Wednesday, January 25, 2023

MADURAI THIRUPPARANGUNRAM TEMPLE TREE - மதுரை திருப்பரங்குன்றம் கோவில் தல மரம்



 கல்ஆல மரம்

(SOFT FIG) 

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா, இம்மரங்கள் தமிழ் நாட்டில் பரவலாக உள்ளன, இது 

பரம்பரியம் மிக்க மரமும் கூட, பெரும்பாலும் பழைய கட்டிடங்களில் மதில் 

சுவர்களில் வேர்களால் சுற்றி வளைத்தபடி சிக்ககல்ஆல 

மரத்தை, காட்டரசுகாட்டத்தி என்றும் கூட சொல்லுவார்கள், இந்த மரத்தின் 

தாயகமாக வளர்ந்திருக்கும் மரம்,  சில சில்லரை நோய்களையும் இது 

குணப்படுத்தும்.


தாவரவியல் பெயர்: ஃபைகஸ் மொல்லிஸ் (FICUS MOLLIS)

தாவர குடும்பம்: மோரேசி (MORACEAE)

தமிழ் பெயர்: கல்ஆலமரம், கல்அத்திமரம், காட்டரசுமரம் (KALAL, KALATHI, KATTARASU )

பிற மொழி பெயர்கள்

கன்னடா : காடுஅத்தி, காடுகொனி, கல்லாலன், கல்லத்தி (KAADU ATTHI, KAADU GONI, KALL ALA, KAL ATTHI)

தெலுங்கு: கல்லத்தி, கல்லுவ்வி, கொண்டகாலஜுவ்வி, கொண்டமர்ரி, பிட்டமர்ரி (KAL ATTHI, KALIJUVVI, KONDAKALAJUVVI, KONDAMARRI, PITTAMARRI)

ஹிந்தி: காமரூப்  (KAMARUP)

சமஸ்கிருதம்: பிளக்ஸா (PLAKSAH)

மலையாளம்: இட்சி (ITCHI)

ஒரியா: ஜாரி (JAARI)

இந்த மரங்கள் இந்தியா, ஸ்ரீலங்காவில், மற்றும் பங்க்ளாதேஷ் ஆகிய இடங்களில்  மட்டுமே இருக்கின்றன. இந்த மரங்கள் வறண்ட இலையுதிர் காடுகளில் காணப்படுகின்றன.  இந்த மரங்கள் மலையடிவாரங்களில் தென்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளர்கின்றன. கற்களும் பாறைகளும் நிறைந்த நிலப்பரப்பிலும் இயல்பாக வளரும். 

மரங்கள் 12 முதல் 18 மீட்டர் உயரம் வரை வளரும்.  இதன் இளம் கிளைகளிலும் சிம்புகளிலும் பழுப்பு நிறமான மென்மையான ரோமங்கள் போர்த்தியபடி இருக்கும்.

இதன் இலைகள் மாற்று ஒழுங்கிலும் எதிர்எதிராகவும் இருக்கும், நீள் வட்டமாக ஆலம் இலைகளை பார்ப்பது போலவே இருக்கின்றன.

அத்தி பூக்கும் காய்க்கும்

கல்லத்தி மரங்கள் ஜூன் முதல் ஜனவரி வரையான காலத்தில் சுமார் எட்டு மாதங்கள் பூத்து காய்த்து கனிகள் ஆகின்றன.

அத்தி காய் அல்லது பழம் என்பது அதன் பூக்கள்தான். ஒன்றல்ல இரண்டல்ல மூன்றுவகை பூக்கள் இருக்கும். ஒன்று ஆண் பூ. இரண்டு நீண்ட சூலக பெண்பூ, மூன்று குட்டை சூலகப் பெண்பூ. 

இந்தப் பூக்களுக்கு மகரந்தசேர்க்கைக்கு  உதவ ஒரு தனி வகை குளவி உண்டு. பூக்குள் நுழையும் பெண் குளவிகள் குட்டைச் சூலக பெண்பூக்களின்மீது முட்டையிடும். அப்போது நீண்ட சூலகப் பெண்பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு  ஏற்பாடு செய்யும். 

அந்த முட்டைகளிலிருந்து முதலில் இறக்கைகள் இல்லாத ஆண் குளவிகள் வெளிவரும். வெளி வந்த பின்னர் வரும் பெண் குளவிகளை கருத்தரிக்கச் செய்யும். பின்னர் பழங்களில் சிறுசிறு துளைகளைப் போடும்.

இறக்கை முளைத்த பெண் குளவிகள் ஆண் பூக்களிலிருந்து மகரந்த துகள்களை அள்ளிக்கொண்டு அந்த துளைகளின் வழியாக பழங்களிலிருந்து வெளியேறி வேறு பெண் பூக்களுக்கு கொண்டு சென்று மகரந்த சேர்க்கைக்கு உதவும். 

