Saturday, January 28, 2023

SPERM COUNTS INCREASING HERB - மூலிகைச்செடி காரை

 

மூலிகைச்செடி 

காரை

(Canthium coromandelicum)


எட்டி மரம், இலவமரம், இன்டஞ்செடி மற்றும் காரைச்செடிகள் படர்ந்திருக்க பிணங்களைச் சுட்ட சுடுகாட்டில் சூழ்ந்துள்ள கள்ளிக்காட்டில் சிதறிக் கிடந்த குடல்களை பேய், நரி என கவ்விச் செல்ல,  பிணங்கள் செறிந்துள்ள இடுகாட்டில் பறை போன்ற கண்களை உருட்டி விழிக்கும் பேய்கள் மத்தளம் கொட்டவும், பூதங்கள் பாடவும் திருவாலங்காட்டில் இறைவன் திருநடனம் புரிந்ததை காரைக்கால் அம்மையார் கவிதையில் காட்சிப் படுத்தியுள்ளார். 

காரைக்கால் அம்மையார் இறைவனின் திருவாலங்காட்டு திருநடனத்தை வியந்து பாடுவதாக அமைந்த கீழ்கண்ட பாடலில் காரை செடிகளைப் பற்றி எப்படி குறித்துள்ளார் என்று பாருங்கள்.

 “எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்

சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர் கௌவப்பட்ட 

பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட் பேய்

 கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே  (பதிகம் 2:1) “

களாகுருவிப்பழம், குட்டிப்பலாசங்கன் செடிகள் செடிகள்  இவற்றோடு காரை முட்செடிகள் வளர்ந்து கிடப்பதை கிராமங்களில் பார்க்கலாம். காது மூக்குக் குத்த வேண்டும் என்றால் கொண்டா ஒரு காரை முள் என்று இன்றும்கூட கிராமங்களில் குரல் கொடுப்பார்கள்.

காரைச்செடியின் பல மொழிப் பெயர்கள 

 தமிழ் பெயர்: நல்ல காரைகுதிரம், செங்காரை (Nallakarai, Kuthiram, Sengarai)

 மராத்தி: கிர்மா, கட்பார் (Kirma, Kadbar)

 மலையாளம்: கன்டன்கராநிரூரி, செருகரா (Kantankara, Niruri, Serukara)

தெலுங்கு: சின்னபாலுசு, பாலுசு (Chinnabalusu, Balusu)

கன்னடா: கரிமுள்ளி, ஒல்லிபொடி)

ஒரியா: டுட்டிடி (Tutidi)

 கொங்கனி: காயிலி (Kayili) சமஸ்கிருதம்: நாகபாலா (Nagabala)

 பொது பொதுப்பெயர்:  கோரமண்டல்  கேன்தியம்  ( Coramandel Cantheum)

 தாவரவியல் குடும்பம்: ரூபியேசி (Rubiaceae 

 இது ரூபியேசி என்னும் காப்பி குடும்பத்தைச் சேர்ந்தது.

 காரைச் செடிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியுள்ளன. 

தமிழ்நாட்டில் பரவியிருக்கும் மாவட்டங்கள். கோயம்புத்தூர், திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் வேலுர்

ஆந்திர பிரதேசத்தில் அனந்தபூர், சித்தூர், கடப்பா, குண்டூர், கிருஷ்ணா, கர்னூல், நெல்லூர், பிரகாசம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜயநகரம், மற்றும் வெஸ்ட் கோதாவரி 

தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டாகம்மம் மற்றும் மெக்பூப்நகர். 

கர்நாடக மாநிலத்தில் பல்லாரி, சாம்ராஜ்நகர், மற்றும் கோலார். 

கேரள மாநிலத்தில் காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், மற்றும் திருவனந்தபுரம். 

