Friday, January 13, 2023

BOOKS MADE NAPOLEON EMPEROR - புத்தகங்கள் உங்களையும் உயர்த்தும் நெப்போலியன்

 

புத்தகங்கள் 

உங்களையும் உயர்த்தும் 

                                               நெப்போலியன்



இளைஞராக இருந்த காலம், போர்த் தளபதியாக இருந்த காலம், மன்னராக இருந்த காலம், நாடு கடத்தப்பட்டு சிறைக் கைதியாக இருந்த சமயம், இப்படி தனது வாழ்நாள் முழுக்க புத்தகங்கள் படிப்பதை தன் விருப்பமாக செய்து வந்தவர் மாவீரன் நெப்போலியன்.

தான் இறந்த பிறகு, தனது புத்தகங்களை யாரிடம் சேர்க்க வேண்டும் என்று உயில் எழுதியவர், உலகிலேயே, நெப்போலியன் ஒருவராகத்தான் இருக்கும். 

அந்தப் புத்தகப்பிரியர் நெப்போலியன் பற்றிய சுவாரசியமான 20 தகவல்களை நான் இங்கு உங்களுக்காக தொகுத்துத் தந்திருக்கிறேன்.

இந்தத் தகவல்கள் ஒவ்வொன்றும் அரிதான தகவல்கள் மட்டுமல்ல சுவாரஸ்யமான தகவல்களும் கூட 

தனது வாழ்நாள் முழுக்க ஒரு நூலகரை சம்பளத்துக்கு வைத்திருந்தார் நெப்போலியன்.

செயின்ட் ஹெலினா தீவிற்கு நாடு கடத்தப்பட்ட போது கூட ஒரு நூலகரை அவர் வேலைக்கு வைத்திருந்தார் என்பது நம்ப முடியாத செய்தி ஆனால் அது உண்மை. 

நெப்போலியன் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணமாக செல்லும்போது கூட பெட்டி பெட்டியாக தன்னுடன் புத்தகங்களை எடுத்துச் செல்லுவார். 

அவருக்குப் பெரும்பாலும் காவியங்கள், கவிதைகள், சரித்திர புத்தகங்கள், மற்றும் நாடகங்கள் அதிகம் பிடிக்கும்.

பிளாட்டோ, சைரோ, டேசிட்டர்ஸ், ப்ளூடார்க், ஹோமர், மற்றும் ஓசியன் ஆகியோர் நெப்போலியனுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்கள். 

அதிலும் குறிப்பாக பிரெஞ்சு மற்றும் இத்தாலிய எழுத்தாளர்கள் என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். 

நெப்போலியன் தனது சிறுவயதில் தி ஹிஸ்டரி ஆப் தி ரெவல்யூசன் ஆப் இத்தாலி என்ற சரித்திர நூலை விரும்பிப் படித்தார். அதனை எழுதிய எழுத்தாளர் தான் கார்லோ டெனினா என்பவர். அவர்தான் 1804 ஆம் ஆண்டு நெப்போலியன் இடம் நூலகராக பணியாற்றினார்.

நூலகராக இருப்பவர்கள் நெப்போலியனின் கூப்பிட்ட குரலுக்கு பதில் சொல்ல வேண்டும். அவர் விரும்பும் புத்தகங்களை படித்துக் காட்ட வேண்டும். புதிதாக வந்திருக்கும் புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். சில புத்தகங்களில் என்ன இருக்கு என்று எடுத்துச் சொல்ல வேண்டும். சில புத்தகங்கள் சொல்லும் செய்திகளை சுருக்கமாக சொல்ல வேண்டும். வெளியூர் போகும் போது பெட்டி பெட்டியாக புத்தகங்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். 

புத்தகங்களை எடுத்துச் செல்ல ஆரம்ப காலங்களில் மகோகனி மரங்களில் செய்த பெட்டிகளையும் அதன் பின்னர் தோல் பெட்டிகளையும் பயன்படுத்தினார். 

1814 ஆம் ஆண்டு ல்பா என்ற தீவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார். அங்கும் அவர் ஒரு நூலகத்தை அமைத்துக்கொண்டார்.

கடைசியாக 1815 ம் ஆண்டு அவர் செயின்ட் ஹெலினா என்ற தீவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கும் அவர் பிரம்மாண்டமான ஒரு நூலகத்தை  அமைத்திருந்தார். 1821 ஆம் ஆண்டான இறுதி நாள் வரை ஆறு ஆண்டுகள் அங்கு தான் தன்னுடைய புத்தகங்களை வாசித்தபடி வசித்து வந்தார்.