பரவி இருக்கும் இடங்கள்

 தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

 ஆந்திரப்பிரதேசத்தில் அனந்தப்பூர், சித்தூர், கடப்பா, கிழக்கு கோதாவரி, குண்டூர், கிருஷ்ணா, கர்னூல், நெல்லூர், பிரகாசம், ஸ்ரீகாக்குளம், விசாகப்பட்டினம், விஜயநகரம், மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. 

 கர்நாடகாவில் பெங்களூரு, விஜயபுரா, கோலார், உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களிலும் 

கேரள மாநிலத்தில் பாலக்காடு, இடுக்கி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இருக்கின்றன.

ஒரிசாவில் கஞ்சம், சம்பல்பூர், மற்றும் பூரி மாவட்டத்திலும் காணப்படுகின்றன. 

திருநின்றவூரில் ஆனந்தீஸ்வரர்

சிவன் கோவில் தல மரம்

கடலூர் மாவட்டத்தில் திருக்கூடலையாற்றூர், திருவள்ளூரில் திருநின்றவூர், மற்றும் மதுரையில் திருப்பரங்குன்றம்.

திருக்கூடலையாற்றூர் என்ற இடத்தில் நர்த்தன வல்லபேஸ்வரர் என்ற சிவன் கோவிலிலும் திருநின்றவூரில் ஆனந்தீஸ்வரர் சிவன் கோவிலிலும்திருப்பரங்குன்றத்தில் சக்தி கிரீஸ்வரர் சிவன் கோவிலிலும்மற்றும் சுப்ரமணிய சுவாமி  முருகன் கோவிலிலும் இது தலமரமாக உள்ளது.

கல் ஆலம் கனிகள்  இலைக் கணுக்களில் இரட்டைக் காய்களாகத் தோன்றும். காம்புகள் இருக்காது. பழங்கள் கோள வடிவத்தில் இருக்கும் பழங்கள் அதிகமான சதைப்பற்று உடையதாக இருக்கும். பழுப்பு நிறப் பழங்களை நுட்பமான ரோமங்கள் மூடியிருக்கும்.

திருஞான சம்பந்தரும் சுந்தரரும் பல இடங்களில் தேவாரத்தில் பல பாடல்களில் கல்லால் நிழல் பற்றி  பெருமையாக பலப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

அதுபோல திருமூலர் அவர்கள் தனது திருமந்திரத்தில் இது பற்றிய ஒரு அருமையான பாடல் பாடியுள்ளார். 

"விரைந்து அன்று  நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து 

புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன 

பரம் தன்னை  ஓராப் பழி மொழி யாளர்

உரம் தன்மை ஆக ஒருங்கி  நின்றார்களே !" 

-       திருமூலர் - 2087

முன்காலத்தில் கயிலாயத்தில் கூட கல் ஆலமரத்தின்  நிழலில்தான் முனிவர்களுக்கு கூட்டங்கள் நடந்திருக்கின்றன. சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கு அறக்கடவுள் ஒரு கூட்டம்  நடத்தினார். அதுவும் கல் ஆலமரத்தின்  நிழலில்தான்  நடந்தது. ஆனால்  அறக்கடவுள் உபதேசித்த சிவத்தை உணராமல் அவர்கள் ஒன்றுபட்டு நின்றார்கள் என்று சொல்லுகிறது மேலே இருக்கும் திருமூலரின் பாட்டு. 

மருத்துவ பயன்கள்  

கல்ஆல மரத்தின் இலைகளை அரைத்து கூழாக்கி, உடலில் தோன்றும் கட்டிகள் மீது தடவுவதன் மூலம் அவற்றைக் குணப்படுத்தலாம்.

இதன் பட்டைகளை அரைத்து கூழாக்கி அதனை வெட்டுக்காயங்கள் மற்றும் இதர காயங்களில் தடவுவதன் மூலமாக அவற்றை குணப்படுத்த முடியும்.

பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் பழைய மதிற் சுவர்களின் ஊடாக வளர்ந்து இருக்கும்  கல்ஆல மரங்களின் விழுதுகளை நாம் பார்த்திருப்போம்.  

கல் ஆலமரங்களில் குறைவான அளவே விழுதுகள் வளர்ந்திருக்கும் 

கல் ஆல மரங்களில் இதன் கட்டைகள் உறுதி தன்மை குறைவாக இருக்கும். இவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை துவும் கிடைக்கவில்லை.

ஓர் உதவி !

உங்கள் ஊரில் பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் பழைய மதிற் சுவர்களின் ஊடாக அல்லது பனை மரங்களை கட்டிப்பிடித்தபடி இருக்கும் கல்லத்தி மரங்களைப் பார்த்தால் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். இதுதான் எனது வாட்ஸப் நம்பர் 8526195370.

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...