 மகாராஷ்டிராவில் அக்கோலா மாவட்டம், ஒரிசா மாநிலத்தில்  பரவியிருக்கும் மாவட்டங்கள் அங்குல், பலாசோர், பர்கார், பொலாங்கீர், பவுத், கட்டாக், தியோகார், தென்கானல், கஜபதி, கஞ்சம், கல்கண்டி, ந்தமால், கேந்திரப்பரா, கியோஞ்கார், குர்தா, கோராபுட், மல்காங்ரி, மயூர்பஞ்ச், பூரி, ராய்கடா, சம்பல்பூர், மற்றும் சுந்தர்பூர்.

 சர்வதேச அளவில் இந்தியா, இந்தோசைனா, மலேசியா, ஸ்ரீலங்கா, ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

 பூக்கள் சிறியதாக இருக்கும் பசுமையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும். 

 இதன் காய்கள் பசுமையாக இருக்கும் காய்கள் முதிரும் பொழுது மஞ்சள் நிறமாக மாறிவிடும் பழங்கள் ஒரு சென்டி மீட்டர் விட்டமுடையதாக இருக்கும். 

காரை செடிகள் ஏப்ரல் முதல் ஜனவரி வரை சுமார் 10 மாதங்கள் கழித்து கனிகளாக மாறும். 

காரை செடிகளில் இந்திய கிராமங்களில் மிகவும் சாதாரணமாக தரக்கூடிய ஒரு முள் செடி. கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் இதன் பழங்களை பறித்து சாப்பிடுவார்கள்.

 காரை செடிகளிலிருந்து பழங்களை வைக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதன் முட்களிலிருந்து தப்பிக்க முடியாது. இதன் முட்கள் மிகவும் உறுதியானவை. நீளமானவை. கூர்மையானவை.

 காரைச் செடிகள் அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மூலிகைச்செடிகள் என்று சொல்கிறார். 

 காரை செடிகளின் இலைகளில் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம் காரை சிறைகளை கீரையை தொடர்ந்து சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது கணிசமாக என்று சொல்லுகிறார்கள். 

 காரைச்செடி  ஒரு முட்செடி என்று சொன்ன காலம் மாறிவட்டது. தற்போது அது ஒரு கீரை செடி. அதுவும் சத்துள்ள கீரைச் செடி. இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தச் செடி. உடல் உபாதைகளை நீக்கும் மூலிகைச் செடி என்று சொல்கிறார்கள்.

 உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற டானிக்காக இதை பயன்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள். 

 உயர் ரத்தஅழுத்தநோய் சர்க்கரைநோய், காய்ச்சல், செரியாமை, வயிற்றுப்போக்கு, கருத்தரிக்காமை, விந்துவில் உயிர் அணுக்கள் குறைவாக இருத்தல், போன்றவற்றையெல்லாம் குணப்படுத்த காரை செடியினை மூலிகையாகப் பயன்படுத்துகிறார்கள்.

 காரை செடியின் வேர்களை மைய அரைத்து கூழாக்கி அதனை பாலுடன் சேர்த்து குடிக்க கொடுத்து  பாம்புக் கடியை குணப்படுத்த முடியும் என்று சொல்லுகிறார்கள்.

குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த இதன் பழங்களை சாப்பபிடத்  தருகிறார்கள். 

 காரைச்செடியின் பட்டைகளை அரைத்து கூழாக்கி அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சேர்த்து அதனை தலையில் பற்றுப் போட எப்படிப்பட்ட கடுமையான தலைவலியையும் காணாமல் போகும்.

 இது ஒரு புதர்ச்செடி. இதன் சிம்புகளில் எதிரெதிர் திசையில்  முட்கள் இருக்கும். இந்த மக்கள் இலை கணுக்களுக்கு  மேலாக அமைந்திருக்கும்.

சில சமயங்களில் இந்த சிம்புகள் முட்கள் இல்லாமலும் இருக்கும். 

இலைகளின் நீளமான வட்டவடிவில் இருக்கும். தொட்டுப்பார்த்தால்  இலைகள் மெத்தென்று இருக்கும். 

