Friday, December 16, 2022

FASTEST BIRD OF THE WORLD -நம்பமுடியாத வேகத்தில் பறக்கும் நம்ம ஊர் குருவி

 

நம்பமுடியாத வேகத்தில் பறக்கும்

நம்ம ஊர் குருவி

 

SHAHEEN FALCON WORD'S FASTEST BIRD

ஓரிரு நாட்களுக்கு முன்னால் பத்திரிகையில் ஒரு செய்தியை பார்த்தேன் அது 300 கிலோ மீட்டர் வேகமாக பறக்கும் பறவை பற்றிய செய்தி.  

அதுவும் அது மேற்கு மலை தொடர்ச்சிப் பகுதிக்கு  உரிய பறவை என்பது ஆச்சரியமாக இருந்தது.  அது தொடர்பான செய்திகளைத் தெரிந்து கொள்ள நான் ஆசைப்பட்டேன்.

ந்தச் செய்திகளைச் சேகரித்தேன். அதுதான் இந்த பதிவு.

உலகிலேயே வேகமாகப் பறக்கும் பறவை, வேகமாக ஓடும் விலங்கு, வேகமாக வளரும் மரம், மற்றும் வேகமான புயல், கார், ரயில், செயற்கைக்கோள், பேஞ்சர் விமானம் பற்றி எல்லாம் கூட இதில் தொகுத்து தந்துள்ளேன். சுவாரஸ்யமாக இருக்கும் படியுங்கள்.    

உலகிலேயே அதிக வேகமாக பறக்கும் பறவையின் பெயர் ஷக்கின் பால்கன்  (Shaheen Falcon) என்பது. ஆங்கிலத்தில் பால்கன் என்றால் பருந்து. நாம் அதனை கருடன் என்றும் சொல்கிறோம். இதன் வேட்டையைத் தேடி பறந்து போகும் வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர் என்று சொல்லுகிறார்கள். இதனை டைவிங் ஸ்பீட் (Diving speed) என்று சொல்லுகிறார்கள். தன் இறையைப் பார்த்தவுடன் சட்டென்று கீழே இறங்கும் வேகம்.

இதன் அடிப்படையில் இதனை உலகிலேயே வேகமாக பறக்கும் பறவை என்றும் வேகமானப் பிராணி என்றும் சொல்லுகிறார்கள். இந்தப் பருந்தின் அறிவியல் பெயர் பால்கோ பெரிக்ரின் பால்கன் (Falco Peregrine Falcon) என்பது. இந்தியா மற்றும் இலங்கைக்கு சொந்தமான பருந்துப் பறவை இது.

ஸ்விப்ட்  என்ற ஒரு பறவையும் வேகமாகப் பறக்கும் பறவை என்று சொல்லுகிறார்கள்.  இதுவும் ஒரு வகையான பருந்துப் பறவை தான். இது மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.  

வானத்தில் ஒரு நேர்க்கோடு போட்டு அதில் பறக்கச் சொன்னால் ஷக்கின் பருந்தை இந்த ஸ்விஃப்ட் பருந்து தோற்கடித்து விடும். இதன் வேகம் மணிக்கு 170 கிலோமீட்டர்தான். அதுபோல ஷக்கீன் பருந்தைப் பறக்கச் சொன்னால் 60 கிலோ மீட்டர் அல்லது 70 கிலோ மீட்டரைத் தாண்டாது என்கிறார்கள்.

 உலகில் வேகமாக பறக்கும் பறவை ஸ்விஃப்ட் என்பதால் தான் மாருதி காருக்கு கூட ஸ்விஃப்ட் என்று பெயர் வைத்திருக்கக் கூடும். 

அடுத்து உலகில் வேகமாக ஓடும் விலங்கு பற்றி பார்க்கலாம். உலகில் வேகமாக ஓடும் விலங்கு சிறுத்தை. ஒரே பாய்ச்சலில் அது கடக்கும் தூரம் 23 அடி. ஒரு செகண்டில் சிறுத்தை நான்கு முறை பாயுமாம். அப்படி என்றால் கணக்கு பண்ணி பாருங்கள். ஒரு நிமிடத்தில் அது ஓடும் தூரம் எவ்வளவு என்று (23x4x60). சிறுத்தை, ஒரு மணிக்கு 96.56  கிலோமீட்டர் ஓடும்.    

மாண்டஸ் புயல் 85 கிலோமீட்டர் வேகத்திலும் சில சமயம் 90 கிலோமீட்டர் வேகத்திலும் வீசியது. புயல் கரையை கடக்கும் போது 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் கடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உலகில் இதுவரை வீசியப் புயல்களிலேயே மிக வேகமாக வீசிய புயலின் பெயர் ஹரிக்கேன் பத்திரிசியா (Hurricane Patricia) என்பது. கியூபாவில் வீசிய ஹரிக்கேன்  பத்திரிசியா. புயலின் வேகம் மணிக்கு 345 கிலோ மீட்டர். ஒப்பிட்டுப் பாருங்கள். மாண்டஸ் புயலின் வேகம் 85 முதல் 90 கிலோமீட்டர். ஹரிக்கேன்  பத்திரிசியா புயலின் வேகம் 345 கிலோ மீட்டர். இந்த வேகம் ஒரு நிமிடம் வரை நீடித்தது. இதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு 462.8 மில்லியன் டாலர். 

