Tuesday, December 13, 2022

SUPER-MAN OF WHITE REVOLUTION KURIEN

 

வெண்மைப்புரட்சியின் தந்தை குரியன்

SUPER-MAN  OF WHITE REVOLUTION

KURIEAN THE GREAT

 

வர்கீஸ் குரியன், திருபுவன்தாஸ் பட்டேல், ஹரிசந்த் மேகா தலாயா

இந்த நாட்டின் வளர்ச்சி பணிகளில் ஆர்வம் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம் !

இன்று உலகில் உள்ள 196 நாடுகளில் அதிகமான பால் உற்பத்தி என்னும் கிரீடத்தை இந்தியா சூடுதற்கு காரணமான மாமனிதர், இந்தியாவின் தனி நபருக்கான பால் தேவையை இருமடங்காக உயர்த்த காரணமாக இருந்தர், இந்தியாவில் வெண்மை புரட்சி என்று சொல்லும் அளவுக்கு பால்உற்பத்தியைப் பெருக்குவதற்கு காரணமாக இருந்தவர், முல் என்ற பெயரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த அற்புதர், டாக்டர் வர்க்கீஸ் குரியன்.  

 

இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட டாக்டர் குரியன்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுவது அவசியம் என்று நினைத்தேன். அதுதான் இந்த பதிவு. குறைந்தபட்சம் டீ காப்பி பால் என்று குடிப்பவர்கள் மட்டுமாவது இரைத் தெரிந்து கொள்வதும், அவருக்கு செலுத்தும் நன்றி கடன் எனத் தோன்றியது. அதனால் தான் இந்த பதிவு.

 

1.குரியன் அவர்கள் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு என்ற இடத்தில் 1921 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பிறந்தவர், இந்தியாவில் ஒரு பொறியாளராக தனது வாழ்வைத் தொடங்கி, தொழில் முனைவோராகத் தொடர்ந்து, இந்தியாவின் வெமைப்புரட்சிக்கு தந்தை எனும் அழியாத புகழுக்கு, அடித்தளமிட்டு 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 

2.பாலையும் பால் பொருட்களையும் இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்திய நாட்டினை பால் உற்பத்தியில் முதன்மையான நாடாக மாற்றிக் காட்டியவர் இவர். இனி இறக்குமதி என்ற பேச்சுக்கே இடமில்லை ஏற்றுமதி தான், இப்படி பால் பொருள் ஏற்றுமதிக்கு அடித்தளம் போட்டவர் குரியன் அவ்ர்கள்.

 

3. குரியன் கேரளாவை சேர்ந்தவர், ஆனால் படித்தது சென்னை லயோலா கல்லூரியில், பிஎஸ்சி படித்தார், மீண்டும் படித்தார் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆனார்,

 

4.பிறகு ஒரு பயிற்சி எடுத்துக் கொண்டார். அது டயரி இன்ஜினியரிங் பற்றியது. பெங்களூரில் இருந்த நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டியூட் (NATIONAL DAIRY RESEARCH INSTITUTE) அந்த பகுதியை பயிற்சி தந்தது. மீண்டும் படித்தார். இந்த படிப்பு அமெரிக்காவில், மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் (MICHIGAN STATE UNIVERSITY). இந்திய அரசு உதவித்தொகை தந்தது. 1948 ல் படித்து முடித்த்தார். அங்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் மாஸ்டர் டிகிரி பெற்றார்.

 

5.மிச்சிகன் யுனிவர்சிட்டி டிகிரி முடித்ததும் குஜராத் ஆனந்த் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். அந்த ஒப்பந்தத்தின் பேரில்தான் இந்திய அரசு அவருக்கு மிச்சிகனில் படிக்க உதவியது. ஆக படிப்பு முடித்து குரியன் பணி தொடங்கிய ஆண்டு 1949.

 

6. இந்த இடத்தில் நான் இன்னொரு முக்கியமான நபரை அறிமுகம் செய்ய வேண்டும். அவருடைய பெயர் திருபுவன்தாஸ் பட்டேல். நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியவர். அவர் அந்த சமயம் ஒரு மாவட்ட பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். அந்த சங்கத்தின் பாலை அடிமாட்டு விலைக்கு வாங்கி அநியாய லாபம் பார்த்து வந்தார்கள் சிலர். திருபுவன்தாசுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தார் அந்த சங்கத்தின் மேலாளராக குரியன் அவர்களை நியமித்தார். அந்த கூட்டுறவு சங்கம் தான் பிற்காலத்தில் மு ல் என்ற பெயரில் அபார வளர்ச்சி பெற்றது.

