Monday, December 12, 2022

TWO MEGA REVOLUTIONS OF INDIA

 

இந்தியாவின்

இரு புரட்சிகளில் ஒன்று

 

TWO MEGA REVOLUTIONS OF INDIA

இந்தியா இன்று உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் இரண்டு புரட்சிகள். ஒன்று பசுமை புரட்சி. இரண்டு வெண்மை புரட்சி. இரண்டுக்கும் அடிப்படையாக இருந்தவர்கள் கிராமப்புற மக்கள். இன்று நாம் வெண்மை புரட்சிக்கான வேர்களை விசாரிப்போம். சுருக்கமாக அந்த நிகழ்வுகளை பார்க்கலாம்.

இந்தியாவில் நடந்த பால் புரட்சிக்கு காரணமாக இருந்தது யார் ? டாக்டர் வெர்கீஸ் கொரியனை யார் என் டி டி பி (NDDB – National Dairy Development Board ) யின் தலைவராக நியமித்தது ? அது பற்றி எல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. டாக்டர் வர்கீஸ் கொரியன் அவர்களை என் டி டி பி (N D D B) யின் தலைவராக நியமித்ததற்கு காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். 

2.இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் தான் இதனை இவர் கண் விடல் என்று டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களை என் டி டி பி யின் தலைவராக நியமித்தார்.

3.இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பால் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர், அமல் நிறுவனத்தின் நிறுவனராக இருந்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்கள் தான்.

4.இந்தியா பால் உற்பத்தியில் உலகின் முதன்மையான நிலையில் இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரை நாம் உற்பத்தி செய்ததுதான்.

5.இதுதான் நாம் மிகையாக உற்பத்தி செய்யும் பாலை நல்ல விலைக்கு விற்பனை செய்ய உதவியாக இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

6.பசும்பாலுக்குப் பதிலாக எருமை பாலில் இருந்து கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் டாக்டர் குரியன் அவர்கள். 

7. இந்தியாவின் பால் புரட்சி என்று சொல்லும் போது குரியன் என்ற பெயரை நாம் மறக்க முடியாது. அது போலவே இன்னொரு பெயரையும் நாம் மறக்க முடியாது. அவர்தான் எருமைப் பாலில் கொழுப்பு நீக்கிய பால் பவுடர் தயாரிக்க ஏற்பாடு செய்தவர் ரிச்சந்த் மேகா லாயா.

 

7.இந்த இடத்தில் அமுல் கம்பெனி பற்றியும் ஆனந்த் பரிசோதனை முயற்சி பற்றியும் நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். அமுல் என்று ஒரு கூட்டுறவு அமைப்பு இந்தியாவில் ஏற்பட்ட பால் புரட்சிக்கு காரணமாக இருந்தது.

 

8.இந்தக் கூட்டுறவு அமைப்பில் குரியன் செய்த மிகப்பெரிய காரியம் என்பது பால் வியாபாரத்தில் இடைத்தரகர்களை வெளியேற்றியதுதான். நகர்ப்புறங்களில் நுகர்வோர்களையும் கிராமப்புறங்களில் பால் உற்பத்தியாளர்களையும்  நேரடியாக இணைத்தார். 

9. இதன் அடிப்படையில் தான் கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆப்ரேஷன் ஃப்ளட் (OPERATION FLOOD) என்பதன் அடிப்படையான பணி என்பது இந்தக் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கியதுதான்.

9.ஆப்ரேஷன் பிளட் என்பதை முக்கியமான நான்கு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக தொடங்கினார்கள். ஒன்று பால் உற்பத்தியை அதிகரிப்பது. இரண்டு கிராம மக்களின் வருமானத்தை மேம்படுத்துவது. மூன்றாவது பால் உற்பத்தியாளருக்கு நியாயமான விலையை கிடைக்கச் செய்வது. நான்காவது கிராமப்புற வருமானத்தை அதிகரித்து ஏழ்மையைப் போக்குவது. 

10. மிகவும் பழமையான பால் உணவில் முக்கியமானது தயிர் பாலுடன் மோர் அல்லது கொஞ்சம் தயிர் சேர்த்தால் அது தயிராக தயாராகிவிடும். அதனை கிராமத்தில் உறை அல்லது உறைமோர் என்று சொல்லுவார்கள். இயற்கையான சிலவற்றை சேர்த்தும் அந்த காலத்தில் தயிர் தயாரித்திருக்கிறார்கள். உதாரணமாக புரசு மரத்தின் பட்டை மற்றும் இலந்தைப்பழம் ஆகியவற்றைறை மோருக்குப் பதிலாக பயன்படுத்தினார்கள்.

அன்பின் இனிய நண்பர்களே இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்க சிரமம் பாராமல் எனது வலைத்தளத்திற்கு செல்லுங்கள் அதன் லிங்க் www.gnanasuriabahavan.com. 

இந்தப் பதிவில் சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

நன்றி வணக்கம் !

பயன் தரும் செய்திகளை பகிர்வோம் ! பலன் பல பெறுவோம் ! 

பூமி ஞானசூரியன்

#GREENREVOLUTION

#WHITEREVOLUTION

#DR.VARGHESEKURIEN

#LALBAGADHURSHASTRY

#NATIIONALDAIRYDEVELOPMENTBOARD

#OPERATIONFLOOD

#COWSMILK

#BUFFALOMILK

#SKIMMEDMILKPOWDER

#ANANTH

#DRVARGHESEKURIEN

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...