்படுத்தவும், அழகு சாதன பொருளாகவும் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். 

12.இதர பால் வகைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது கழுதைப் பால் தான், தாய்ப்பாலுக்கு ஓரளவு இணையானப் பால் என்று சொல்கிறார்கள்.

13.கக்குவான் இருமலைக் குணப்படுத்த இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகக் கழுதைப் பாலைப் பயன்படுத்துகிறார்கள். 

14.அனாதைக் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டில் இருந்து கழுதைப்பாலைப் பயன்படுத்தி வருகிறார்கள்.  

15. கழுதை பாலில் கொழுப்பும் குறைவு, கலோரியும் குறைவு, ஆனால் வைட்டமின் டி மற்ற பால்களை விட அதிக அளவில் இருக்கிறது. 

16. சிலருக்கு பசும்பாலில் இருக்கும் புரதம் ஒவ்வாமையை (Alergy) ஏற்படுத்தும். அவர்கள் கழுதைப் பாலை பிரச்சனை இல்லாமல்  பயன்படுத்த முடியும். 

17. இன்னொரு முக்கியமான அம்சம் கழுதைப் பாலில் இருக்கும் லாக்டோஸ், இது நமது உடலுக்கு சுண்ணாம்பு சத்து கிடைக்க வழி செய்கிறது. 

 18. கழுதை பாலில் சைட்டோகின் என்னும் ஒரு வகையான புரதச்சத்து இருக்கிறது இந்த புரதச்சத்து, பாதுகாப்பு சக்தியை (Immunity) உடலுக்கு அதிகரிக்கிறது. 

19. நைட்ரிக் ஆக்சைடு என்னும் ரசாயனம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது, இந்த ரசாயனத்தை உற்பத்தி செய்ய திசுக்களைத் தூண்டுகிறது இதன் நைட்ரிக் ஆக்சைட்.

20.எகிப்து அழகி தனது சரும அழகை மேம்படுத்த கழுதை பாலில் குளித்ததாக ஒரு அதிகாரப்பூர்வமான செய்தி உண்டு. அதைக் கேள்விப்பட்டு நம்ம ஊர் நடிகைகள் சிலர் அப்படி கழுதைப் பாலில் குளித்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

21.நெப்போலியன் தங்கைக் கூட தனது அழகினை மேம்படுத்த கழுதைப் பாலில் குளித்த  செய்தியும்  உண்டு. கிரீஸ், இத்தாலி, ஜெர்மனி, சுசர்லாந்து ஆகிய நாடுகளில் நோஞ்சான் குழந்தைகளை வளர்க்க கழுதைப் பாலை பயன்படுத்தி இருக்கிறார்கள். 

22. ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates) என்ற அறிஞரும் பிளைனி  த எல்டர் என்பவரும், கழுதைப்  பாலின் மகத்துவம் பற்றி, நிறைய எழுதி இருக்கிறார்கள். 

23. ஒரு கழுதை, ஒரு நாளில் 0.5. முதல் 1.3 லிட்டர் வரை பால் கறக்கும். ஆறு முதல் ஏழு மாதங்கள் அவை பால் கறக்கும்.

24. நெப்போலியன் தங்கைக் கூட அழகுக்காக கழுதைப் பாலில் குளித்த  செய்தியும்  உண்டு. கிரீஸ், இத்தாலி, ஜெர்மனி, சுசர்லாந்து ஆகிய நாடுகளில் நோஞ்சான் குழந்தைகளை வளர்க்க கழுதைப் பாலை பயன்படுத்தி இருக்கிறார்கள். 

 

25. ஒரு நாளில் 0.5. முதல் 1.3 லிட்டர் வரை பால் கறக்கும். ஆறு முதல் ஏழு மாதங்கள் அவை பால் கறக்கும். கழுதை பால் விலை அதிகம் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.

 

26. நீங்கள் விருப்பப்பட்டால் இன்று கூட நீங்கள் கழுதைப் பாலில் செய்த  குளியல் சோப்பினை வாங்கலாம்.  அந்த கழுதைப் பால் சோப்பின் பெயர் சுவாசுதி என்பது. ஒரு சோப்பின் விலை ரூ. 1500 மட்டும்தான்.

இந்த செய்திகளில் உங்களுக்கு பிடித்தமான செய்தி என்ன என்று சொல்லுங்கள். 

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம் 

பூமி ஞானசூரியன்

 

 

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...