 

7.குரியன் அந்த மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மேலாளராக பொறுப்பேற்றார். பின்னர் அந்த சங்கம் பாலை மதிப்பு கூட்ட வேண்டும், என்பதை உணர்ந்தார். அதனால் உற்பத்தி செய்து சேகரிக்கும் பாலை மதிப்பு கூட்ட முடிவு செய்தார். அதற்கு தேவைப்படும் உபகரணங்களை எல்லாம் வாங்கினார். இதனால் மட்டுமே பால் மாடு வளர்ப்போருக்கு உதவ முடியும், அதன் மூலமாக மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை தர முடியும் என்று தீர்க்கமாக  நம்பினார். 

8.குரியன் நினைத்தது போலவே பால் பொருட்களை உற்பத்தி செய்தார். பாலை நேரடியாக விற்பனை செய்வதை குறைத்தார். பால் பொருட்களை உற்பத்தி செய்து நல்ல விலைக்கு விற்றார். இப்போது பால் மாடு வளர்ப்போருக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்தார். இதை பார்த்த பல கூட்டுறவு சங்கங்களும் குரியனை பின்பற்றினர்.

9. இதன் விளைவாக ஒரு நல்ல காரியம் நடந்தது. அதுதான் என் டி டி பி (NDDB) எனும் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின்   தலைவர் பொறுப்பு குரியன் அவர்களைத் தேடி வந்த்து. திறமையும் உழைப்பும் இருப்பவர்களை தேடி வரும் பதவிகள் என்பது குரியன் விசயத்தில் நிருபணமானது.

9. இப்போது என் டி டி பி யின் சேர்மன் ஆனதும் குரியன் தனது ஆபரேஷன் பிளட் (OPERATION FLOOD) என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான் இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்தானது  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

10.ஆப்ரேஷன் பிளட் என்பதின் ஆதார சுருதியாக சிலவற்றை திட்டமிட்டார் குரியன். அவை பால் உற்பத்தியைக் கூட்டுவது. அதன் உற்பத்தியாளர்களின் குடும்ப வருமானத்தை அதிகரிப்பது, இன்னொன்று பாலும் பொருட்களும் நியாயமான விலைக்கு  நுகர்வோருக்கு கிடைக்கச்செய்வது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு நீண்ட கால திட்டமாக அதனை வடிவமைத்தார் குரியன் இவற்றையெல்லாம் படிப்படியாக சாதித்தும் காட்டினார் அத்தோடு இன்னொரு காரியத்தையும் செய்தார் கூரியன் அதுதான் 1973 ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய குஜராத் கூட்டுறவு பால் விற்பனையாளர் அமைப்பு

11.ஒரு சிறிய விதை செடியாக வளர்ந்து பின் மரமாக படர்ந்து பூ பிஞ்சு காய் கனி என்று பயன் தருவது போல குரியன் அவர்களின் சேவை அவருக்கு பல விருதுகளை சேகரித்துத் தந்தது. அவர் பெற்ற விருதுகளில் முக்கியமானது ரேமன் மேக்சேஸே விருது (RAMAN MAGSASAY AWARD) சமூக தலைமைத்துவத்திற்கான விருது (COMMUNITY LEADERSHIP). அது 1963-ஆம் ஆண்டு வழங்கினார்கள். உலக உணவு விருது (WORLD FOOD PRIZE) என்பது 1989 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

பயன் தரும் செய்திகளை பகிர்வோம் ! பல பல பயன் பெறுவோம் !

 

பூமி ஞான சூரியன்

 

#FATHEROFWHITEREVOLUTION

#DRVARGHESKURIEN

#PROFILEOFKURIEN

#NATIONALDAIRYRESEARCHINSTITUTEBANGALORE

#THIRUBUVANDOSSPATEL

#RAMANMAGSASAYAWARD

#WORLDFOODPRIZE

#OPERATIONFLOOD

#MICHIGANSTATEUNIVERSITY

#COMMUNITYLEADERSHIP

#MILK&MILKPRODUCTS

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...