Friday, December 9, 2022

BANNI GRASS LAND BUFFALO BANNI

 

குஜராத்தின்

பன்னி

எருமை

 

GUJRAT BANNI BUFFALO 

குஜராத் மாநிலத்தில் பன்னி லேண்ட் என்ற பகுதியில் உள்ள எருமை இனம். நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 18 லிட்டர் வரை பால் தரும். முல்தாரிஸ் இன மக்களுக்கு சொந்தமான எருமை இனம். பன்னி கிரேஸ் லேண்ட் என்ற புல்வெளியின் உதவியோடு இந்த பகுதியில் பால் புரட்சிக்கு காரணமாக இருக்கும் எருமை இனம். 

1.குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்திற்குச் சொந்தமானது. இந்த பன்னி இன எருமையை கட்சி மற்றும் குண்டி என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள்.

2.கட்சி மாநிலத்தைச் சேர்ந்த முல்தாரிஸ் என மக்களுக்கு சொந்தமான எருமை இனம் இந்த பன்னி.  

3.இந்த பன்னி இன எருமைகள் ஒரு நாளில் 18 முதல் 19 லிட்டர் கூட பால் தரும்.  

4.மற்ற எருமை இனங்களை விட பன்னி இன எருமைகளை முல்தாரிஸ் இன மக்கள் சிறப்பாகக் கருதுவதற்குக் காரணம் அதிகமான கறவைக் காலம், அதிகமான பால் தரும் பண்பு, மற்றும் அதன் நோய் எதிர்ப்பு தன்மை.

 5.பன்னி இன மாடுகள் மாறுபட்ட சுற்றுச்சூழலையை சமாளிப்பதோடு, வறட்சியான சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிறது.

6.ஒரு காலத்தில் சிந்து பகுதி என்று அழைக்கப்படும் இன்றைய பாகிஸ்தான் பகுதிதான் பன்னி இன எருமைகளின் பூர்வீகம்.

7.தற்போது இதனை பன்னிப் பகுதி என்று சொல்லுகிறார்கள். சுமார் 500 ஆண்டுகளாக முல்தாரிஸ் இன மக்கள் இந்த இன எருமைகளை வளர்த்து வருகிறார்கள். 

8.பன்னி எருமை இனத்தை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாட்டினமாக 2010 ஆம் ஆண்டு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தால் அறிவிக்கப்பட்டது. 

9.பன்னி லேண்ட் என்னும் பகுதி 2600 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது.இது ஒரு புல்வெளி என்பது ஆச்சரியமான ஒரு செய்தி. 

10.இந்தப் புல்வெளியில் இருக்கும் 30 வகையான புற்களை இந்த பன்னி இன மாடுகள் தங்கள் தீவனமாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றன.

11.பன்னி இன எருமைகள் தங்கள் கிராமங்களில் இருந்து தினமும் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை நடந்து போய் மேய்ச்சலுக்காக இந்த புல்வெளி போய் சேருகின்றன பின்னர் மேய்ந்து விட்டு அதே தொல்லையினை நடந்து தங்கள் கிராமங்களை அடைகின்றன.

12.குஜராத் மாநிலத்தில் இருக்கும் மொத்த பன்னி எருமைகள் 3 லட்சத்து 19 ஆயிரம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

13.அதிக பால் தருவதால் குஜராத் மாநிலத்தின் இதர பகுதிகளிலும் இந்த எருமைகளை விரும்பி வளர்க்கிறார்கள்.

14.இந்த பன்னி எருமைகளில் கலப்பினம் ஏற்படக்கூடாது என்று எச்சரிக்கையுடன் இந்த முல்தாரிஸ் இன மக்கள் பன்னி இன மாடுகளை சுத்தமாகப் பராமரித்து வருகிறார்கள்.  

15.இந்த மாடுகளில் பால்மடி வட்ட வடிவமாக, பெரியதாக, நான்கு பகுதிகளாகப் பிரிந்திருக்கும், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு காம்பு பொருந்தி இருக்கும்.

16.பெரும்பாலான பணி என மாடுகள் கருப்பு நிறமாகவும் காவி நிறமாகவும் இருக்கும் அவற்றின் முகம் வால் மற்றும் கால்களின் அடிப்பகுதிகளில் வெள்ளை நிறத் திட்டுக்கள் காணப்படும்.

அன்பின் இனிய நண்பர்களே இன்றைக்கு நான் உங்களுக்கு சொன்ன செய்திகளில் உங்களுக்கு பிடித்தமான செய்தி பன்னி எருமை இனம் பற்றியா ? அல்லது பன்னி புல்வெளி பற்றியா ? என்று சொல்லுங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம். 

நன்றி வணக்கம்.  

பயன் தரும் செய்திகளை பகிர்வோம் ! பல பல பயன் பெறுவோம் ! 

பூமி ஞானசூரியன் 

#GUJRATHBANNI

#CATTLEBUFFALO

#INDIANBUFFALO

#BANNILANDGRASSLAND

#MILKBUFFALO

#BUBALUSBUBALIS

#WATERBUFFALO

#LARGESTASIANGRASSLAND

#PROSOPISJULIFLORA

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...