Wednesday, January 11, 2023

PIGS FEED MILK DIFFERENTLY TO PIG-LETS - பன்றிக்கும் தன் குட்டி பொன்குட்டி

 

பன்றிக்கும் தன் குட்டி

பொன்குட்டி

 

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல இங்கு நான் பன்றிக்கும் தன்குட்டி பொன்குட்டி என்று சொல்லியிருக்கிறேன், படியுங்கள்.

புதிய மற்றும் வித்தியாசமான தகவல் விரும்பிகளுக்கு இந்தப் பதிவு ரொம்ப்ப்பிடிக்கும். 

அம்மா குழந்தைக்கு சோறு பிசைந்து தனது அன்பையும் பிசைந்து குழந்தைக்கு ஊட்டுகிறாள். அது போலவே பிராணிகளும் பால் தரும்பொது தன் அன்பையும் சேர்த்து தன் குட்டிகளுக்குக் கொடுக்கின்றன. 

பன்றி தன் குட்டிகளுக்கு எப்படி பால் கொடுக்கிறது ? பன்றிப்பாலின் என்ன சிறப்பும் அம்சம் என்ன ? அதுபற்றி ஆறாய்ச்சிகள் என்ன சொல்லுகின்றன ?. நாம் ஏன் பன்றிப்பாலை குடிப்பதில்லை ? எல்லவற்றையும் இங்கு சொல்லியிருக்கிறேன்;

உலகில் மொத்தம் 16 வகையான பன்றி இனங்கள் உண்டு. இதில் முக்கியமானவை 8 இனங்கள். 2022 ம் ஆண்டின் கணக்குபடி உலகில் மொத்தம் 784.2 மில்லியன் பன்றிகள் உள்ளன. 

இதில் அதிக பன்றிகளை உடைய நாடு சைனா. இந்த வரிசையில் இந்தியா 36 வது இடத்தில் உள்ளது.  

இப்போது நாம் பன்றிகளின் பாலை நாம் ஏன் குடிப்பதில்லை,  என்று பார்க்கலாம்.

1. இதற்கு முக்கியமான காரணம் பன்றிகளில் பால் கறப்பது  கடினம்.

2. இன்னொன்று சுகாதாரமான சூழலில் அவை வளர்க்கப்படுவதில்லை என்பது.

3. மாடுகளில் இருக்கும் பால் காம்புகள் நான்கு என்றால், பன்றிகளில் இருக்கும் பால்காம்புகள் பதிநான்கு. மேலும் மிகச் சிறிய காம்புகள் அவை. 

4. பன்றிப்பாலில் பாலடைக்கட்டி, பாலாடை எல்லாம் செய்து பார்த்திருக்கிறார்கள், இவை மாட்டுப் பாலை விட சுவையாக இருக்குமாம்.

5.இதன் பாலில் செய்த பால்பொருட்களில் லேசான உப்பு சுவையும்இயல்பாக இருக்குமாம்.

6.  இதன் பால் அடர்த்தி அதிகமாய் இருக்கும், காரணம் இதில் உள்ள திடப்பொருள் 17 முதல் 25 %, பசும்பாலில் 12.5 % ம், தாய்ப்பாலில் 12.5 % ம் உள்ளது 

6. பன்றிகளின் பாலில் கொழுப்புச் சத்து கூடுதலாக இருக்கும். பன்றிப்பாலில் 8.5 % ம் பசும்பாலில் 3.5 % ம், தாய்ப்பாலில் 3 - 5 % ம் உள்ளது. 

8. புரதம் பன்றிபாலில் 6 % ம், பசும்பாலில் 3.8 % ம், தாய்ப்பலில் 1.1 % ம் உள்ளது. 

9. லேக்டோஸ் பன்றிப்பாலில் 4 % ம், பசுவின் பாலில் 4.9 % ம், தாய்ப்பலில் 6.8 % ம் உள்ளது.

10. பசுவின் பாலை ஒப்பிடும்போது, புரதம் மற்றும் சர்க்கரைச் சத்து ஏறத்தாழ சமமானது. 

11. பன்றிக்குட்டிகள் தாய்ப் பன்றியிடம் ஒரு நிமிடத்திற்கு மேல் பால் குடிக்காது. குட்டிகள் பால் காம்புகளில் வாயை வைத்தால் போதும். ஆனால் குட்டிகளுக்குத் தேவைப்படும் பாலைத் தாய் பன்றிகள் பீச்சித் தருகின்றன.

12. நம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது போல, குட்டிகள் பால் காம்புகளில் வாயை வைத்தால் போது. தாய்ப்பன்றிகள் பாலை பீய்ச்சித் தருமாம். குட்டிகள் வாயை காம்புகளில் வைத்தால் போதும். அதுவே சுரந்து தருமாம்.

பல உயிரினங்களிலும், பொதிந்திருக்கும் இயற்கையான பண்புகளை விரும்பிப் படிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை பகிருங்கள்.

ந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள். மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம்.  கருத்து சொல்லும் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். 

பூமி ஞானசூரியன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...