மேடைப் பேச்சின் மூலமாக சுய மேம்பாட்டை உருவாக்குவது பற்றிய டேல் கார்னகியின் புத்தகம்.
இந்த புத்தகத்தின் தலைப்பு “ஹவ் டு டெவலப் செல்ஃப் கான்ஃபிடன்ஸ் அண்ட் இன்ஃப்ளுயென்ஸ் பீப்புள் பை பப்ளிக் ஸ்பீக்கிங் “ என்பது டெல் கார்னகி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன் எழுதியது.
சுய முன்னேற்றம் அல்லது மேம்பாட்டிற்கு மிக முக்கியமானது மேடைப்பேச்சு. உலக சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் யாரெல்லாம் பேச்சில் வல்லவராக இருந்தார்களோ அவர்கள் நம்மை ஆளுபவர்களாக இருந்திருக்கிறார்கள். மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். போர்த்தளபதிகளாக இருந்திருக்கிறார்கள். பிரதமராக இருந்திருக்கிறார்கள். அல்லது குடியரசுத் தலைவராக இருந்திருக்கிறார்கள்.
“எல்லாம் மேடைப்பேச்சின் மகிமைதான் கண்ணா” அதனால் மேடைப்பேச்சு பற்றிய ஒரு புத்தகத்தை இந்த பதிவில் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். இந்த புத்தகம் 97 ஆண்டுகள் பிரசுரிக்கப்பட்ட நூல் என்பது ஆச்சரியமான தகவல்.
“சொல்வாக்கின் மூலம் செல்வாக்கு பெறுவது எப்படி” என்பதுதான் இதற்கு நான் வைத்த தலைப்பு. இது இதன் ஆங்கில தலைப்பு “ஹவ் டு டெவலப் செல்ஃப் கான்பிடன்ஸ் அண்ட் பப்ளிக் ஸ்பீக்கிங் (HOW TO DEVELOP SEL CONFIDENCE AND PUBLIC SPEAKING) என்பது இந்த நூலை எழுதியவர் “டேல் கார்னகி”. சுயமுன்னேற்ற புத்தகங்கள் எழுதியவர்களில் முன்னோடியான அமெரிக்க எழுத்தாளர்.
மேடைப் பேச்சு என்பதில் முக்கியமானது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கையை இருந்தால் எதுவும் சாத்தியம்தான். அதில் இந்த மேடைப் பேச்சும் ஒன்றுதான்.
உங்கள் மேடைப்பேச்சு வெற்றிகரமாக அமைய இந்த புத்தகம் நான்கு வழிமுறைகளை சொல்லித் தருகிறது. இந்த நான்கு வழிமுறைகளையும் சொல்லித் தருவதற்காக ஒரு நிறுவனத்தை நடத்தி பல ஆயிரம் மேடைப் பேச்சாளர்கள் உருவாக்கிய டேல் கார்னகி எழுதிய நூல் இது.
டேல்கார்னகி பற்றிச் சொல்ல நிறைய சுவாரசியமான தகவல்கள் உண்டு. அவற்றைத் தனியாக வேறு ஒரு பதிவில் பார்க்கலாம். உலகம் முழுவதிலும் மேடைப் பேச்சாளார்களாக மேடைப் பேச்சாளர்களாக இருப்பவர்கள் பெரும் அரசியல் தலைவர்களாக வளர்ந்து வந்ததை, உங்களால் பார்க்க முடியும். எல்லா நாடுகளிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் பெரும்பாலும் தலைசிறந்த மேடைப் பேச்சாளர்களாக இருப்பதை பார்க்கலாம்.
மேடைப்பேச்சு க்கு அவசியமானவை என்று
மிக முக்கியமான நான்கு அம்சங்களை சொல்லுகிறது இந்த நூல்.
1. இதில் ஒன்று பேச்சின் தொடக்கமே உற்சாகமூட்டும்படி அமைய வேண்டும் நாம் பேசும் வார்த்தை ஒவ்வொன்றிலும் நம்பிக்கை துடிக்க வேண்டும். அதற்கு மன தைரியம் அவசியம் வேண்டும்.
2. இரண்டாவது அம்சம், நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசிவிட்டு அமரவேண்டும்..
3. மேடையில் உங்கள் முன்னால் இருப்பவர்கள் அத்தனை பேரும் உங்களிடம் கடன் வாங்கியவர்கள். அவர்கள் கடனை திருப்பி கட்ட முடியாமல் தவணை கேட்க வந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது பேசுவதற்கு பயம் வராது என்கிறார் டேல்கார்னகி.
