பெண்கள் தேங்காய்
உடைக்கலாமா ?
இந்திய கலாச்சாரத்தில் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுவது தென்னை. பூஜைகளில் தேங்காய் உடைப்பது என்பது செல்வத்திற்கு தெய்வமான லட்சுமிக்கு செய்யும் வரவேற்பு.
சில கடலோர பகுதிகளில் கடலுக்கு தேங்காய் வைத்து வணங்குகிறார்கள். இது அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை.
விநாயகர் பெருமானுக்கும் அனுமனுக்கும் 108 தேங்காய் உடைப்பது என்பது, என்ன வேண்டினாலும் பலிக்கும் என்னும் நம்பிக்கை.
ஒரு புதிய நிலம், ஒரு புதிய கார், ஒரு புதிய கறவை மாடு எது வாங்கினாலும் அதற்கு தேங்காய் உடைத்து வணங்குவது, கடவுளுக்கு செய்யும் அர்ப்பணிப்பு.
தேங்காயை அதிசய கனி என்று போற்றுகிறார்கள் நம் உடலில் இருக்கும் பாதுகாப்பு மண்டலத்திற்கு அது பாதுகாப்பாக விளங்குகிறது.நமது உடலில் கெடுதல் செய்யக்கூடிய வைரஸ் பாக்டீரியாக்கள் ஆகியவற்றை எதிர்த்து போராடுகிறது. இதற்குக் காரணம் இளநீரில் இருக்கும் லாரிக் அமிலம் என்பது.
தேங்காயில் ஏன் மூன்று கண்கள் இருக்கிறது தெரியுமா ? தேங்காய் முளைக்கும் போது, அதில் ஏதாவது ஒரு கண் வழியாகத்தான் முளை வெளியே வரும். மற்ற இரண்டு துளைகள் அடைபெற்றுப் போகுமாம். இதனை முளை வரும் துளை அல்லது ஜெர்மினேஷன் போர் (Germination Pore) என்று சொல்லலாம். ஆனால் ஆன்மீக ரீதியாக சிவபெருமானின் மூன்று கண்களாக நினைத்து நாம்வழிபடுகிறோம்.
உலகத்திலேயே தேங்காயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தோனேஷியா. 2020 ஆம் ஆண்டின் கணக்கு படி நாம் உலகிலேயே அதிக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளில் நாம் இரண்டாம் நிலையில் உள்ளோம்.
இந்தியாவின் தேங்காய் நகரம் என்ற பெருமையைப் பெற்றது பொள்ளாச்சி. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அற்புதமான சுற்றுச்சூழலை உடைய பகுதி என்று பொள்ளாச்சியை அறிவித்துள்ளது, யுனெஸ்கோ.
உலகம் முழுவதும் பரவி இருக்கும் தென்னையின் பிறந்த மண் எது தெரியுமா ? இந்தியா மற்றும் தெற்கு ஆசியா.
பெண்கள் தேங்காயை உடைக்கக் கூடாது என்கிறார்கள். அதற்குக் காரணம் தேங்காய் உடைப்பது என்பது பலி கொடுப்பதற்கு சமம்.
விமானத்தில் தேங்காய் எடுத்து செல்லக்கூடாது என்று தடை உத்தரவுள்ளது, காரணம் தேங்காய் சுலபமாக தீப் பிடிக்கக்கூடியது.
தேங்காய் எண்ணெய் மூளையின் திசுக்கள் இளமையாக இருக்க உதவுகிறது, மற்றும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளை சரி செய்கிறது. காரணம் இதில் மீடியம் செயின் டிரை கிளிசரைட்ஸ்(Medium Chain Tri Glycerides) இருப்பது. இது மூளையின் திசுக்கள் வளர உதவியாக உள்ளது.
"கிங் கோகனட்" என்ற ஒரு தேங்காய் ரகம் இலங்கையில் உள்ளது, அதுதான் சென்ற 10 ஆண்டுகளில் அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான தென்னை ரகம்.
உலகிலேயே எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அதிகமாக தேங்காய் சாப்பிடுகிறார்கள் என்ற ஒரு ஆராய்ச்சியை நடத்தினார்கள். இந்த ஆராய்ச்சி 147 நாடுகள் இடையே நடந்தது. 2019 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சியை நடத்தினார்கள். இந்த ஆராய்ச்சி படி இலங்கையை சேர்ந்தவர்கள், ஒரு நபர் ஒரு ஆண்டில் 61.9 கிலோ தேங்காயை சாப்பிடுகிறார்கள் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
உலக நாடுகளில் தேங்காய் சாப்பிடுவதில் இந்திய நாட்டினர் அதாவது நாம் 13 வது இடத்தில் இருக்கிறோம்.
