Monday, December 5, 2022

TOP EXPORTING MILK COUNTRY NEWZEALAND

 

நியூசிலாந்து

உலகின் அதிக

பால் ஏற்றுமதி நாடு

 நியூசிலாந்தின் பால்பொருள் கூட்டுறவு நிறுவனம்

 

1. வளர்ந்து வரும் பால் தொழிலைத் திட்டமிட 1923 ஆம் ஆண்டு நியூசிலாந்து டெய்ரி போர்டு (NEW ZEALAND DAIRY BOARD)தொடங்கப்பட்டது.

2.1930 ஆம் ஆண்டு வாக்கில் நியூசிலாந்தில் 500 கூட்டுறவு பால் பொருள் உர்பத்தித் தொழிலகங்கள் செயல்பட்டு வந்தன.

3. 1990 வாக்கில் சிறு தொழிலகங்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நான்கு பெரிய தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்புகளாக உருவாக்கப்பட்டன.

4. நியூசிலாந்து டெய்ரி குரூப், கிவி கோ ஆப்பரேட்டிவ் டெய்ரிஸ், வெஸ்ட் லேண்ட் மில்க் ப்ராடக்ட்ஸ்,  டேட்டூவா கோஆபரேட்டிவ் டெய்ரி கம்பெனி ஆகிவைதான் அந்த நான்கு அமைப்புகள்.

5. 1988 ஆம் ஆண்டு சுழன்று அடித்த சூறாவளிக்கு பிற்பாடு தாரனாக்கி என்ற இடத்திலிருந்து விவசாயிகள் பண்ணைகளில் பல பால் பண்ணைகளாக மாற்றப்பட்டன.

6. 2001 ஆம் ஆண்டு பால் தொழிற்சாலைகளை மறுசீரமைப்பு செய்தது நியூசிலாந்து அரசு,

7. நியூசிலாந்து கோ ஆப்ரேட்டிவ் டெய்ரி கம்பெனியையும் கிவி டைரி கம்பெனியையும் நியூசிலாந்து டெய்ரி போர்டுடன் இணைத்து பாண்டிரா (FONTERRA) என்ற ஜெயண்ட் கம்பெனியை உருவாக்கினார்கள். பாண்டிரா என்பது ஒரு கூட்டுறவு அமைப்பு.

8.இந்த பாண்டிரா என்பது ஒரு கூட்டுறவு அமைப்பது. பால் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வியாபார அமைப்பு.

10. நியூசிலாந்து நாட்டின் 900 விவசாயிகளுக்கு சொந்தமானது. இந்த பாண்டீரா என்ற அமைப்பு ஆச்சரியப்படும்படியான செய்தி.

11.இது உலகத்தின் மொத்த பால் பொருட்கள் ஏற்றுமதியில் பாண்டியராவின் பங்கு மாத்திரம் 30 சதம். உலகின் மொத்த பால் ஏற்றுமதியில் 30 சதம் செய்யும் இதன்ண்டு வருமானம் 22 பில்லியன்.

12. ஃபாண்டியரா என்பது நியூசிலாந்து நாட்டின் கூட்டுறவு பால் கம்பெனி. அந்த நாட்டின் மிகப்பெரிய கம்பெனி. உலகத்தின் ஆறாவது பெரிய கம்பெனியும் கூட.

13. ஃபாண்டிரா கம்பெனியில் வயது 21 ஆண்டுகள். இதனை தொடங்கியது 2001 ஆம் ஆண்டு. இதன் தலைமையகம் நியூசிலாந்தில் ஆக்லாந்து என்ற இடத்தில் உள்ளது.

14. பால், வெண்ணை, சீஸ், யோகர்ட், ஆகியவைதான் இந்த பாண்டிராவின் முக்கியமான பால் உற்பத்தி பொருட்கள்.

15. ஆங்கர், அன்ம்ம், மெயின்லேண்ட்சீஸ், நூட்டியானி,  ஆகியவைதான்  ஃபாண்டிராவின் முக்கிய வியாபார பிராண்டுகள்.

16. ஃபாண்டிரா என்றால் லத்தினிய மொழியில் பொங்கி வழியும் ற்று என்று அர்த்தம். நியூசிலாந்து நாட்டின் மொத்த பால் பொருட்கள் உற்பத்தியில் 95% பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள்.

17. 2005 ஆம் ஆண்டு வாக்கில் ஆஸ்திரேலியாவில் செயல்பட்ட பல உற்பத்தி நிறுவனங்களை விலை கொடுத்து வாங்கியது ஃபாண்டிரா

இப்படித்தான் திட்டமிட்டு வளர்ந்துதான் இன்று உலகில் பால் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது, நியூசிலாந்து. பால்தொழில். 

பால் உற்பத்தியில்  இந்தியாவுக்குப் பின்னால் இருந்தாலும் ஏற்றுமதியில் நியூசிலாந்து முன்னால் இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். 

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம், நன்றி வணக்கம். 

பயன்தரும் செய்திகளைப் பகிர்வோம் ! பலன்பலப் பெறுவோம் !

பூமி ஞானசூரியன்.

 

#NUMBERONEMILKEXPORT

#NEWZEALAND

#SUSTAINABLEDAIRYING

#MILKEXPORTPRODUCTS

#POPULARMILKBRANDS

#ANCHORANMUMANLENE

#MAINLANDCHEESENUTIANI

#COOERATIVEDAIRYINDUSTRY

#CHEESEYOGURTICECREAM

#BUTTERGHEE


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...