4. நான் மைக் முன்னால் போய் நின்றேன். வார்த்தையே வரவில்லை. வாயில் பஞ்சு வைத்து அடைத்து விட்ட மாதிரி இருந்தது. மைக்கைக் கையில் பிடித்துத் திருகியபடி திருவென்று விழித்தேன். மேடையில் இருந்தவர்கள் நான் மைக் ரிப்பேர் செய்ய வந்தவன் என்று நினைத்துக் கொண்டார்கள். நான் மேடையில் பேச வந்தவன் என்று அவர்களுக்கு தெரியவில்லை இப்படி தனது அனுபவத்தை நகைச்சுவையாகச் சொன்னார் அமெரிக்கா நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டுவெய்ன்.
5. வானொலியில் பேசணும்னா பேசும் செய்திகள் எல்லாவற்றையுயும் ஒரு வரி விடாமல் எழுதுங்கள். அப்பத்தான் பிசிறு இல்லாமல் பேச முடியும். இப்படி சொல்லுவார், உலக மகா சினிமா நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சார்லி சாப்ளின் அவர்கள்.
6. வானொலியில் பேச வேண்டுமென்றால் அந்த பேச்சினை எழுதி எடுத்துச் செல்ல வேண்டும் அதுபோல மேடைப்பேச்சுக்கும் என்ன பேசப்போகிறோம் என்பதற்கு பேச்சினை தயாரிக்க வேண்டும்.
7. அகில இந்திய வானொலியில் சுமார் 18 ஆண்டுகள் வேலை பார்த்தவன், கிராமப்புற ஒலிபரப்பிற்காக நிகழ்ச்சிகளை எழுதுவது, பங்கேற்பது, அதற்கு குரல் தருவது, நிகழ்ச்சிகளை வெட்டுவது ஒட்டுவது, இசைகூட்டி இனிமை கூட்டுவது, நிகழ்ச்சியைத் தயாரிப்பது, என்று எல்லா நிலைகளிலும் பணி செய்தவன் என்ற நிலையில், வனொலிக்கும், மேடைப்பேச்சுக்கும் அவசியமான ஒன்று பேச்சு தயாரிக்கும் பணி
8. கிராமங்களில் நீச்சல் சொல்லித் தருகிறேன் என்று என்னை ஒரு கிணற்றுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். கிணற்றின் கரையில் போய் நின்றதும் சட்டென்று, ஒருத்தன் என்னைக் கிணற்றில் தள்ளி விட்டான். தொப்பென்று கிணற்றில் போய் விழுந்தேன், மூச்குத் திணறியபடி, ஒரு லிட்டருக்கு குறைவில்லாமல் தண்ணீரையும் குடித்தபடி நீச்சல் அடிப்பதில் முதல் பாடம் கற்றுக்கொண்டேன்.
9. இந்த உதாரணத்தை டேல்கார்னிகியும் சொல்லுகிறார். “பயந்து பயந்து நிற்காதீர்கள். சட்டென தண்ணீரில் குதித்து கையை காலை நீட்டி மடக்கி தண்ணீரை உதையுங்கள். நீச்சல் தானாய் வரும். மேடைப் பேச்சும் அப்படித்தான். எட்டிப்பிடியுங்கள் மைக்கை, வாயில் வந்ததைப் பேசுங்கள். இந்த புத்தகத்தை தூரமாக வீசி எறியுங்கள். எறும்பு ஊர கல் தேயும், பாடப்பாட ராகம் மூடமூட ரோகம்.
10. முதலில் மூன்று பக்கத்திற்கு உங்களுக்கு பிடித்தமான ஒரு தலைப்பில் ஒரு பேச்சினை தயார் செய்யுங்கள். அதனை முப்பது முறை படித்துப் பாருங்கள். அதில் உள்ள செய்திகளை மண்டைக்குள் ஏறிவிடும். பின்னர் அந்த பேச்சினை பேசிப்பாருங்கள். பலமுறை பேசி பாருங்கள். நண்பர்களுக்கு பேசிக் காட்டுங்கள். வீட்டில் தம்பி தங்கைகளுக்கு பேசிக்காட்டுங்கள். அண்ணன் அக்காமார்களுக்கு பேசிக் காட்டுங்கள். அம்மா அப்பா தாத்தா பாட்டி எல்லோருக்கும் பேசிக் காட்டுங்கள்.
11. உங்கள் பேச்சில் எத்தனை செய்திகளை சொல்லுகிறீர்கள் ? எதுவும் விட்டுப் போகாமல் சொல்ல முடிகிறதா ? வார்த்தைகளை தெளிவாக வந்து விழுகிறகிறதா ? என்று பாருங்கள்.
