Thursday, December 8, 2022

HIMALAYAN YAK GETS FOOD ANIMAL TAG - கவரி மானா சவுரி மாடா ?

 

கவரி மானா
சவுரி மாடா ?
மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமா

இமயமலையின் “யாக் எருமைக்கு  உணவுஎருமை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் ஃபுட் அனிமல் டேக் (Food Animal Tag) என்கிறார்கள். இந்திய உணவுப் பாதுகாப்பு அமைப்பு (Food Safety and Standard Authority of India ) இதனை அறிவித்துள்ளது. இது பத்திரிக்கையில் செய்தியாக வந்துள்ளது. 

மேலே இருக்கும் படத்தை ஒருமுறை பாருங்கள். இதுதான் இமயமலையின் யாக் எருமை. அதன் மூஞ்சிமுகம் என்று இல்லாமல் மூடி இருக்கும் முடியைப்பாருங்கள். இதைத்தான் திருவள்ளுவர் கவரிமா என்கிறார். இதைத்தான் நாம் ரொம்ப நாளாய் மயிர் நீப்பின் உயிர் வாழாது கவரிமான் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த மானின் உடம்பிலிருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் அதன் உயிர் உதிர்ந்து போகும் என்று  நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

"மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்"

திருவள்ளுவர் எழுதிய "கவரிமா" என்பது இந்த "யாக் எருமை" பற்றித் தான்.  இது மான்  அல்ல.

இதனை கால்டுவெல் ஜி. யு. போப் அவர்கள் அதனை “யாக்” எருமை என்றே எழுதியுள்ளார்,

“Those who give up (their) life when (their) honour is at stake are like the Yak which kills itself at the loss of (even one of) its hairs. 

கம்பள மயிர்கள் யாக் எருமையின் உடலில் போர்வையாக இருக்கும்.அவை உதிர்ந்து போனால்  கடும் குளிரைத் தாங்காது அது இறந்து போகும். அது தான் அதன் பொருள் என்கிறார்கள். ஆக கவறிமா என்பது மான் அல்ல மாடு.

இந்த கவரிமா என்னும் விலங்கு இமயமலைக்கு உரியது என்பதை ஒரு புறநானூற்று பாடல் உறுதி செய்கிறது.

"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தன் நிழல் பிணியோடு வதியும்."

இமயமலைப் பகுதியில் கவரிமான் நரந்தை எனும் புல் மேய்ந்தபடி தனது ணையுடன் இனிது வாழ்ந்தது என்று பொருள்.

இனி இமயமலைக்கு சொந்தமான கவரிமா என்று சொல்லப்படும் "யாக்" எருமை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். 

1.உணவுக்கான விலங்குகள்/ பிராணிகள் மற்றும் உணவு தராத விலங்குகள் என்று வகைப்படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2.அப்படி பார்த்தால் இந்த இமயமலைப் பகுதி  எருமை மூலம் பால் கிடைக்கிறது. இறைச்சி கிடைக்கிறது. 

3. சமீபகாலமாக இந்த எருமை இனத்தின் எண்ணிக்கை விரைவாக குறைந்து வருகிறது.

4. இந்த அங்கீகரிப்பு இது வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். எருமைகளின்  எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

5. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இமயமலை பகுதியில் 58 ஆயிரம் யாக்” எருமைகள் இருக்கின்றன. 

6.இந்த யாக் எருமைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் இறைச்சி மிகவும் குறைவு. அதனால் இதனை வளர்க்க பழங்குடி மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.

 7.இந்த யாக் எருமைகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு ஆராய்ச்சி நிறுவனம்  செயல்படுகிறது. 

8.இந்த நிறுவனம் அருணாச்சலப் பிரதேசத்தில் டைராங் (Dirang) என்ற இடத்தில் இயங்குகிறது. 

9.எருமை என்பதற்கும் "பைசன்" என்பதற்கும் "யாக்" என்பதற்கும் என்ன வித்தியாசம்என்று பார்க்கலாம்.

10.இந்திய எருமைகள் என்று சொல்லுபவை அனைத்தும் அறிவியல் ரீதியாக  "பூபாலஸ்"(Bubalus) என்ற பிரிவைச் சேர்ந்தது.

11. "யாக்" என்பவை "பாஸ்" (Bos) என்ற இனப் பிரிவைச் சேர்ந்தவை.  

12.இமயமலையில் உள்ள "யாக்" இன எருமையின் அறிவியல் பெயர்  பாஸ் கிரன்னியன்ஸ் (Bos granniens).

13. பைசன் என மாடுகளுடன் ஒப்பிடும்போது யாக் எருமைகள் மிகவும் 20000 அடி உயரமான  மலைப்பகுதிகளில் வளரும்.  

14.வை வடக்கு திபத்து, சைனா, இந்தியா, நேபாளம், மங்கோலியா, சைபீரியா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

15.இது பழகியவர்களை மட்டும்தான் பால்கறக்க அனுமதிக்கும். ந்நியர்கள் போனால் கதை கந்தலாகிவிடும்.

16.கடினமான பனிப்பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் இதன் கொம்புகள் அசாத்திய உறுதியானவை.

17.உயரமான ஆல்பைன் சூழலுக்கு அவசியமான அங்கம் இந்த யாக் எருமைகள்.

18.இவை ஒரு நாளில் ஒன்றரை கிலோ என்று ஆறு மாதம் பால் கறக்கும். 

19.இதன் பாலில் 4.9 முதல் 5.3% புரதமும் 5.5 முதல் 7.2 % கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது.

20.”வெப்பம் அதிகமாயிடுச்சு.. பனிப்பொழிவும் கம்மியாயிருச்சு.. இந்த யாக் எருமைக்கு நிறைய நோய் வருது.. இதை  வளக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு".. இவற்றை வளர்த்து வரும் பழங்குடி மக்கள். 

அன்பின் இனிய நண்பர்களே  கவரிமா என்பது மானா மாடா ? இதுபற்றி ஏதும் உங்களுக்கு தெரிந்தால்  சொல்லுங்கள்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

"பயன்தரும் செய்திகளை பகிர்வோம் ! பலன் பல பெறுவோம்" 

பூமி ஞானசூரியன்

#YAKBUFFALO

#HIMALAYANBUFFALO

#BUBALUSBOS

#CATTLE

# Food Safety and Standard Authority of India

# Food Animal Tag

#DOMESTICYAK

#TIBETANPLATEAU

#BOSGRUNNIENS

#YAKMILKMEAT

#YAKANIMALFACTS

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...