 பூக்கள், இலைக் கணுக்களில் தோன்றும். சிறியதாக இருக்கும் மஞ்சள் நிறமாக இருக்கும். ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பூக்கும்.

 தாய்நாடு: இந்தியா 

காரை செடி என்பது ஒரு ஒரு சிறு மரம் இது. சுமார் இரண்டடி உயரம் வளரும். இதன் இலைகளை ஆடுகள் விரும்பி சாப்பிடும். இதன் பழங்கள் முற்றிய நிலையில் தேன் நிறத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு இவை இனிப்பாக  இருக்கும். பழங்கள் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்று சித்த மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

 ஒரு காலத்தில் காரைச் செடிகள் அதிகம் இருந்ததால் தான் அதற்கு காரைக்குடி என்று பெயர் வந்தது. காரைச் செடிகளை நீக்கித்தான்  மக்கள் வாழும் இடமாக மாற்றினார்கள். அதனால்தான் அற்கு காரைக்குடி என்று பெயர் வந்தது. 

நாம்  மறந்துபோன செடிகளை எல்லாம், மருந்து கம்பெனிகள், அள்ளி எடுத்து அம்சமான மாத்திரைகளாக நமக்கு மாற்றித் தருகிறார்கள். நாம் மறுபடியும் இந்த மரங்களை செடிகளைத் தேட ஆரம்பித்துள்ளோம். அப்படி காரைச்செடியையும் நாம் கவனத்திற்கு வருமா என்று உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். 

பூமி ஞானசூரியன்

Friday, January 27, 2023

TSUNAMI SHIELDING TREE MANGROVE - சுனாமியைத் தடுக்கும் மரவகை கண்டல்



(Kandelia Candel)


சுனாமியின் உயரமான அலைகளையும் அவற்றின்   வேகமான அலைகளையும்  தடுக்கும் ஒரே சாதனம், மீன்கள், இறால், நண்டு மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை, பெருக்குவது அலையாத்தி மரங்கள்தான். கண்டல், பூக்கண்டல், துவர்க்கண்டல் என்று அழைக்கப்படும், சுனாமியைத் தடுக்கும்  அலையாத்தி மரம், 10 மீட்டர் உயரம் வரை வளரும், தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் மரம், அரிதான அலையாத்தி மரவகைமரக்கட்டையாக, சிறந்த விறகாக, கரிகள் உற்பத்திச்செய்ய, வீடுகள் மற்றும் தட்டிகள் கட்ட, இப்படி கடலோரச் சமூகத்தினரையும், கடலோரச் சூழலையும்  பாதுகாக்கவும், பயன்படும் மரம். 

பட்டைகள் முரட்டுத் தோல்களைப் பதனிட உதவும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சாயம் ஏற்ற உதவும், இதில் 17 சதவிகிதம் டேனின் சத்து அடங்கியுள்ளது.

தமிழ் பெயர்கள்: கண்டல், பூக்கண்டல், துவர்க்கண்டல் (KANDAL, PUKKANDAL, THUVAR KANDAL)

பொதுப்பெயர்: NARROW LEAVED KANDELIA, DICHOTAMOUS CYMED MANGROVE

தாவரவியல் பெயர்: கண்டேலியா கேண்டல் (Kandelia Candel)

தாவரக்குடும்பம்: ரைசோப்போரேசி (RHIZOPHORACEAE)

பிற மொழிப் பெயர்கள்:

பெங்காலி: குரியா (GURIA)

கன்னடா: கண்டேல் (KANDALE)

மலையாளம்; செரு-அன்டெல்(CHERU-ANTEL)

மராத்தி: கண்டல் (KANDAL)

ஒரியா: ரசூனியா(RASUNIA)

தெலுங்கு: கண்டிகலா, துவர்கண்டன் (KANDIKALA, THUVARKANDAN) 