12. மேடைப்பேச்சில் மூன்றவது முக்கிய அம்சம், பயிற்சி செய்வது அல்லது ஒத்திக்கைப் பார்ப்பது. இதுதான் மிகவும் அவசியமானது. ஒவ்வொரு முறை ஒத்திகை பார்க்கும்போதும் உங்கள் பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நீங்கள் உணருவீர்கள்.
13. பேச போகும் தலைப்பில் முதலில் உங்களுக்கு தெரிந்து செய்திகளை பட்டியலிடுங்கள். அதற்கு தொடர்புடைய செய்திகளை சேகரியுங்கள். அவற்றில் முக்கியமானவை, வித்தியாசமானவை, அரிதான செய்திகள், சுவாரஸ்யமானவை, சுவையானவை, ஆகியவற்றை தொகுத்துப் பேச்சினைத் தயார் செய்யுங்கள்.
14. உலக பிரசித்தி பெற்ற ஜட்டிஸ்பர் பேச்சினை, “இரண்டு மூன்று நாட்களில் அதனை எழுதினேன்” என்று சொல்லுகிறார் ஆபிரகாம் லிங்கன். ஆனால் ஒரு தலைப்பை அவர் பலநாட்கள் யோசித்துக் கொண்டிருப்பேன். அதன் பின்னர்தான் அதனை எழுதுவேன் என்கிறார்.
15. இயேசு கிறிஸ்து கூட தனது பிரபலமான மலைப் பிரசங்கத்தை தயாரிக்க 40 பகல் மற்றும் 40 இரவுகளை எடுத்துக்கொண்டார். அவர் அந்த 40 நாளும் வழக்கமான கூட்டங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார். தியானத்திலிருந்து தனது மனதை ஒருநிலைப்படுத்தினார். அதன் பிறகுதான் அதனை எழுதி முடித்தார் என்று சொல்லுவார்கள்.
16. உங்கள் பேச்சினை நீங்கள் தயாரிப்பதற்கு முன்னதாக, யாரிடம் பேசப் போகிறீர்கள் ? எத்தனை பேரிடம் பேசப் போகிறீர்கள் ? அவர்களுடைய தேவை என்ன ? அவருடைய பிரச்சனைகள் என்ன ? அவருடைய விருப்பம் என்ன ? என்றெல்லாம் தெரிந்து கொண்டால் பேச்சு தயாரிப்பில் பாதி வேலை முடிந்து விட்டது என்று அர்த்தம்.
17. இந்த முறையில் 100
செய்திகளை சேகரியுங்கள். அதில் 90 ஒதுக்கி விட்டு பத்தை மற்றும் தேர்வு செய்யுங்கள் அதைத்தான்
நீங்கள் மேடையில் பேசப் போகிறீர்கள் ஆனால் நீங்கள் பேசும் தலைப்பில் ஏகப்பட்ட
செய்திகள் உங்கள் கைவசம் இருக்க வேண்டும்
18. ஒரு மேடைப்பேச்சை எப்படித் தயார் செய்யலாம் என்பதற்கு டேல் கார்னகி சுலபமான சூத்திரம் ஒன்றைச் சொல்லுகிறார். அதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
19. உங்கள் பேச்சைத் தொடங்கியதும் முதலில் ஏதாவது ஒரு உண்மையை உடைத்துச் சொல்லுதல் வேண்டும். இரண்டாவதாக அது பற்றிய சாதக பாதகங்களை விளக்கிச் சொல்லுதல் வேண்டும். அதனை சரி செய்ய அல்லது சீர் செய்ய பேச்சினை கேட்போர் என்ன செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும்.
20. ஆகிய இந்த மூன்று நிலைகளை அடிப்படையாக வைத்துத்தான் ஒரு மேடைப் பேச்சினை தயார் செய்ய வேண்டும். இந்த உதாரணத்தை தருபவர் டாக்டர். எச் கான்வெல் என்பவர். இவர்தான் ஏகர்ஸ் ஆஃப் டைமண்ட் (ACRES OF DIAMONDS) என்ற பிரபலமான பேச்சினை தயார் செய்து உலகுக்கு அளித்தவர்.
இப்படியாக மேடைப்பேச்சு பற்றிய பல வெற்றிகரமான மேடை பேச்சாளர்கள் பற்றிய சுவையான பல சம்பவங்கள் எல்லாம் இந்த நூலில் கொட்டி கிடக்கின்றன.
இந்தப் பதிவுபற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்.
நன்றி வணக்கம். பூமி ஞானசூரியன்.
எனது இமெயில்:gsbahavan@gmail.com
No comments:
Post a Comment