Tuesday, January 3, 2023

UNFAMILIAR MILK FROM A FAMILIAR BEAST - தெரிந்த மிருகத்தின் தெரியாதப் பால்

 

தெரிந்த மிருகத்தின் தெரியாதப் பால் 

 

இனி யாரையும் பால்போன்ற மனசுடையவர் என்று யாரையும் சொல்ல முடியாது. ஒரு பிராணியில் பால் கருப்பய் இருக்கிறதாம், என்ன செய்வது ?

பொதுவாக பால் என்றால் அது எந்தப் பாலாக இருந்தாலும் அது வெண்மையாகத்தான் இருக்கும். உலகத்தில்  ஒரே ஒரு பிராணி மட்டும் கருப்பு நிறத்தில் பால் தருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அந்த அதிசய செய்தியோடு வருகிறேன். 

பசும்பால் மஞ்சள் நிறமாக இருக்கும், எருமைப்பால் வெள்ளைவெளேர் என இருக்கும். பெரும்பாலான பிராணிகளின் பால் வெண்மையாகத்தான் இருக்கும். பால் மஞ்சள் நிறமாக இருந்தால் அதில் கொழுப்பு அதிகம்.

ஆனால் உலகத்தில் குறைவான கொழுப்பு சத்து கொண்ட ஒரே பால் காண்டாமிருகத்தின் பால்தான். அதுமட்டுமல்ல உலகத்திலேயெ கொழுப்புசத்து குறைவாகவும் கருப்பு நிறமாகவும் ஒரு காண்டா மிருகம் பால் தருகிறது என்கிறார்கள். 

கருப்புக் காண்டாமிருகத்தின் பால் பார்க்கக் கருப்பாக  இருக்குமாம். இந்திய காண்டாமிருகத்தின் பால் வெள்ளை நிறமாக இருக்கும். அதேபோல வெள்ளை காண்டாமிருகத்திற்கும், கருப்பு காண்டாமிருகத்திற்கும் உடல் லேசானக் கருப்புதான்.

ஆனால் காண்டாமிருகத்தின் பால், நீர்த்துப் போய் தண்ணீர் மாதிரி இருக்கும். பொதுவாக அதிகநாள் பால் கொடுக்கும் அத்தனை பிராணிகளின் பாலும் நீர்த்துப்போய்தான் இருக்குமாம். அதில் கொழுப்பும் புரதமும்  கூட கம்மியாய்த்தான் இருக்குமாம். 

உலக அளவில் ஐந்துவகை காண்டாமிருகங்கள் (கா,மி) இருக்கின்றனவெள்ளை காண்டாமிருகம், கருப்புகா,மி, ஜாவன்கா.மி, ஒற்றைக்கொம்பு கா,மி, என ஐந்து வகை இருப்பில் உள்ளன

இவற்றில் கருப்பும், ஒற்றைகொம்பு கா.மி.க்கள்தான் அதிகம் இருக்கின்றன. உலகில் உள்ள மொத்த .மி.” க்கள் 26272 என 2021 ம் ஆண்டு புள்ளிவிவரம் சொல்லுகிறது. இவற்றில் இந்தியாவில் இருப்பவை ஒற்றைக்கொம்பு கா,மி.க்கள். 

சமீப காலத்தில் கருப்பு இனமும், ஒற்றைக்கொம்பு இனமும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஒற்றைக்கொம்புக்கு இந்தியாவில் வாழ்விடம் பொதுமானதாக இல்லை அல்லது பொருத்தமானதாக்  இல்லை என்கிறார்கள். 

காண்டாமிருகங்களின் கர்ப்ப காலம் 15.7 மாதங்கள். இரண்டாவது குட்டி ஈனுவதற்கும் 34 முதல் 51 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன.

5.நம்முடைய வயதில் ஏறத்தாழ பாதிதான் இந்திய காண்டாமிருகங்களின் வயது, அதிகபட்சமாக 40 ஆண்டுகள்.

இந்த கருப்புகாண்டாமிருகத்தில் அடிக்கோடிட்டு சொல்லவேண்டியது, அல்லது நம்ப முடியாத செய்திகளாகத் தெரிவது இரண்டு, ஒன்று அதன் பாலும் கருப்பு என்பது. இரண்டாவது உலகில் இதன் பாலில்தான் கம்மியான கொழுப்பு. கருப்பு காண்டாமிருகத்தின் பாலிலும் 0.2 % கொழுப்பு சத்து தான் உள்ளது. 

கருப்பு காண்டமிருகங்களின் சினைக்காலம் கூடுதலானது, கருவுற்றபின் குட்டிபோட ஒரு ஆண்டு ஆகும், ஒரு ஈற்றில் ஒரு குட்டிதான் போடும். 

காண்டாமிருகங்கள் ஒருமுறை குட்டி போட்டால் இரண்டு ஆண்டுகள் வரை அந்த குட்டிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும். குட்டிகளின் மீது பாசம் அதிகம். இரண்டு வருஷம் போனால்தான் அடுத்த குட்டி பற்றி அடுத்து யோசிக்கும். 

இவற்றின் உணவுப் பொருட்கள் என்பவை, இலைகள், புதர்கள் மரக்கிளைகள், பூக்கள், காய்கள், கனிகள் நீர்த்தாவரங்கள் இவைதான். வீரசைவம். 

டைசெரோஸ் பைகார்னிஸ் (DICEROS BICORNIS) என்று சொல்லப்படும் இந்தவகைக் காண்டாமிருகங்கள் அங்கோலா, போட்ஸ்வானா, கென்யா, மலாவி, நமிபியா, தான்சானியா, சிம்பாப்வே ஆகிய ஆஃப்ரிக்க நாடுகளில் அதிகம்  இருக்கின்றன. 

அன்பு நண்பர்களே, இதுபோல காண்டாமிருகம்பற்றிய வித்தியாசமான செய்திகள் ஏதும் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கல் மீண்டும் அடுத்தப் படிவில் சந்திப்போம். 

நன்றி வணக்கம்

பூமி ஞானசூரியன்

#DICEROSBICORNIS #BLACKRHINOCEROS #UNFAMILIARMILK #TYPESOFRHINOCEROS #EAST&SOUTHAFRICA #ANKOLA #KENYA #BOTSWANA #THANZANIA #NAMIBIYA #ZIMBABWE #PROFILEOFRHINOCEROS #UNIQUECHARACTERSOFLACTATION #MAMALS

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...