Tuesday, December 6, 2022

LEADER IN MILK EXPORTING NEWSZEALAND


நியூசிலாந்து பால்பொருட்கள்  ஏற்றுமதி 
 நியூசிலாந்தின் பசும்புல் வெளியில் எச் எஃப் மாடுகள்


அதிக பால் உற்பத்தி செய்வதில் இந்தியா முதல் நிலை இருந்தாலும் ஏற்றுமதி நியூசிலாந்து நாடு முதல் நிலையில் இருப்பதற்கு என்ன காரணம், என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 1.முக்கியமாக நியூசிலாந்தின்  குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை அதனால் மாடுகள் ஆண்டு முழுவதும் மெய்வதற்கு அது வாய்ப்பாக அமைந்துள்ளது.

2.நியூசிலாந்து பால் மாடுகளின் தீவனத்தில் அதிகமான பசும்பல் சேர்வதால் அவற்றின் பாலில் ஒமேகா 3 எனும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.
 
3.அது தவிர பீட்டா கரோட்டின், காஞ்சிகேட்டட் லினோனிக் ஆசிட் ஆகியவை அதிகம் உள்ளதால் இதன் பால் இயல்பாகவே தரமாக அமைந்துள்ளது.

4. தீவனப்புல் மிகவும் குறைவான விலைக்குக் கிடைக்கிறது. இதற்குக்  காரணம் நியூசிலாந்தின் தட்பவெப்ப நிலை இதற்கு சாதகமாக உள்ளது.

5.பால் மாடுகளுக்கு தேவைப்படும் தீவனப் பொருட்கள் வீடுகளின் புறக்கடையிலேயே வளர்க்கப்படுகிறது.  வீட்டுக்கு வீடு புல் பாத்திகள் இருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.

 6.நியூசிலாந்தின் மண் அமைப்பு,  தண்ணீர் வசதி, இரண்டும் புல் உற்பத்திக்கு சாதகமாக உள்ளது. ஆண்டு முழுவதும் பசும்புற்கள் மாடுகளுக்குக் கிடைக்கிறது.

 7. நியூசிலாந்து நாட்டிற்கு பால் பொருட்கள் ஏற்றுமதி மூலமாக அதிக வருமானம் கிடைக்கிறது. அதனால் அரசு மிகுதியான கவனத்தை பால் துறைக்கு அளிக்கிறது. 8.2021 ஆம் ஆண்டு கால்பொருள் ஏற்றுமதியில் நியூசிலாந்துக்கு கிடைத்து வருமானம் 18.6 பில்லியன் டாலர். 

8.நியூசிலாந்தில் பால் மாடு வளர்க்கும் விவசாயிகள் நீடித்த வருமானம் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.

9.பால் மாடு வளர்ப்பு என்பது நியூசிலாந்தில் லாபகரமானதாக பிரபலமானதாக உள்ளது.

10.பால் மாடுகளுக்கு முக்கியமாக அவர்கள் தீவனமாக தருவது பசும்புற்கள்தான். அத்துடன் சைலேஜ் என்று பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் தருகிறார்கள்.

11.பால் மாடு வளர்க்கும் இடங்களை, நீர் வசதியுடைய இடங்களாக தெரிந்தெ டுக்கிறார்கள். வறண்ட பகுதியாக இருந்தால் அதற்கு போதுமான நீர் வசதியை செய்துத் தருகிறார்கள்.

12.நியூசிலாந்தில் பால் தொழில் செய்பவர்களில் 56 % தனி நபர்கள், 29 % பங்குதாரர்கள், 14 % குத்தகைதாரர்கள்.

15.நியூசிலாந்தின் பால் மாடுகள் ஆண்டு முழுவதும் புல்வெளிகளில் மேய்வது தான் அதன் பாலின் தரத்திற்கு காரணம் என்று சொல்லுகிறார்கள்.
16.2021 ஆம் ஆண்டின் கணக்கின்படி நியூசிலாந்தில் உள்ள மொத்த பால் மாடுகளில் 49.6 சதம் ஹோல்சியன் ஃப்ரீசியன் மற்றும் ஜெர்சி கலப்பின மாடுகள் தான். இரண்டும் அதிகம் பால் கறக்கும் மாடுகள்.
 
17.இவை தவிர அயர் ஷயர்,  டெக்ஸ்டர் , பிரவுன் ஸ்விஸ், ரெட் போல், ஹைலேண்ட் ரெட், ரெட் தேவன், சவுத் தேவன், வேல்ஸ் பிளாக், சஸக்ஸ் ஆகிய பால் மாடுகளும் அதிகமான பால் தரும் மாடுகளாக உள்ளன.

அன்பின் இனிய நண்பர்களே நியூசிலாந்து நாடு அதிகமான பால் ஏற்றுமதி செய்வதற்கு முக்கியமான காரணம் தரமான பால் உற்பத்தி என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.  

வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்று நீங்கள்  சொல்லுங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம். நன்றி வணக்கம்.  

பயன்தரும் பதிவுகளை பகிர்வோம் ! பலப்பல பயன் பெறுவோம்.

பூமி ஞானசூரியன்

#EXPORT
#NEWZEALAND
#MILKPRODUCTS
#BUTTER
#CHEESE
#SKIMMEDMILKPOWDER
#GHEE
#DAIRYEXPORTS
#WORLDMILKEXPORT
#HOLSIENFRESIEN
#JERSEY
#EXPORTOUTLOOK

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...