நெப்போலியன் போருக்கு செல்லும்போது கூட ஒரு நூலகம் கூடவே செல்ல வேண்டும்.ப்படி ஒரு மொபைல் நூலகத்தை வைத்திருந்தார். அதில் மதநூல்கள், உலக மகாக் காவியங்கள்,  நாடகங்கள், கவிதைகள், கதைப் புத்தகங்கள், சரித்திரப் புத்தகங்கள் என குறைந்தபட்சம்  ஆயிரம் புத்தகங்கள் அதில் இருக்க வேண்டும். 

புத்தகங்களை பெட்டிகளிலிருந்து எடுப்பது, தூசு தட்டுவது, ஒட்ட்டை நீக்குவது, அவற்றைப் பிரிப்பது, அடுக்குவது, இப்படி எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காமல் விரும்பிச் செய்வார். பணியாளர்கள் தான் அதனை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்.

அவருடைய நண்பர்கள் அவரைச் சந்திக்க வரும்போது அவருக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி வந்து பரிசாக தந்து அவரை மகிழச் செய்வார்கள். அவரிடம் ஒரு புத்தகத்தை பரிசாகத் தந்து விட்டு ஒன்பது  உதவி கேட்டாலும் செய்வாராம்.

கிரேக்க மற்ற ரோமானிய சரித்திரம் குறித்த புத்தகங்கள் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். முக்கியமாக ப்ளூடார்க் என்ற சரித்திர ஆசிரியர் எழுதிய புத்தகங்கள்தான் அடிக்கடி அவர் கைகளில் இருக்குமாம். 

தன்னை பார்க்க வரும் நண்பர்கள் அல்லது பார்வையாளர்களை உட்கார வைத்து தான் ரசித்த புத்தகங்களை படித்துக் காட்டுவார். அல்லது வேறு யாரையாவது படிக்க சொல்லி கேட்பார். இது அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி 

சிலர் அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும் குடிப்பார்கள், அதிக்க் கவலையாக இருந்தாலும் குடிப்பார்கள். அதுபோல நெப்போலியன் அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும் புத்தகம் படிப்பார் அதிகம் கவலையாக இருந்தாலும் புத்தகம் படிப்பார். 

னெப்போலியன் இறக்கும் தருவாயில் தனக்கு பின்னர் தனது மகன் இரண்டாம் நெப்போலியனுக்கு, தன்னுடைய புத்தகங்கள் எல்லாம் சேர வேண்டும் என்று ஒரு உயிர் எழுதி வைத்தார்.

எல்லோரும் தான் சம்பாதித்த வீடுவாசல்களை, நிலபுலன்களை, தோட்டம் துறவுகளை, சொத்துபத்துக்களை வாரிசுகளுக்கு உயில் எழுதி வைப்பார்கள்.

ஆனால் உலகத்திலேயே நெப்போலியன் ஒருவர் தான் சம்பாதிதப் புத்தகங்களை யாருக்கு சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார்.

புத்தகப் பிரியன் நெப்போலியனின் கல்லறை ஒன்று செயின்ட் எலினா தீவில், பைன் மரங்கள் அடர்ந்த சோலையாக இருக்கிறது. ஆனால் அதில் நெப்போலியன் உடல் இல்லை. பாரிசில் ஒரு இடத்தில் அடக்கம் செய்திருப்பார்கள்.

நெப்பொலியன், அந்தி சந்தி எந்த நேரத்திலும் புத்தகங்களுடன் இருக்கத்தான்  பிடிக்கும் என்பதைப் பார்த்தோம்.. 

அவர் புத்தகங்களை வாசிக்கவில்லை அவர் புத்தகங்களுடன் வாசம் செய்தார் என்பதுதான் சரி 

சராசரி மனிதனான நெப்போலியனை சகல அதிகாரம்படைத்தச் சக்கரவர்த்தியாக மாற்றியது புத்தகங்கள்தான் என்று   நெப்போலியன் நம்பினார். 

சாமானியர்களையும்  சக்கரவர்த்திகளாக மாற்றும் சக்தி படைத்தவை புத்தகங்கள் மட்டுமே.

புத்தகங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு சொல்லுங்கள். 

D.GNANASURIA BAHAVAN

SELF-DEVELOPMENT MEDIA PERSONNEL

THEKKUPATTU, TAMILNADU, INDIA

Email:gsbahavan@gmail.com

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...