Saturday, January 14, 2023

HOW TO MAKE PUBLIC SPEAKING SCRIPT மேடைப்பேச்சு தயாரிப்பது எப்படி

 

மேடைப்பேச்சு

தயாரிப்பது எப்படி?



 

HOW TO PREPARE  SCRIPT

FOR PUBLIC SPEAKING ? 

சொல்வாக்கின் மூலம் செல்வாக்கு பெறுவதுதான் மேடைப்பேச்சு. குறிப்பாக வியாபாரம் அல்லது தொழில் முனைவோருக்கு மிக முக்கியமான திறமை. பல நூறு வீர்ர்களை போர்க்களத்தில் போர் செய்யும் வீரனைவிட பலநூறு பேருக்கு முன்னால் மேடையில் பேசுபவனே பெரும் வீரன் என்கிறார் திருவள்ளுவர் தனது திருக்குறளில்.

இளைஞர்களின் எதிர்காலத்தையே இமைப்பொழுதில் இமயத்தின் உச்சிக்கே அழைத்து செல்லும் அற்புதமான திறன் மேடைப்பெச்சு. இந்தப்பதிவில் ஒரு மேடைப்பேச்சை தயாரிப்பது எப்படி என்று உங்களுக்கு சொல்லப்போகிறேன். 

முழுமையாக ஒரு மேடைப்பேச்சை நீங்கள் தயாரித்து விட்டால் அந்த மேடைப்பேச்சினை, நீங்கள் பத்தில் ஒன்பது பங்கு வெற்றியடைந்ததாக அர்த்தம்.

ஆக மேடைப்பேச்சை தயாரிப்பதுதான் அடிப்படையான வேலை. ஒரு கட்டிடத்திற்கு போடும் அடித்தளம் மாதிரி. பவுண்டேஷன் போடுவது மாதிரி. ஒரு மரத்தின் வேர்கள் மாதிரி, இந்த பேச்சுத் தயாரிப்பு வேலை அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு பேச்சினை தயாரிக்காமல் பேசப்போவது என்பது ஒரு மேடையில் அரைகுறையான ஆடைகளுடன், ஆடப்போவது அதற்கு சமம் என்கிறார் வெப்ஸ்டர் (WEBSTER)என்ற அறிஞர்.

மேடைப்பேச்சின் தலைப்பு குறித்த உங்கள் சொந்தமான சிந்தனைகள், கொஞ்சம், வெளியில் இருந்து பெறப்படும் அல்லது   சேகரிக்கும் தகவல்கள் கொஞ்சம், உங்கள் பேச்சினை கேட்போரின்  தேவைகள், வற்றின்  அவசியம், அத்ற்கான தீர்வுகள், இவற்றை தொகுத்தாலே தயாராகிவிடும் ஒரு மேடைப்பேச்சு. 

பல வண்ணப் பூக்களை மாற்றி மாற்றி வைத்து ஒரு நாரில் கட்டி மாலையாக தொடுப்பது எப்படியோ அப்படித்தான் இந்த மேடைப் பேச்சினைத்  தயாரிக்க வேண்டும்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம். ஒரு தலைப்பினை தெரிந்து எடுப்பது,  பின்னர் முதலில் அந்த தலைப்பு தொடர்பான நமது சொந்தமான அனுபவங்களை தொகுப்பது,  பின்னர் அதற்கான தகவல்களை வெளியில் இருந்து திரட்டுவது, அதில் முக்கியமானவற்றை தெரிவு செய்வது, பின்னர் தெரிவு செய்த செய்திகளை அல்லது தகவல்களை வரிசைக்கிரமமாக அடுக்குவது துதான் இந்த பேச்சு தயாரிப்பில் முக்கியமான படிநிலைகள்.

ஒரு மேடைப்பேச்சினை ஒரே மூச்சில் தயாரித்து விட முடியாது. அதனை ஒரு கோழி எப்படி முட்டைகளின் மீது உட்கார்ந்து அடை காக்கிறதோ அதுபோல அடை காக்க வேண்டும். அப்படி அடைகாக்கும் போது தான் நமக்கு புதுப்புது சிந்தனைகள் தோன்றும். நாம் குளிக்கும் போது, நடந்து செல்லும், போது சாப்பிடும் போது, ஏன் தூங்கும்போதுகூட  புதுப்புது சிந்தனைகள் தோன்றும். 

ந்த சிந்தனைகள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட செய்திகளை சேகரித்து வைத்துக்கொண்டு மேடைப்பேச்சு தயாரிக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படித்தான் நானும் தயாரித்துக் கொள்வேன் என்றார் என்கிறார் ஆபிரகாம் லிங்கன் அவர்கள்.

ஒரு ஆண்டு கூட பள்ளிக்கூடத்தில் படிக்காத ஆபிரகாம் லிங்கனை அமெரிக்காவின் ஜனாதிபதியாகக் கொண்டு வந்தது  அவருடைய  புத்தக வாசிப்பும், அவருடைய மேடைப்பேச்சும்தான்.

