Thursday, December 1, 2022

WORLD LEADER OF MILK INDUSTRY INDIA


உலகின் பால்கிண்ணம் இந்தியா 



நிறையப் பேருக்குத் தெரியாது, உலகத்தில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் நாடு எந்த நாடு என்று. நாம் உற்பத்தி செய்யும் பால் சீனாவைவிட அதிகமா ? அமெரிக்காவைவிட அதிகமா ? பாலிலிருந்து செய்யும் பால் பொருட்களை யார் அதிகம் உற்பத்தி செய்கிறார்கள். இவை தொடர்பான 18 செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளேன், பாருங்கள்.

1. அகில உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தியா தான். 1950 ஆம் ஆண்டில் 17 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி 2021 ஆம் ஆண்டு 209.96 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. நாம் நமது விவசாயிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

2. இந்திய விவசாயிகளுக்கு ஒரு கண் விவசாயம் என்றால் இரண்டாவது கண் பால் மாடு வளர்ப்பு. உற்பத்தியில் இப்படி உலக சாதனைகளை எட்டும் போது அதற்கு காரணமானவர்களையும் நாம் கவனிக்க வேண்டும். 

4. நமது பால் உற்பத்தி சீனாவைவிட மூன்று மடங்கு அதிகம். அமெரிக்காவைவிட 50 சதம் அதிகம். அதுமட்டுமல்ல பாலிலிருந்து மதிப்புக்கூட்டும் பொருள் உற்பத்தியிலும் உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக யர்ந்துள்ளது இந்தியா 

4. இந்தியாவின் பால் உற்பத்தி ஒரு நபருக்கு 1950 - 51ம் ஆண்டு 130 கிராம் என்று இருந்தது. இரு 2020 - 21 ஆம் ஆண்டில் 427 கிராமாக அதிகரித்துள்ளது.  தோராயமாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 

5. பாலை மதிப்பு கூட்டுவதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு டஜன் பால் பொருட்களை நாம் உற்பத்தி செய்கிறோம்.

6. அவை பட்டர்ஃபிரஷ்,  பட்டர் மில்க், பட்டர் ஆயில்,  ஃபிரஷ் சீஸ்,  மில்க் அண்ட் கிரீம் ன் பவுடர்,  குழந்தைகளுக்கான பால்,  இதர கொழுப்புகள்,  கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், இதர வகை பால் பவுடர்,  பால் மற்றும் நெய்.

7. பால் பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் ஏழு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

8. அவை உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம்,  பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு. 

9. பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் ஏற்றுமதியில் பின்தங்கி இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

10. ஏற்றுமதியில் நாம் பின்னால் இருப்பதற்கு என்ன காரணம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நமது உற்பத்தி தரமாக இல்லை என்று சொல்லுகிறார்கள்.

11. பால் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 2021 22 ஆம் ஆண்டு நமக்கு கிடைத்த வருமானம் ரூபாய் 2928.79 கோடி மட்டுமே. இது மிகவும் குறைவான அளவு

12. நமது உற்பத்தி பொருட்களின் தரத்தினை உயர்த்தி ஏற்றுமதியை அதிகரித்தால் இதைவிட பல மடங்கு நம் நாட்டிற்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

13. 1970 ஆம் ஆண்டு வரை நமது பால் உற்பத்தி 20 மில்லியன் ன்னாக மட்டுமே இருந்தது. 1989 ஆம் ஆண்டு 50 மில்லியன் டன்னாக உயர்ந்தது. 1990 ஆம் ஆண்டு 54.9 மில்லியன் ன்னாக அது உயர்ந்தது.

14. 1985 ஆம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவின் மொத்த நாடுகள் 182 மில்லியன். எருமைகள் 62 மில்லியன். இதில் பால் தரும் பசுக்கள் 56 மில்லியன். எருமைகள் 34 மில்லியன்.

15. தமிழ்நாட்டின் மொத்த கால்நடைகள் 1989 ஆம் ஆண்டின் கணக்குப்படி 9.3 மில்லியன் பசு மாடுகள்,  3.1 மில்லியன் எருமைகள்.

16. தமிழ்நாட்டின் 1991 92 ஆம் ஆண்டின் பால் உற்பத்தி 3.3  மில்லியன் ன்னாக இருந்தது. இந்தியாவில் பால் உற்பத்தியில் தமிழ்நாடு 7 வது இடத்தை எட்டி உள்ளது.

17. 2022 ஆம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவின் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 36.9 மில்லியன்.

18. பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னணியில் இருக்கும் 10 உலக நாடுகளை இப்போது பார்க்கலாம். ஒன்று நியூசிலாந்து, இரண்டு ஜெர்மனி, மூன்று யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, நான்கு  நெதர்லாந்து, ஐந்து பிரான்ஸ், ஆறு பெல்ஜியம், ஏழு  ஆஸ்திரேலியா எட்டு  போலந்து, ஒன்பது அயர்லாந்து, பத்து பெலாரஸ் ஆகியவை. 

அன்பின் இனிய நண்பர்களே, பால் உற்பத்தியில்  முதல் நிலையில் உள்ள நாம் ஏற்றுமதியிலும் முதல் லிலைக்கு வர நாம் என்ன செய்ய வேண்டும் ? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம் ! நன்றி வணக்கம் ! 

பயன்தரும் செய்திகளைப் பகிர்வோம் ! பயன்பலப் பெறுவோம் !

 #MILKPRODUCTION

#COWSBUFFALOS

#INDIALARGESTMILKPRODUCER

#WORD'SLARGEGESTMILKPRODUCER

#WORLDMILKPRODUCTION

#BUTTERFRESHGHEE

#NEWZEALANDMILKEXPORT

#FRESHCHEESE

#MILKCREEMINPOWDER

#CHIDREN'SMILK

#SKIMMEDMILKPOWDER

#WHOLEMILKPOWDRE

#EXPORTOFMILKPRODUCTS

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...