பரவி இருக்கும் இடங்கள் 

தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, மேற்கு இந்தியா முதல் போர்னியோ வரை, மற்றும் வியட்னாம் முதல் ஜப்பான் வரை கடலோரப் பகுதிகளில், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மலெசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில்  இந்த வகை மரங்கள் பரவியுள்ளன. முக்கியமான இன்னொரு சிறப்பு, இவை எல்லாம் மாங்குரோவ் மரங்கள் இருக்கும் இடங்கள்  

பண்புகள்:

மாங்குரோவ் அல்லது அலையாத்தி மரங்கள் வளரும் இடங்களுக்கு மூன்று அடிப்படை பண்புகள் இருக்கும். ஒன்று வெதுவெதுப்பான தட்பவெப்பநிலை, இரண்டாவது உப்புத்தன்மையுடன் கூடிய சூழல் மற்றும் எப்போது நீர் கோர்த்தபடி இருக்கும் சதுப்பு நிலம்.

தாவர  வகைப்பாடு: புதர்ச்செடி / குறுமரம்

தாவரப்பண்புகள்

மரம்: சிறிய மரம், 10 மீட்டர் அல்லது சுமார் 30 அடி உயரம் வரை வளரும், சாம்பல் நிறம் முதல் சிவப்பு மற்றும் காவி  நிறத்தில்இருக்கும். பருத்த அடிமரம், மற்றும் மூச்சு வேர்கள் இந்த வகை மரத்தில் இல்லை.   

இலைகள்: எதிரெதிர் அமைந்த இலைகள், இலைப் பரப்பு பளபளப்பாக இருக்கும், இளம் பச்சை நிறமாக இருக்கும், நீண்ட கோள வடிவில் இருக்கும்,

ரைசோபோரேசி தாவர குடும்பம்

இந்த குடும்பத்தில் 147 வகை தாவர இனங்கள் உள்ளன, இதில் அலயாத்தி மரவகைகளும் உள்ளன, இதர மரவகைகளும் உள்ளன. அலையாத்தி மரவகைகளில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன, அவை ரைசோபோரா, கண்டேலியா, மற்றும் ப்ருகுயெரா (RHIZOPHORA, KANDELIA, SEIOPS, BRUGUIERA). அதிக உப்புத்தன்மையை தாங்கும் திறன், மூச்சு வேர், கன்றுகளை உற்பத்தி 

பூக்கள்: வெண்மையான பூக்கள், எண்ணற்ற மகரந்த்த் தாள்களுடன் இருக்கும்,

விதைகள்: 25 முதல் 40 செ.மீ. கன்றுகளாக உற்பத்தி செய்யும்

வளரும் இடம்: அலை வீசும் ஆற்றங்கரைகள், மற்ற அலயாத்தி தாவர வகைகளுடன் வளர்வதைப் பார்க்கலாம். ஆனால் இதனை அரிதான அலையாத்தி மரவகை என குறிப்பிடுகிறார்கள்.

தோல் பதனிடலாம்

மரக்கட்டைப் பயன், சிறந்த விறகு மரம், கரிகள் உற்பத்தி செய்யலாம், வீடுகள் மற்றும் தட்டிகள் கட்டலாம்.  

பட்டைகள் முரட்டுத் தோல்களைப் பதனிட உதவும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சாயம் ஏற்ற உதவும், இதில் 17 சதவிகிதம் டேனின் சத்து அடங்கியுள்ளது.

மருத்துவப்பயன்களைக் கண்டுபிடிக்க ஆய்வுகள் தேவை.

சிவன் கோயில் கோயில்மரம்

நாகப்பட்டினம் மாவட்டம், மகேந்திரபள்ளி திருமேனி அழகேஸ்வரர் சிவன் கோயிலின் கோயில் மரம்.

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்

உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி காடு என்னும் பெருமைக்கு உரியது பிச்சாவரம் காடுகள் என்று சொல்லுகிறார்கள். இது வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் முகத்துவாரங்களுக்கு இடையே அமைந்துள்ளது  பிச்சாவரம் அலையாத்திக் காடுகள். 

