Sunday, December 4, 2022

STARTING POST OF NEW ZEALAND'S MILK INDUSTRY

 நியூசிலாந்து

பால் தொழில்

சரித்திரம்

SHOT HORN MILK BREED

உலக நாடுகளில் மிக அதிகமான பாலை உற்பத்தி செய்யும் நாடாக இருப்பது இந்தியா. ஆனாலும்அதிகமான பால் ஏற்றுமதியை செய்வது நியூசிலாந்து என்பது உங்களுக்கு தெரியுமா ? அவர்கள் பால் உற்பத்தியை எப்படித் தொடங்கினார்கள் என்பதை பற்றிய தொடக்க கால சரித்திரத்தை இப்போது பார்க்கலாம்.

1.பால் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருமானம் நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. 2017 ஆம் ஆண்டு கிடைத்த வருமானம் 13.4 பில்லியன் நியூசிலாந்து டாலர். 

2. 2019 - 20ஆம் ஆண்டில் 4.92 மில்லியன் பசுக்கள் தான் நியூசிலாந்தின் கணக்கில் இருந்தன.

3.கொஞ்சம் பின்னோக்கி நியூசிலாந்தின் பால் உற்பத்தி சரித்திரத்தைப் பார்க்கலாம்.

4. 1814 ஆம் ஆண்டில் தான் இதற்கான அடித்தளம்  அவர்களுக்கு அமைந்தது. அந்த ஆண்டுதான் சாமுவேல் மார்ட்சன் என்னும் பாதிரியார், குட்டைக் கொம்பு பால் மாடுகளை இங்கு அறிமுகம் செய்தார்.

5.சாமுவேல் மார்ட்சன் ஆஸ்திரேலியாவைச்  சேர்ந்தவர். இவர் தான் ஆஸ்திரேலியாவில் கம்பளத் தொழிலை அறிமுகம் செய்தவர்.

6.இந்த குறுங்கொம்பு மாடுகளின் தாயகம் வடகிழக்கு இங்கிலாந்து. இது பால் மற்றும் இறைச்சிக்கான மாடு. 

7.1840களில் பல இடங்களில் பால் பண்ணைகள் உருவாகின. நகர்ப்புறங்களில் பெரிய பால் பண்ணைகள் வந்தது. இதிலிருந்தவை எல்லாம் இந்த குட்டைக் கொம்பு பால்மாடுகள் தான். 

 8. அந்த சமயம் வில்லியம் பௌரான் என்றவர் கிடைக்கும் பாலைக் கொண்டு பெருமளவு சீஸ் என்னும் பாலடைக்கட்டி தயாரிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக விழிப்புணர்வு தந்து வந்தார். 

9.ஆஷ்பர்ட்டன் சீஸ் மற்றும் பட்டர் ஃபேக்டரியை முதன் முதலாக அங்கு தொடங்கக் காரணமாக இருந்தவர் வில்லியம் பௌரான் அவர்கள்.  

10.அதைத் தொடர்ந்து செடார் சீஸ்  என்ற கம்பெனி தொடங்கப்பட்டது அது மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. 

11.அதைத் தொடர்ந்து 1883 ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசு வில்லியம் பௌரான்  அவர்களை பால் தொழிலகங்களின் ஆய்வாளராக நியமித்தது. 

12.ஜோசப் ஹார்டிங் அவர்கள் செடார்சீஸ் கம்பெனியின் தந்தை என்று வருணிக்கப்படுகிறார். அவர்தான் "செடார் சீஸ்"ஸின் ஃபார்முலாவை உருவாக்கியவர்.

13.1883 ஆம் ஆண்டு வில்லியம் பௌரான் இறக்கும் வரை நாடு முழுவதும் பல பால் தொழிலகங்களை உருவாக்கினார். 

14.பாலடைக்கட்டி மற்றும் வெண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பல பிரசுரங்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

15.1920 ஆம் ஆண்டில் 600 பால்  தொழிலகங்களை அமைத்தார்கள் நியூசிலாந்தில். அதில் 85 சதம் கூட்டுறவு அமைப்புகள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இன்று பாலையும், பால் பொருட்களையும் உலகத்திலேயே அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கும் நியூசிலாந்து நாட்டில் பால் உற்பத்தி எப்படி தொடங்கியது என்பது பற்றிப் பார்த்தோம். 

நியூசிலாந்து நாட்டில் இந்த பால் உற்பத்தியை பால் உற்பத்தி பொருட்களை எப்படி மேம்படுத்தினார்கள் என்பதை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

நன்றி வணக்கம். 

பயன் தரும் பதிவினை பகிர்வோம் ! பலப்பல பயன் பெறுவோ

#NEWSZEALAND

#WORLLEADERINMILKEXPORT

#MILKINDUSTRIES

#SHORTHORNBREED

#COOERATIVEMILKFACTORIES

#ASHBURTONCHEESE

#CHEDARCHEESE

#MILKPROCESSINGINDUSTRIES

#KIWIDAIRYCOMPANY

#FONTERRANEWZEALAND


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...