Friday, December 2, 2022

ORISSA'S UNIQUE BUFFALO BREED SILICA

 

ஒரிசா “சிலிகா

எருமை இனம் 


ஒரு விசித்திரமான எருமை இனம் பற்றி நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

சிலிகா எருமை இனம் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் பாரம்பரிய மாட்டினம், சிலிகா என்னும் உப்பு ஏரியின் கரையோரங்களில் வளர்க்கப்படும் முக்கிய எருமை இனம். இது பற்றிய 21 சுவையான செய்திகளை இங்கு தந்துள்ளேன்.

1. நீங்கள் ஒரு சிலிகா எருமை மாடு வளர்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த சிலிகா எருமை காலையில் தூங்கி எழுந்தவுடன் காலை 6 மணிக்கு  சிலிகா ஏரித் தண்ணீரில் இறங்கினால், அத்தோடு சாயங்காலம் 6 மணிக்குத்தான் தண்ணீரை விட்டு வெளீயே வரும்.   

2. தண்ணீர் என்றால் சாதா தண்ணீர் இல்லை உப்பு நீர். பகல் 12 மணி நேரமும் உப்புநீர்த் தாவரங்களை மேய்ந்து விட்டு தண்ணீரிலேயே முங்கிக் கிடக்கும். சாயங்காலம் ஆனால் சரியாய் 6 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும்.யாரும் அதனை மேய்க்க வேண்டாம்.

3. அந்த உப்பு நீர் ஏரியின் பெயர் சிலிகா ஏரி. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர் ஏரி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த  ஏரியின் மொத்த பரப்பளவு 1100 சதுர கிலோமீட்டர்.

4. சிலிகா ஏரி என்பது ஒரிசாவில் இருக்கும் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி. அதுபோல ஒரிஸ்ஸாவின் மிகவும் விச்சித்திரமான எருமை இனம்  சிலிகா எருமை இனம்.

5. இந்த சிலிகா எருமை இனங்கள் அத்தனையும் சிலிகா ஏரியின் கரைகளில் தான் வளருகின்றன.

6. இந்த எருமைகள், இந்த ஏரியின் உப்பு நீரில் வளரும் உப்பு நீர்த் தாவரங்களை தீவனமாக சாப்பிட்டுவிட்டு அதனை சுவையான பாலாக மாற்றித் தருகின்றன.

 

7. சிலிகா ன எருமைகள் இரவு முழுக்க சிலிகா ஏரியில் சுற்றித் திரிவதால் இதனை சிலிகாவின் இரவு ராணி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

8. இந்த சிலிகா ஏரிக்கரை எருமை எத்தனை இருக்கின்றன என்று கணக்கெடுத்துள்ளார்கள். சுமார் 30,000 சிலிகா எருமைகள் இங்கு இருக்கின்றன.

9. இந்த சிலிகா எருமை இன மாடுகளின் முக்கியமானத் தீவனம் இந்த ஏரியின் வளர்ந்திருக்கும்  உப்பு நீர் தாவரங்கள்தான்.

10. இந்த ஏரியின் உப்பு நீரில் தலையை முக்கி இரண்டு முதல் மூன்று நிமிடம் மூச்சுப்பிடித்து அந்த தண்ணீர் தாவரங்களை கவ்விப் பிடித்தபடி தான் வெளியே வருமாம்.

11. நடுத்தரமான உடல் அமைப்பு,  பிறை சந்திரன் போன்று வளைந்த கொம்புகள், கருப்பு உடல் நிறம், உடல்மீது  மீது போர்வையாக இருக்கும் காவி மற்றும் அழுத்தமான காவிநிற உரோமங்கள்,  நடுத்தரமான அளவில் கீழே தொங்கும்படியான காதுகள், சிறிய மடி, துலாம்பரமாகத்  தெரியாத பால் நரம்புகள்,  ஆகியவை இந்த எருமையின் உடல் பண்புகள்.