இந்தியாவில் அதிகமாக தென்னை சாகுபடி செய்யும் ஐந்து மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மற்றும் ஒரிசா. இதில் தமிழ்நாடு இரண்டாம் நிலையில் உள்ளது.
தேங்காயை பல பேர் சொல்லிட்டு அழைக்கிறார்கள். இந்தியாவில் தேங்காய், நாரியல், மற்றும் ஷ்ட்ரீப்பால், கல்ப விருட்ச்சா என்ற பெயர்கள், நமது புழக்கத்தில் உள்ளன.
தேங்காய் என்பது, தேன் காய் என்பதன் சுருக்கம். நாரியல் என்றால் தண்ணீர் வைத்திருக்கக்கூடிய கனி அல்லது பழம் . ஸ்ரீபால் என்றால் வளர்ச்சிக்கான அல்லது வளமைக்கான கனி அல்லது பழம். கல்பவிருட்சம் என்றால் ஆசி வழங்கும் கனி.
உலக புகழ் பெற்ற வெனிஸ் நாட்டின் யாத்திரிகர் மார்க்கோபோலோ அவர்கள் இந்தியா மற்றும் சுமத்திரா தீவில் பயணம் செய்யும்போதுதான் முதன்முதலாக தேங்காயைப் பார்த்தார். அவர் தேங்காய்க்கு வைத்த பெயர் ராஜகனி என்பது. ஆங்கிலத்தில் அதனை "பரோவாஸ் நட்" என்று அவர் சொன்னார். பரோவா(Pharoah's Nut) என்றால் எகிப்து நாட்டின் பேரரசர் என்று பொருள்.
தேங்காய் சாப்பிடுவது, அல்லது இளநீர் சாப்பிடுவது, ஆண்மையை மேம்படுத்துகிறது ஆராய்ச்சி. விந்தணுக்களில் இருக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. அது மட்டுமல்ல விந்தணுவின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது தேங்காய் மற்றும் இளநீர்.
ப்ராஸ்லின் மற்றும் கியூரி யூஸ் என்னும் தீவுகள் சிச்செல்லஸ் (Seychelles)என்ற நாட்டை சேர்ந்தவை. இங்கு ஒரு வித்தியாசமான தென்னை மரம் இருக்கிறது. அதன் பெயர் கோகோ டீ மெர் (Coco di mer)என்பது. உலகத்திலேயே இந்த தென்னை மரங்கள் தான் மிகப்பெரிய காய்களை காய்க்கின்றன.
சராசரியாக ஒரு தேங்காயின் எடை 21 கிலோ இருக்கிறது. அதிகபட்சமாக ஒரு தேங்காய் எடை 25 கிலோ கூட இருக்கும்.
இந்தத் தென்னையை கடல் தேங்காய், என்றும் "டபுள் கோக்கனட்" என்றும் சொல்லுகிறார்கள்.
தேங்காய் மற்றும் தென்னை பற்றிய பல புதிய வித்தியாசமான செய்திகளை எல்லாம் இந்த பதிவில் பார்த்தோம்.
இதில் உங்களுக்கு பிடித்தமான செய்தி எது என்று சொல்லுங்கள். இது போன்ற பல புதுப்புது செய்திகளைப் படிக்க விரும்பினால் எனது வலைத்தளத்திற்கு வாருங்கள். அங்கே சந்திக்கலாம்.என்னுடைய வலைத்தளத்தின் லிங்க்'ஐ கீழேத் தந்துள்ளேன்.
மீண்டும் அடுத்த
பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம்.
பயன் தரும்
செய்திகளைப் பகிர்வோம். பலப்பல பயன் பெறுவோம்.
பூமி ஞானசூரியன்
#COCONUT
#COCONUTPALM
#KINGCOCONUT
#SRILANKACOCONUT
#INDIANCULTURE
#INDIANPUJAS
#LORDGANESH
#LORDHANUMAN
#INDONESIA
#COCONUTOIL
#KINGCOCONUT
No comments:
Post a Comment