Friday, January 13, 2023

BOOKS MADE HIM ALEXANDER THE GREAT - உலகை வெல்ல புத்தகங்கள் கைகொடுக்கும்

 

உலகை வெல்ல 

புத்தகங்கள் கைகொடுக்கும்


                    மாவீரன் அலெக்சாண்டர்

ஒரு கையில் காவியப்புத்தகங்களையும் இன்னொரு கையில் உருவிய வாளுடனுடனும் இந்த உலகை வென்றவன் மாவீரன் அலெக்சாண்டர்.

அலெக்சாண்டர் அலெக்சாண்டருக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்கள் என்பவை இரண்டு ஒன்றுல்லியட் இன்னொன்று அனாபிசிஸ் என்னும் காவியங்கள்.

இல்லியாட் அலெக்சாண்டருக்கு ஆன்மீக ரீதியான வழிகாட்டி. ஒரு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லித் தந்தது.

பெர்சியாவின் நிலப்பரப்பு, அதற்கு எப்படி செல்லலாம், என்ற வழி வகைகளை எல்லாம் அனாபேசிஸ் என்ற காவியம் சொல்லி தந்தது.

அலெக்சாண்டர் புத்தகப் பிரியனாக ஆனதற்குக் காரணம், அவனுடைய குருநாதர் காரணம் அரிஸ்டாட்டில். பிளாட்டோவின் மாணவர் சாக்ரடீஸ் சாக்ரடீஸ் இன் மாணவர் அரிஸ்டாட்டில் அரிஸ்டாட்டிலின் மாணவர் அலெக்ஸாண்டர்.

ஆக அலெக்சாண்டர் ஞானிகளின் வரிசையில் வந்தவன், அவர்கள் நூலேந்த்யப் போராளிகள், அலெக்சாண்டர் நூலோடு வாளும் ஏந்திய போராளி.

அலெக்சாண்டர் தனது குரு அரிஸ்டாட்டிலை அரை கடவுளாகவே நம்பினான். 

தனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் அன்பளிப்பாய் பெருங்கவிஞன் ஹோமர் எழுதிய இலியாட் காவிய நூலினை தூங்கும்போது கூட தனது தலையணைக்கு அடியில் வைத்திருப்பானாம் அலெக்ஸாண்டர்.

ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் அவருடைய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இலியட் நூலில் இருந்து ஒரு பகுதியை அலெக்ஸாண்டருக்கு விளக்கி சொல்லுவார்அதைக் கேட்ட பிறகுதான் அவனுக்கு தூக்கம் என்பதே.

ஆக தூங்கும்போது கூட புத்தகங்களை வாசிக்கவும் நேசிக்கவும் விரும்பியவன் அலெக்சாண்டர்.

“இல்லியாட்” என்பது ரோமாபுரியை சேர்ந்த கவிஞர் ஹோமரால் எழுதப்பட்ட காவியம். அது 24 பாகங்களை உள்ளடக்கியது. ரோமானிய வீரன் அக்கிலஸ் (ACHILLES)  பற்றிய வீரகாவியம். அது டுரோஜான் நாட்டில் நடந்த  போர் பற்றிய வீர காவியம்.

டுரோஜான் போரில் அந்த நாட்டு வீரன் ஹெக்டர் (HECTOR) என்பவன் எப்படி போர் செய்தான்? எப்படித் தனது மக்களைப் போரில் இருந்து பாதுகாத்தான், என்று சொல்வது தான் இந்த ரத்தவாடை வீசும் ஹோமரின் கவிதைகள்.

கிரேக்கர்களுக்கும் டுரோஜான்களுக்கும் இடையே பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்தப் போரில் மாவீர்ர்கள் அக்கிலஸ் மற்றும் ஹெக்டர் இருவருமே கொல்லப்படுகிறார்கள். 

இனிய காவியத்தை எழுதிய ஹோமர் கிரேக்கநாட்டின் மிகவும் பிரபலமான கவிஞர், இலியட் மற்றும் ஒடிசி என்ற இரண்டு காவியங்களை அவர் எழுதினார். ஹோமர் இரட்டைக் காப்பியங்களை எழுதிய கிரேக்க நாட்டு இளங்கோவடிகள்.

சீனோபோன் என்ற அறிஞர் உரைநடையாக ஏழு தொகுதிகளாக எழுதிய நூல்தான் அனாபேசிஸ். சீனோபோன் கிரேக்க நாட்டின் தத்துவஞானி, வரலாற்று ஆசிரியர், மற்றும் போர் வீரர். இவரும் சாக்ரடீசின் மாணவர் கூட.

வாழ்க்கை என்றால் என்ன என்று புரியும் பருவத்திற்கு

முன்னதாகவே தனது 25 வயதிற்குள், இந்த உலகத்தையே தனது

குடையின் கீழ் கொண்டுவந்த அலெக்சாண்டருக்கு

 கைகொடுத்தது  புத்தகங்கள்

 என்பது ஆச்சரியமான செய்தி.

please write your comments

D.GNANASURIA BAHAVAN

gsbahavan@gmail.com


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...