மேடைப்பேச்சு தலைப்பு தொடர்பான புத்தகங்களை தேடி தேடி படிக்க வேண்டும், தேவைப்படுகின்ற தகவல்களை அதிலிருந்து திரட்ட வேண்டும். குறிப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தலைப்பு தொடர்பான செய்திகள் வேண்டுமென்றால் அதை தேடுவதற்கு சரியான இடம் நூலகங்கள். பல காலகட்டங்களில் வந்த நூல்களை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்க்க, படிக்க, வாய்ப்பு தருவது நூலகங்கள். அங்கும் நமக்கு தேவைப்படும் செய்திகளை எல்லாம் சேகரிக்க முடியும்.

இது தகவல் தொடர்பு யுகம் செய்திகள் உங்களைத் தேடி வந்து குவியும் காலமாக உள்ளது.தில் சமூக ஊடகங்கள் இதில் பெரும் பணி செய்கின்றன. குறிப்பாக வாட்ஸ்அப் ஊடகம் இதற்கு உதவியாக இருக்கும் ஆனால் நமக்குத் தேவைப்படும் செய்திகள் என்றால் நாம் சர்ச் எஞ்சின் களின் உதவியை நாட வேண்டும்.

சர்ச் இன்ஜின் என்று சொல்லுவதை விட கூகிள் என்றால் சுலபமாய் புரியும். கூகிள், பிங்,  யாகூ,  யாண்டக்ஸ், டக்டக்கோ, பெய்ட், இப்படி ஏகப்பட்ட தேடுபொறிகளும், நம் தலைப்புகளுக்கு ஏற்ப செய்திகளை அள்ளித்தர உதவியாக இருக்கும்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் அவர்கள் ஒரு தலைப்பு தொடர்பான தகவல்களை அடி முதல் முடி வரை திரட்டுவதில் வல்லவர். அவற்றை அக்குவேறு ஆணிவேராக ஆய்வு செய்து, அந்த பேச்சினை தயாரிப்பார். அந்த பேச்சில் ஒரு சிறிய தவற்றைக் கூட யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு பேச்சிற்கு தேவைப்படும் தரவுகளை சேகரிப்பதில் அவர் வல்லவர். அவருடைய பேச்சில் அவர் தரும் செய்திகள் துல்லியமானதாக இருக்கும். 

பெஞ்சமின் பிராங்கிளின் அமெரிக்காவின் தந்தை என்று போற்றப்படுபவர். அவருடைய சுயசரிதை சுவாரசியம் மிக்கது. அதற்குக் காரணம், தான் எப்படி பேசுவாரோ அப்படியே எழுதுவார். அவருடைய எழுத்து பிரபலமானது. அதற்கு காரணம் இயல்பான மொழியில் எழுதுவது. கதை சொல்வதில் அவர் திறமைசாலி. மார்க் டிவைன் எப்படி கதை சொல்வாரோ அப்படி அவர் சொல்லுவார். ஆனால் மேடைப்பேச்சு மட்டும் அவருக்கு கைகொடுக்காது.

பிரேக்கன் ரீட் என்ற பேச்சாளரின் பேச்சு என்றால் ஆப்ரஹாம் லிங்கனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி, அவருடைய இளம் வயதில் அவர் பேச்சைக் கேட்க இவர் 40 முதல் 50 மைல் நடந்து செல்வார். 

அரிதாக சில மேடைப்பேச்சாளர்களும் மேடையில் எப்படி பேசுவார்களோ, அப்படியே தங்கள் பேச்சுகளை தயாரிப்பார்கள். தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் தனது பேச்சுகளை அப்படித்தான் தயார் செய்வார். மேடையில் வழங்கும்போதும் அப்படியே பேசுவார் இந்த இயல்பான பேச்சு, இயல்பான குரல்,  இவைதான் அவரை பிரபலமாக்கியது.

ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுவது, அதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்று விளக்குவது, பின்னர் அதனை சரி செய்ய பார்வையாளர்களை வேண்டுதல் அல்லது கேட்பது, இப்படி  மூன்று படிநிலைகளை ஒரு பேச்சு தயாரிப்பின் பகுதிகளாகக் கொள்ளலாம் என்கிறார் டாக்டர். கான்வெல் அவர்கள்.

ஒரு தலைப்பில் குறைந்தபட்சம் 100 செய்திகளை திரட்டி கொள்ள வேண்டும். அதில் 90 செய்திகளை கடைசியில் தூக்கி எறிந்து விட்டு பத்து செய்திகளை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பத்து செய்திகளை, ஒன்று இரண்டு என வரிசைக்கிரமமாக அடுக்கிக்கொண்டு அந்த பேச்சினை தயார் செய்ய வேண்டும்.

ஒரு மேடைப் பேச்சு தயாரிப்பதில் எப்படி தயாரிப்பது என்பதில் மூன்று படிநிலைகளை இந்த பதிவில் நான் விளக்கி உள்ளேன்.து எந்த அளவுக்கு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது,  என்று எனது இமெயிலுக்கு எழுதுங்கள், அல்லது கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்

அக்ரி பூமி ஞானசூரியன்

Email:gsbahavan@gmail.com

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...