இந்திய பால் தொழிலின் சரித்திரம்
இந்தியாவின் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். இந்தியாவின் பால் உற்பத்தி மற்றும் 137 மில்லியன் டன். இது உலகில் உள்ள 196 நாடுகளின் உற்பத்தியை விட அதிகம். பால் உற்பத்தியில் உலக நாடுகளில் முதல் நிலையில் இருப்பது இந்தியா. இது பெருமைப்படும் புள்ளி விவரம்.
இந்த நிலையை அடைய நாம் என்ன செய்தோம் எப்படி செய்தோம்? யார் செய்தார்கள் ? என்பதை சொல்வது தான் இந்த பதிவு.
நாம் உற்பத்தி செய்யும் பால் பெரும்பாலும் உணவாகவே பயனாகிறது. அதாவது உள்ளூர் தேவைகளுக்கே அதிகம் போகிறது. ஒரு சிறிய அளவைத் தான் நாம் ஏற்றுமதி செய்கிறோம்,
வட மாநிலங்களில் மக்கள் அதிகமாக பன்னீர் என்னும் பாலடைக் கட்டியாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் தென் மாநிலங்களில் நாம் பாலாகவும், தயிராகவும் தான் பயன்படுத்துகிறோம்.
இந்த பால் மாடு வளர்ப்பும் பால் உற்பத்தியும் அதனைப் பயன்படுத்துவதும் நமது இந்தியக் கலாச்சாரத்துடன் நெருக்கமானத் தொடர்பு உடையதாக இருந்து வந்துள்ளது.
இந்தியாவில் பால்தொழிலின் வயது சுமார் 8000 ஆண்டுகள். காடுகளில் திரிந்த கால்நடைகளை வீடுகளில் வளர்ப்பதற்காகத் தயார் செய்தோம். வேதகாலம்தொட்டு மாடு வளர்ப்பு இந்திய துணை கண்டத்தின் மரபாக இருந்துள்ளது.
வளர்ப்பதற்கு ஏற்றவாறு பழகிய இந்திய நாட்டினங்களை செபி கேட்டில் (ZEBU CATTLE) என்று சொல்லுகிறார்கள். இதனை இண்டிசைன் மாடுகள் (INDISCINE CATTLE) என்றும் சொல்லுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் செபி மாடுகளுக்கு எல்லாம் திமில் இருக்கும்.
செபி மாடுகளின் முக்கியமான
பண்புகள் பற்றி பார்க்கலாம். ஒன்று திமில் இரண்டு கழுத்துக்கு
அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் மடிப்பு தோல்(DEWLAP) மற்றும் கீழ்நோக்கி தொங்கும் காதுகள்(DROOPING EARS).
மேலும் இவை கூடுதலான வெப்பத்தை தாங்கும், உழவு ஓட்டும் வண்டிள் இழுக்கும், பலநாடுகளுக்கும் கலப்பினம் செய்ய உதவுகிறது.
இந்தியாவில் பால் உற்பத்தி குறைவாக இருந்த நிலையை மாற்றியது ஆபரேஷன் ஃப்ளட் (OPERATION FLOOD) என்ற ஒரு திட்டம் தான்..இதனை செயல்படுத்தியது நேஷனல் டயரி டெவலப்மெண்ட் போர்டு (NATIONAL DAIRY DEVELOPMENT BOARD -NDDB)என்பது. இந்த அமைப்பை 1970 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி தொடங்கினார்கள். இதுதான் இந்தியாவின் பால் உற்பத்திக்கு போட்ட அடித்தளம்.
இந்த என் டி டி பி (NDDB) தான் இந்தியாவை உலகத்தின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக உயர்த்தியது. இந்தியா பால் உற்பத்தியில் பற்றாக்குறை நாளாக இருந்தது. பாL உற்பத்தியில் முதல் நிலையில் இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னாள் வந்ததற்கு முக்கியமான காரணம் இந்த என்டிடிபி தான்.
இன்று கிராமங்களில் வசிக்கும் சாமானிய மக்களுக்கு அடித்தட்டு மக்களுக்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருப்பது இந்த பால் தொழில் தான்.
விவசாயம் பொய்த்து போனபோதெல்லாம் கை தூக்கிவிட்டபடி வலுப்பெற்று வலம் வருவதும் பால் தொழில்தான். இதற்கு அடிப்படையான வழிகளை அமைத்து கொடுத்ததும் இந்த என் டி டி பி தான்.
கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கும் இரண்டு தொழில்களில் ஒன்று இந்த பால் மாடு வளர்ப்பு.
1998 ஆம் ஆண்டு உலக நாடுகளை எல்லாம் பின்னால் தள்ளிவிட்டு பால் உற்பத்தியில் முன்னால் வந்தது இந்தியா. அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் மொத்த பால் உற்பத்தி 22.29% பாலையும் உற்பத்தி செய்தது.
30 ஆண்டுகளில் பால்உற்பத்தியை இரு மடங்காக அதிகரித்தது, கிராம மக்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்பு தந்தது, அது வெண்மை புரட்சியாக உருவெடுத்தது, எல்லாம்தான் இந்திய பால் தொழில் சரித்திரத்தின் முக்கிய பக்கங்கள்.
இந்தியாவின் பால் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தது என் டி டி பி. அதன் தலைவராக இருந்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன். டாக்டர் குரியன் எப்படி என் டி டி பி யின் தலைவராக ஆனார் ? அவரை யார் நியமித்த்து, இது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இன்றும் இந்திய கிராமங்களின் அடித்தட்டு மக்களுக்கு உதவியாக விளங்கும், பால்தொழிலின் பன்முகம்கொண்ட சரித்திரச் செய்திகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.
இது பற்றிய உங்கள் கருத்துக்களை ஒருவரி எழுதுங்கள், நான் சொல்லும் செய்திகள் பயனுள்ளதாக இருந்ததா ? என்று எழுதுங்கள்.
மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.
நன்றி, வணக்கம் !
பயன்தரும் செய்திகளைப் பகிர்வோம் ! பலப்பல பயன் பெறுவோம் !
பூமி ஞானசூரியன்.
#INDIA
#DAIRY
#MILKINDUSTRY
#HISTORYOFINDIANMILKINDUSTRY
#ZEBUCATTLE
#INDISCINECATTLE
#NATIONALDAIRYDEVELOPMENTBOARD
#OPERATIONFLOOD
#ANANTH
#WHITEREVOLUTION
#MILKREVOLUTION
#NDDBGUJRATH
No comments:
Post a Comment