Saturday, December 3, 2022

BEST INDIAN BUFFALO BREED LUIT

 

அஸ்ஸாம் எருமை

இனம் லூயிட்

“லூயிட் எருமை இனம், ஆற்று எருமையா ? சேற்று எருமையா ? அதற்கு எந்த ஊர் சொந்த ஊர் ? இது இந்தியாவில் எந்த பகுதிகளில் எல்லாம் பரவி உள்ளது ?  அதன் சிறப்பு என்ன ? எவ்வளவு பால் தரும் ? இது பற்றிய 15 சுவையான செய்திகளை உங்களுக்காக இங்கு தந்துள்ளேன்.

1. லூயிட் இன எருமைகளை பிரமபுத்திரா எருமை என்றும் சொல்லலாம். காரணம் அஸ்ஸாம் மொழியில் லூயிட் என்றால் பிரம்மபுத்திரா ஆற்றைக் குறிக்கும்.. 

2. பிரம்மபுத்திரா பல நாடுகளில் பல மாநிலங்களில் ஓடும் ஆறு. அதனால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் அதற்கு. யார்லஸ் சாங்க்போ என்பது திபத்தில் வழங்கும் பெயர். சியால் மற்றும் டிஹாங் என்றால் அருணாச்சல பிரதேசத்தில் வழங்கும் பெயர். பங்களாதேஷில் வழங்கும் பெயர்கள் ஜமுனா மற்றும் லூயிட்.

3. அசாமில் ஓடும் பிரம்மபுத்திராவும் லூயிட்தான். இங்கு வளர்க்கும் எருமையும் லூயட் தான்.

4. அசாம் மாநிலத்தின் சுமார் 9 மாவட்டங்களில் இந்த இன மாடுகளை வளர்க்கிறார்கள். அத்துடன் மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களிலும் வளர்க்கிறார்கள்.

5. பிரம்மபுத்திரா ஆற்றின் ஊடாக இருக்கும் தீவுகளில் மற்றும் ஆற்றங்கரைகளில் இந்த எருமை இனம் வளர்க்கப்படுகிறது.

6. லூயிட் இன எருமை மாடுகள் ஒரு ஈற்றுக் காலத்தில் 385 கிலோ 505 கிலோ பால் தரும். 

7. நெல் சாகுபடியோடு நெருக்கமான தொடர்பு கொண்டது. இந்த லூயிட் . சேற்று உழவுக்கு சிறப்பான எருமை இனம். முட்டிக்கால் சேறு இருந்தால் கூட முகம் சுளிக்காமல் உழவு செய்யும். 

8. லூயிட் இன எருமைகள் பால் கறக்கும்,வு ஓட்டும். வண்டிகள் இழுக்கும். கட்டைவண்டி, பெட்டி வண்டி எதுவாக இருந்தாலும் சட்டை செய்யாமல் இழுக்கும்.

9.நடுத்தரமான உறுதியான உடல்வாகு,  உட்புறம் குழிவான  முகம், தெறிப்பான கண்கள், அகன்ற மேல் உதடு, மங்கலான வெண்மையான கால்களின் அடிப்பகுதி, குட்டையான வால், மற்றும் கருப்பு நிற உடல், கொண்டவை இந்த எருமைகள்.

10. பெண் எருமைகளில் கொம்புகளை விட ஆண் எருமைகளின் கொம்பு நீளமாக இருக்கும். பக்கவாட்டிலும் பின்புறமும் வளைந்து மேற்புறம் எழும்பியவாறு அரை வட்டம் போடும் நீண்ட கொம்புகள்.

11. தன் ஆண் எருமைகள் அதிகபட்சமாக 470 கிலோவும் பெண் எருமைகள் அதிகபட்சமாக 411 கிலோவும் உடல் எடை இருக்கும்.

12. 48 முதல் 55 மாதங்கள் வளர்ந் எருமைகள் முதல் கன்று னும். அடுத்த 15 முதல் 17 மாதங்கள் கழித்து இரண்டாவது கன்று ஈனும்.

13. ஒரு கவைக் காலத்தில் அதிகபட்சமாக 505 கிலோ பால் தரும் லூயித் எருமை பாலில் சராசரியாக 8.68 கொழுப்பு சத்து கொண்டது.

அன்பு நண்பர்களே, லூயிட் எருமை பற்றிய கூடுதலான செய்திகள் ஏதும் உங்களுக்கு தெரிந்திருந்தால் தெரியப்படுத்துங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம். நன்றி வணக்கம். 

பயன்தரும் செய்திகளை பகிர்வோம். பலன் பல பெறுவோம்

பூமி ஞானசூரியன்

 

#CATTLE

#INDIANFUFFALOS

#CATTLECATEGORIES

#MILCHBUFFALO

#BUFFALOMILKCOWSMILK

#ORISSASILICALAKE

#ORISSASILICABUFFALO

#SILICALAGOON

#SILICASALTWATERLAKE

#SALTWATERLAKE

#INDIANBUFFALO

#NIGHTQUEENOFSILCA

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...