மகாராஷ்டிரா
பந்தர்ப்புரி எருமை
இனம்
மகாராஷ்டிராவில் பந்தர்ப்பூர், சோலாப்பூர், கோலாப்பூர், சத்தாராஆகிய இடங்களுக்கு சொந்தமான எருமை இனம் இந்த பந்தர்ப்புரி எருமை.சந்திரபாகி என்னும் நதிக்கரையில் சோலாப்பூர் அருகில் அமைந்துள்ள நகரம் பந்தர்ப்பூர். இந்த பந்தர்ப்பூருக்கு சொந்தமான எருமை இனம்தான் இந்த பந்தர்ப்புரி.இது பற்றிய 20 முக்கியமான சுவாரஸ்யமான செய்திகளை இங்கே தந்துள்ளேன்.
1.இந்த பந்தர்ப்புரி. எருமைகள் ஒரு
கறவைக் காலத்தில் 350 நாட்களில் மொத்தமாக 1400 கிலோ வரை, பால் கறக்கும்.
இதன் பாலில் 7.8% கொழுப்பு சத்து உள்ளது.
2.இதனை நீர் எருமை என்று குறிப்பிடுகிறார்கள்.
நீர் எருமை என்றால் அதிகபட்சமாக நேரம் நீரில் மூழ்கி கிடக்கும். அதன் குழம்புகள்
சேற்றில் ஆழமாக அமர்ந்து போகாதவாறு அகன்று இருக்கும்.
3.பூபாலஸ் பூபாலிஸ் என்ற அறிவியல் பெயர்
கொண்ட ஆசியாவின் எருமைகளை நீர் எருமைகள் என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
4.இந்தியாவில் உள்ள குறிப்பிடும்படியான 17 எருமை இனங்களில்
முக்கியமானவை என்று 10 ஆற்று எருமை இனங்களை சொல்லுகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த பந்தர்ப்புரி.எருமை
இனம்.
5. இதன் கொம்புகள் சில
சமயம் 100 முதல் 150 சென்டிமீட்டர் உடையதாக இருக்கும் நீளத்திற்கு உருவிய வாள் மாதிரி
கம்பீரமாக இருக்கும்.
6.இதன் பால்மடி அளவானதாக கிண்ணம் போன்ற
அமைப்பும் உருளையான காம்புகளுடனும் இருக்கும்.
6.இதன் கன்று ஈனும் பண்பு
பாராட்டிற்குரியது. காரணம் எந்த ராஜா எந்த பட்டினம் போனாலும் 12 அல்லது 13-ஆம் மாதம் ஒரு
கன்றினை ஈன்று விடும்.
7.நாள் ஒன்றுக்கு ஆறு அல்லது ஏழு
லிட்டர் பால் கறக்கும். நல்ல பராமரிப்பு இருந்தால் ஒரு எருமை 15 லிட்டர் கூட
கறக்குமாம்.
8.வறண்ட பிரதேசங்களில் வசிக்கும் காவுலி
இன மக்கள் பாலுக்காக இந்த மாடுகளை வளர்க்கிறார்கள்.
9.தீபாவளி பண்டிகை நாளன்று இந்த பந்தர்ப்புரி.
எருமை மாடுகளை பந்தையாக மகாலட்சுமி கோயிலுக்கு ஊட்டி சென்று வழிபடுவார்கள்.
10. பந்தர்ப்புரி பாலிலிருந்து பால் பேடா, பர்ஃபி போன்ற இனிப்பு
வகைகளைத் தயாரிக்கிறார்கள். அதனால் இதன் பால் நல்ல விலைக்கு
விற்பனையாகிறது.
11. கிராம விழாக்களில் நடத்தும் மாட்டுச் சண்டைகளில் பந்தர்ப்புரி எருமைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது மகாராஷ்ட்ராவின் ஜல்லிக்கட்டு.
12.ஓட்டப்பந்தயங்களில்
கூட இவற்றை ஓட விடுகிறார்கள். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் இந்த எருமைகள்
ஓடும் என்று சொல்கிறார்கள்.
13.கடலைப் பிண்ணாக்கு, பருத்திப்
பிண்ணாக்கு, கரும்பின் நுனிக்கொழுந்து, கரும்புச் சோகைகள், மக்காச்சோள
தட்டைகள், கோதுமை மற்றும் நெல் வைகோல் இவற்றையும் இந்த எருமைகளுக்குத்
தீவனமாகத் தருகிறார்கள்.
14.பெரும்பாலும் பந்தர்ப்புரி.
எருமைகளிடம் பெண்கள் தான் பால் கறப்பார்கள். பால் கறக்கும் சமயம் அவற்றிற்கு
கலப்பு தீவனம் கொடுப்பது வழக்கம்.
14.காவ்லி இன மக்கள், சொந்த உபயோகம் போக
மீதம் உள்ள பாலை விற்பனை செய்து விடுகிறார்கள்.
15.கறவை மாடுகளை பொதுவான இடத்தில் வைத்து
பால் கறந்து அந்த இடத்திலேயே பாலை விற்பனை செய்கிறார்கள்.
16.இங்கு இயற்கையாக வளர்ந்துள்ள மரங்களின் தழைகளையும், காய்களையும், தீவனமாகப் பயன்படுத்துகிறார்கள். அவை கருவேலன், வேம்பு, அரசு, ஆல் அத்தி மற்றும் சீமைக் கருவை.
அன்பின் இனிய நண்பர்களே, இது பற்றிய கூடுதலான, சுவாரசியமான தகவல்கள் ஏதும் தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம்.
பயன் தரும்
செய்திகளைப் பகிர்வோம் ! பலன்பலப் பெறுவோம் !
பூமி ஞானசூரியன்
#CATTLE
#BUFFALOS
#INDIANBUFFALOS
#PHANDHARPURIBUFFALO
#WATERBUFFALO
#RIVERBUFFALOBUBALUSBUBALIS
#MILKPRODUCTION
#BUFFALOMILK
#FODDERREQUIREMENT
#TREELEAFFODDER
No comments:
Post a Comment