எண்பது இருபது
அணுகுமுறை
EIGHTY TWENTY
PRINCIPLE
BY RICHARD COACH
("பிசினஸ் கிளாசிக்" என உலகம் முழுக்க கொண்டாடும் நூலின் சாராம்சங்கள் 10)
(சுயமாக முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்கள் இதனை படிக்க வேண்டாம்)
நீங்கள் பானை விற்கலாம், ஆனை விற்கலாம், கிழங்கு சேனை விற்கலாம் நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு உதவும் இது.
இந்த நூலை எழுதியவர் ரிச்சர்ட் கோச் என்பவர் இதுவரை 18 நூல்களை எழுதியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த "The 80/20 Principle" இன்னும் இந்த புத்தகத்தை சர்வதேச வியாபார உலகம் பிசினஸ் கிளாசிக் என கொண்டாடும் நூல் இது.
இதன் சாராம்சத்தை 11 செய்திகளாக உங்களுக்கு தந்திருக்கின்றேன்.
வில்பிரீடோ பரிட்டோ (Wilfredo Pareto) எனும் இத்தாலிய பொருளாதார நிபுணர்தான் இந்த 80/20 எனும் அணுகுமுறையைக் கண்டுபிடித்தவர்.
1.உங்களுக்கு சொந்தமான 80 சதவீதம் முட்டைகளை ஒரே கூடையில் வைத்து அதனை சரிவர பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டைகளை பல கூடைகளில் பிரித்து வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு பழமையான கருத்து.
2.தொலைபேசி மூலமாகப்பேசி சிறு சிறு
விற்பனை செய்வதை விட, முகத்துக்கு முகம் பேசி பெரிய விற்பனை சாதிக்கலாம். அயிரை மீன்
பிடிப்பதில் கவனம் செலுத்துவதை விட சுறா மீன் பிடிக்கும் சூட்சுமத்தை கற்க
வேண்டும்.
3.அதிக பயன் தரும் அல்லது அதிக லாபம் தரும் காரியங்களில் அதிக கவனம் செலுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.நாம் எலிவேட்டையைத் தவிர்த்து புலி வேட்டையைக் கையில் எடுக்க வேண்டும்.
4.புதியதாக நீங்கள் கண்டுபிடித்த சரக்கு பாதி வெளியில் இருந்து பெறப்பட்ட சரக்கு மீதி.இந்த இரண்டையும் உங்கள் சொந்த பாத்திரத்தில் போட்டு கடைந்தால் ஒரு புதிய சரக்கு அல்லது சேவை கிடைக்கும். புதிய சரக்கு அல்லது சேவைக்கு எப்போதுமே மரியாதை அதிகம். இப்படித்தான் உலகத்தில் எல்லா கண்டுபிடிக்களும் உருவாயின.
5.ஒரு வேலையை அல்லது ஒரு தொழிலைத் தேர்வு செய்வதற்கு 80 /20 அணுகுமுறை சொல்லித் தருகிறது.மதில் மேல் பூனை போல முடிவு எடுக்கத் தடுமாற வேண்டாம்.
6.நமது 20% வாழ்க்கை தான் 80% மகிழ்ச்சியை அல்லது கவலை இல்லாத வாழ்க்கையைத் தரும்.
7.நாம் செலவிடும் 80% நேரம் அல்லது காலம்தான் 20% மகிழ்ச்சியைத்தான் தரும்.
8.உங்களுக்கு எதையும் சரியாகத் தேர்வு செய்ய முடிவெடுக்க இந்த அணுகுமுறை உதவுகிறது.
9.அதிக மதிப்புள்ள காரியங்களில் செய்வதில் உங்கள் அதிகபட்சமான நேரத்தை செலவிடுங்கள். அதுதான் மாற்றங்களை கொண்டு வரும். உங்கள் வாழ்க்கையை மாற்ற உதவும். உங்கள் இலக்கின் உச்சத்தை அடைய உதவும்.
10.பணிகளை அல்லது வேலைகளைப் பிரித்துக் கொடுங்கள். எல்லாவற்றையும் நானே செய்வேன் என்று அடம் பிடிக்காதீர்கள்.
11.புதிதாக சம்பாதிப்பதை விட இழப்பு ஏற்படாமல் தவிர்ப்பது நல்லது என்பதை உணருங்கள்.
இந்த செய்திகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை சொல்லுங்கள்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.
GNANASURIA BAHAVAN
DEVELOPMENT MEDIA EXPERT
No comments:
Post a Comment