12. 30 முதல் 34 மாதங்களில் இவை முதல் கன்று போட்டு சராசரியாக சுமார் எட்டு மாதங்கள் பால் கறக்கும். பின்னர் 14 மாதங்களுக்குப் பின்னர் இரண்டாவது கன்று னும்.

13. சிலிகா மாடுகள் முக்கியமாக பால் தரும்.  உழவு ஓட்ட மற்றும் வண்டி இழக்க அனைத்து வேலைகளுக்கும் பயன்படும்.

14. சிலிகா எருமையின் தயிர் மிகவும் பிரபலமானது. இதன் தயிரை மூங்கில் குடைகளில் ஊற்றி வைக்கும் பழக்கம் இங்கு உள்ளது.  காரணம் அவ்வளவு கட்டியாக இருக்குமாம். கூடையைத் தாண்டி ஒரு சொட்டு கூட கீழே இறங்காதாம்.

15. இந்தச் சிலிகா எருமைத் தயிறுக்காக மயங்கிய நந்தகோபாலன் (கிருஷ்ண பகவான்) தயிர் விற்கும் ஒரு பெண்மணியோடு ஆடிப் பாடியதாக இந்த பகுதியில் சுவரஸ்யமான ஒரு கதைப்பாடல் ஒன்று உலா வருகிறது. 

15 அ.சிலிகா எருமைப் பாலில் எட்டு முதல் 12 சதம் கொழுப்பு சத்து அடங்கியுள்ளது.

16. சிலிகா ன எருமைகள் சிலிகா ஏரியின் உப்பு தண்ணீரைக் குடிக்கும். அதில் வளரும் தாவரங்களைச் சாப்பிடும். பல நாட்கள் அந்த உப்பு தண்ணீரிடையே முங்கிக்  கிடக்கும். எப்படிப்பட்ட மிக மோசமான சேறு மிகுந்த சூழ்நிலைகளிலும் சிரமமின்றி சமாளிக்கும். கடுமையான வெப்பத்தைத் தாங்கும். ஆண்டு முழுவதும் மழை பெய்தாலும் அதையும் தாங்கும்.

17. இதன் வாழ்நாள் முழுக்க கால்நடை மருத்துவருக்கு  நயாபைசா கூட நீங்கள் செலவு செய்ய வேண்டாம். எந்த நோயும் சிலிகா ருமைகளைச் சீண்டிப் பார்க்காது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

18. சிலிகா எருமைகளை வளர்த்தால் போதும், கடற்கரைகளிலும் ஏரிகள் போன்ற நீர் நிலைகளிலும் தேவையற்ற புல்பூண்டு மற்றும்  புதர்கள் இல்லாமல் சுத்தம் செய்து விடும். நீர்நிலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் எருமை இனம் என்று புரிந்து கொள்ளுங்கள்.

19. சிலிகா எருமை மாடுகளை வளர்ப்பவர்கள் எந்த செலவும் செய்ய வேண்டாம்.

20. சிலிகா எருமைகள் அதிக பால் கக்காது, நாள் ஒன்று ஒரு லிட்டர் றந்தாலே பெரிய விஷயம் என்கிறார்கள்.

21. சிலிகா ஏரியை, காயல், வாவி என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் லகூன் (LAGOON) என்று சொல்லுகிறார்கள் இதனை கடல் சார்ந்த ஏரி என்று சொல்லலாம்.

நீங்கள் யாராவது ஒரிசா போனால் மற்றக்காமல் சிலிகா ஏரியையும் சிலிகா எருமையையும் பார்த்துவிட்டு வாருங்கள்.

மீண்டும் அடுத்த பதிவு சந்திப்போம் நன்றி வணக்கம் !

பூமி ஞானசூரியன்.

 #CATTLE

#INDIANFUFFALOS

#CATTLECATEGORIES

#MILCHBUFFALO

#BUFFALOMILKCOWSMILK

#ORISSASILICALAKE

#ORISSASILICABUFFALO

#SILICALAGOON

#SILICASALTWATERLAKE

#SALTWATERLAKE

#INDIANBUFFALO

#NIGHTQUEENOFSILCA

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...