அடுத்து உலகிலேயே அதிகம் வேகமாக வளரும் மரம் பற்றிப் பார்க்கலாம். உலகில் உள்ள மர வகைகளில் மிக வேகமாக வளரும் மரங்கள் என்பவை மூங்கில் தான். 

மூங்கில்களில் கூட இருவகையான மரங்கள் மிக வேகமாக வளரும். அவை ஒரு நாளில் ஒரு மீட்டர் வரை வளரும். அவை மேடக்கி மற்றும் மோசோ என்னும் வகைகள். ஒரு நாளில் ஒரு மீட்டர் என்றால் அது ஆச்சரியமான செய்தி. அதுமட்டுமல்ல ஒரு மணி நேரத்தில் 1.5 அங்குலம் அது வளருமாம். ஒரு மூங்கில் மரத்தின் எதிரில் உட்கார்ந்து பாருங்கள். ஒரு மணி நேரத்தில் 1.5 அங்குலம் வளர்வதைக் கண்ணெதிரில் பார்க்க முடியும். மேடக்கி மரத்தின் தாவரவியல் பெயர் பில்லோடேக்கிஸ் ரெட்டிகுலேட்டஸ்  மற்றும் மோசோவின் பெயர்  பில்லோடாக்கிஸ்  எடுலிஸ். மூங்கில் மரம் ஒரு மணி நேரத்தில் 1.5 அங்குலம்  வளர்கிறது என்பதை கின்னஸ் பதிவு செய்துள்ளது. 

அடுத்து நாம் பார்க்கப்போவது உலகில் அதிக வேகமாக ஓடும் கார்.இதன் பெயர் புகாட்டி சிரான் சூப்பர் ஸ்போர்ட் (Bugatti Chiron Super Sport) என்பது. இந்த கார் தான் உலகில் மிக வேகமாக ஓடும் கார். இது ஒரு மணி நேரத்தில் 480.241 கிலோமீட்டர் ஓடும். இது ஒரு பந்தயக்கார். இதனை கண்டுபிடித்தவர் ஒரு ஜெர்மானியர். அவருடைய பெயர் எட்டோர் புகாட்டி என்பது. ஆனால் இந்த கார் பிரான்ஸ் நாட்டு கார். இதனை வாங்க வேண்டும் என்றால் நீங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு போக வேண்டும். இன்னொன்று புகாட்டி  காரின் மலிவான விலை வெறும் 19.21 கோடி ரூபாய் தான். 

அடுத்து ராக்கெட். உலகிலேயே மிக வேகமாக வானவெளியில் பறந்த ராக்கட், இதன் பெயர்  பார்க்கர் சோலார் பிராப் (Parker Solar Probe) என்பது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இதனை வானவெளியில் ஏவினார்கள். இதன் வேகம் கற்பனைக்கும் எட்டாத வேகம். ஒரு செகண்டில் 163 கிலோமீட்டர் போனது. ஒரு நிமிடத்தில் 9,780 கிலோமீட்டர் பறந்தது. அதன் வேகம் மணிக்கு  5 லட்சத்து 86 ஆயிரத்து 800 கிலோ மீட்டர்.

இதுதான் சூரியனுக்கு மிக அருகில் சென்ற செயற்கைக்கோள் என்று சொல்லுகிறார்கள். இது நாசாவினால் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள். 

அடுத்து வேகமாக ஓடக்கூடிய ரயில். உலகிலேயே மிகவும் வேகமாக ஓடும் ரயில் என்பது சீனாவின் "ஷாங்காய் மக்ளேவ்" (SHANGAI MAGLEV) என்பது. இந்த ரயில் சீனாவில் ஓடுகிறது. இந்த ரயிலின் வேகம் மணிக்கு 460 கிலோமீட்டர். மக்ளேவ்  என்பது மேக்னெட்டிக் லீவியேஷன் என்பது அதன் விரிவாக்கம். இது காந்தத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பம். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இப்போது ரயில் ஓட்டுகின்றன.

அடுத்து வேகமாக பறக்க விமானம் போயிங் 247- 8. 2022 ஆம் ஆண்டில் மிக வேகமாகப் பறக்கும் பயணிகளை ஏற்றிச் செல்லும் வியாபார ரீதியான விமானம் இதுதான். 

இந்த போயிங் 247- 8 விமானம் ஒரு மணிக்கு 1058.94  கி.மீ தூரம் பறந்து போகும். இந்த விமானம் 4 என்ஜின்கள் மூலமாக ஓடுகிறது. இரண்டு அதன் இறக்கைகளிலும், இரண்டு அதன் வால் பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்த விமானம் அமெரிக்க நாட்டிற்கு சொந்தமானது. 

அன்பின் இனிய நண்பர்களே, இந்த செய்திகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இதில் எந்த செய்தி உங்களுக்கு அதிகம் பிடித்தது என்று சொல்லுங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். 

பயன் தரும் செய்திகளை பகிர்வோம். பல பல பயன் பெறுவோம்.

நன்றி வணக்கம் ! 

பூமி ஞானசூரியன்

#ஃFASTESTBIRDSHAHEENFALCON

#FASTESTANIMALCHEETAH

#FASTESTBIRDSWIFT

#BUGATTICHIRONSUPERSPORT

#PARKERSOLARPROBE

#SHANGAIMAGLEV

#BOING7478

#ROCKETS

#MONDES

#HURRICANEPATRICIA

 




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...