இந்திய பால் புரட்சி - 5
அமுல் பிறந்தது
குரியன் அவர்கள் தனது ஆபரேஷன் ஃப்ளட் (OPERATION FLOOD) என்ற திட்டத்திற்கு வைத்திருந்த இலக்கு, “பில்லியன் லிட்டர் ஐடியா” (BILLION LITER IDEA) என்பது தான்.
இந்த “பில்லியன் லிட்டர் ஐடியா”தான் உலகின் முதன்மையான பால் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு வாங்கி தந்தது, இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பாலின் அளவை இரு மடங்காக ஆக்கியது, இதுதான் இந்தியாவின் பால் உற்பத்தியை நான்கு மடங்காக உயர்த்தியது.
குரியன் அவர்களின் சேவைப் பணிகளுக்காக அவருக்கு பல விருதுகள் குவிந்தன. பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் 1965, 1966, 1997 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்டது.
இவை தவிர ஆர்டர் ஆஃப் அக்ரிகல்ச்சரல் அவார்ட் (ODER OF AGRICULTURAL AWARD) மற்றும் வேர்ல்ட் ஃபுட் ப்ரைஸ் (WORLD FOOD PRICE) ஆகிய விருதுகள் 1997 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டன.
அமுல் மூலம் எருமைப் பாலில் கொழுப்பு நீக்கிய பால் பவுடர் தயாரிக்கும் ஆலோசனையை வழங்கியதும், அதனை நடைமுறைப்படுத்தியதும் மிகவும் குரியன் எடுத்த முக்கியமான முடிவுகள்.
குரியன் கேரளா மாநிலம் என்றாலும் இவர் படித்தது கோபிசெட்டிபாளையம் டைமண்ட் ஜூப்ளி ஹையர் செகண்டரி பள்ளியில். அவருடைய அப்பா அங்கு தான் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்தார்.
லயோலா கல்லூரியில் பிசிக்ஸ் படித்தார். பின்னர் கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ படித்தார். இரண்டு கல்லூரிகளும் அந்த சமயம் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ்தான் இருந்தன.
அவரின் 22 வது வயதில், தனது தந்தையை இழந்தார். பின்னர் அவர் குடும்பம் திருச்சூருக்குப் குடிப்பெயர்ந்தது. அப்போது அவர் ராணுவத்தில் சேர விரும்பினார். ஆனால் அவர் தாயார் தான் அவரை “டாட்டா ஸ்டீல் ஆஃப் டெக்னிகல் இன்ஸ்டியூட்”டில் சேர ஆலோசனை சொன்னார். அதனால் அவர் ஜாம்ஷெட்பூருக்குப் போனார்.
அதன் பின்னர் அரசின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் “டெய்ரி இன்ஜினியரிங்” (DAIRY ENGINEERING) படிக்க விரும்பினார். ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தது. அமெரிக்காவில் மிச்சிகன் போனார். அங்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் மாஸ்டர் டிகிரி படித்தார். குரியன் விரும்பியது “டெய்ரி இன்ஜினியரிங்”. ஆனால் அவர் படித்தது மெட்டலர்ஜி. விரும்பியது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை விரும்பு என “மெட்டலர்ஜி” படித்தார்.
1949 ஆம் ஆண்டு, ஆனந்த் நகரில் இருந்த “எக்ஸ்பிரிமெண்டல் க்ரீமரிக்கு” அனுப்பியது இந்திய அரசு. குரியன் அவர்கள்
அங்கு டெய்ரி டிவிஷனில் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்தார். இப்போது உங்களுக்கு திரிபுவன்தாஸ் பட்டேல் ஞாபகம் இருக்கிறதா ?
இந்த சமயத்தில்தான் அவர் தனது பால் சங்கத்தின் பாலை மதிப்பு கூட்டுவது பற்றி குரியனின் உதவியைக் கேட்டார். “கயிரா பால் கூட்டுறவு சங்கம்” அப்போதுதான் தொடங்கினார்கள். அதன் தலைவராகத்தான் இருந்தார். திரிபுவன்தாஸ் பட்டேல். இந்த கயிரா பால் கூட்டுறவு சங்கம் தான் பின்னாளில் “அமல்” என்னும் அசுரவளர்ச்சி பெற்ற நிறுவனமாக சர்வதேச அளவில் உருவானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த சமயம் அரசு வேலை சலிப்பு ஏற்பட, குரியன் அந்த வேலையிலிருந்து வெளியேற விரும்பினார். “நீங்க வெளிய வந்தாலும் எனக்கு உதவி பண்ணுங்க” என்று ஒற்றைக் காலில் நின்றார் திருபுவன்தாஸ் பட்டேல்.
“சரி” என்று சொல்லி களத்தில் இறங்கினார் குரியன். “கயிரா கூட்டுறவு பால் சங்கம்” உருவானது. அதன் பெயர் “ஆனந்த் மில்க் உட்பாடக் லிமிடெட் டெய்ரி (ANAND MILK UTPADAK LTD DAIRY) என்பTHAI இது ஆனந்தில் தொடங்கினார் குரியன். இதன் சுருக்கமான பெயர் தான் அ மு ல் 1950 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டது.
இதுவரை பால் மனிதரின் பிறப்பு, படிப்பு, மற்றும் அ மு ல் தொடங்கியது வரை பார்த்தோம். குரியன் அவர்கள் எப்படி அதனை வளர்த்தார் ? அதற்கு கூட்டுறவு அமைப்புகள் எப்படி உதவியாக இருந்தது ? இவற்றை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.
வளர்ச்சிப்
பணிகளில் ஆர்வம் உள்ள தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருக்கும் என்று நான்
நம்புகிறேன் மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்
அன்பின் இனிய நண்பர்களே இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்க சிரமம் பாராமல் எனது வலைத்தளத்திற்கு செல்லுங்கள் அதன் லிங்க் www.gnanasuriabahavan.com.
அன்பு இனிய
நண்பர்களே !
பயன் தரும்
செய்திகளை பகிர்வோம் பலப்பல பயன் பெறுவோம் !
பூமி ஞான சூரியன்
#DRKURIEN
#WHITEREVOLUTION
#OPERATIONFLOOD
#BILLIONLITTERIDEA
#ANANTH
#AMUL
#ANATHMULKUTPADAKLTDDAIRY
#TATADAIRYDIVISION
#MICHIGANSTATEUNIVERSITY
No comments:
Post a Comment