பிச்சாவரம் காடுகளின் அலையாத்தி மரவகைகள், அவிசென்னியா ஆல்பா (Avicennia alba), அவிசென்னியா பலனோபோரா (A.balanophora), அவிசென்னியா பைகலர் (A.bicolor), அவிசென்னியா ஜெர்மின்னஸ் (A.germinans), அவிசென்னியா இன்டெக்ரா(A.integra), அவிசென்னியா மெரினா (A.marina), அவிசென்னியா அவிசென்னியா அஃபிசினாலிஸ் (A.officinalis), அவிசென்னியா (A.schaueriana), அவிசென்னியா (A.tonduzii moldenki). 

பிச்சாவரம் காடுகளின் முக்கிய அலையாத்தி மரவகைகள், ரைசோபோரா முக்ரனேடா(Rhizophora mucranata), ரைசோபோரா (அப்பிகுலேட்டா) (Rhizophora apiculata), ரைசோபோரா மேங்கில் (R.mangle), ரைசோபோரா ஹரிசோனி (R.harrisonii), ரைசோபோரா ரெசிமோசா (R.racemosa), ரைசோபோரா சமோயென்சிஸ் (R.samoensis), ரைசோபோரா ஸ்டைலோசா(R. stylosa). 

சுந்தர்பன் காடுகள்

உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் என்பது சுந்தர்பன் காடுகள். சுந்தர்பன் அலையாத்திக் காடுகள் வங்காள தேசத்தில் உள்ளது.

வங்காளதேசத்தில் பலேஷ்வர் மற்றும் ஹரின்பங்கா ஆறுகளுக்கு இடையே உள்ளது சுந்தர்பன் அலையாத்தி காடுகள். 1,40,000 எக்டர் நிலப்பரப்பில் சுந்தர்பன்  காடுகள் அமைந்துள்ளது.

கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா ஆறுகளின் முகத்துவாரப் பகுதியில் உள்ளது இந்த சுந்தர்பன் அலையாத்திக் காடுகள்.  

மொத்த சுந்தர்பன் அலையாத்தி காடுகளில் 60 சதம் வங்காள தேசத்திலும் 40 சதம் இந்தியாவிலும் உள்ளது.

அலையாத்திக் காடுகள்  சர்வதேச அளவில் 19% இந்தோனேசியாவிலும் 10 % ஆஸ்திரேலியாவிலும், பிரேசில் மற்றும் நைஜீரியாவில் தலா 7% ம் உள்ளன.

அலையாத்தி வகைகள் 

சிவப்பு அலையாத்தி (Rhizophora mangle),வெள்ளை அலையாத்தி (Laguncularia racemosa) , கருப்பு அலையாத்தி (Avicennia germinans), மற்றும் பட்டன்வுட் (Conocarpus erectus)என நான்கு அலையாத்தி வகைகள் உண்டு. 

1076 கிலோமீட்டராக இருக்கும் தமிழ்நாட்டின் கடலோரத்தில் முகத்துவாரப் பகுதியில் அல்லது  உப்பங்கழிகளின் கரையோரங்களில் அலையாத்தி மரங்களை நட்டு வளர்ப்பது, ஏற்கனவே இருக்கும் மரங்களைப் பாதுகாப்பது, பராமரிப்பது. மட்டுமே நம்மை சுனாமி சூறாவளி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும், மீன்கள், இறால், சுரா, நண்டு  ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.  

இந்த செய்தியை  உங்களுக்குத் தெரிந்த கடலோரத்தில் வசிக்கும் மீனவ நண்பர்களுக்கும் இதர நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். இதுபற்றி விளக்கம் அல்லது விவரம் தேவை என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.  

GNANASURIA BAHAVAN DEVARAJ

gsbahavan@gmail.com

 

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...