Wednesday, November 16, 2022

UNITED NATIONS CLIMATE CHANGE CONFERENCE - COP 27

 செய்தி 1

எகிப்தில் பருவநிலை

பாதுகாப்பு மாநாடு 

1. ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற பாதுகாப்பு சபையின் 27ஆவது சர்வதேச மாநாடு எகிப்து நாட்டில்நடக்கிறது.

2.எகிப்து நாட்டில் ஷர்ம் அல் ஷேக் நகரில்  நவம்பர் 6 தேதி தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 

3.பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்காக வளர்ச்சி அடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்ற முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது. இது பற்றிய முடிவுகளைஉறுதியாக எடுப்பதுதான் இந்த 27வது சர்வதேச மாநாட்டின் முக்கியமான நோக்கமாகும். 

4. இந்த வகையில் வளரும் நாடுகள் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் கோடி வழங்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

 5. இதற்கிடையே கொரோனா வந்தது. உக்கிரேன் ரஷ்யா சண்டை மூண்டது. இதனால் சர்வதேச அளவில் பொருளாதாரநிலை ஆட்டம் கண்டது. இதனால் இந்த முயற்சியில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. 

 

6.இதற்கு  பிள்ளையார் சுழி போடுவது தான் இந்த சர்வதேச மாநாட்டின் முக்கிய நோக்கம் என தெரிகிறது.

7.ஐக்கிய நாடுகள் சபையின் 27 வது பருவநிலை மாற்றப் பாதுகாப்பு  சர்வதேச மாநாட்டின் தலைவர் சமேக் சவுரி அவர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். 

8.இந்த மாநாட்டின் தலைவர் சமேக் சவுக்ரி அவர்கள் தனது உரையில் பணக்கார நாடுகள் தாங்கள் தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

9.பணக்கார நாடுகள் பருவநிலை பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை வளரும் நாடுகளில் செயல்படுத்த ஒரு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் உதவியாக அளிக்க சம்மதித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

10.பணக்கார நாடுகளின் திரட்டப்படும் இந்தத் தொகை சர்வதேச அளவில் ஏற்படும் பசுமைஇல்ல வாயுக்களைத் தடுக்கவும், பொருளாதார நிலையில் ஏழ்மையாக உள்ள நாடுகளில் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கான நிவாரண தொகையாகவும் இது பயன்படுத்தப்படும்.  

பருவகால மாற்றப் பாதுகாப்புக்காக வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளிடம் உதவி கோருவது சரியா என்று உங்கள் கருத்தை தெரிவியுங்கள். 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

#COP27EGYPTSHARMELSHEIKH

#UNITEDNATIONSCLIMATECHANGECONFERENCE

#UNCLIMATESUMMITAFRICA

#ADAPTATIONAGENDA

#DEVELOPINGCOUNTRIES

#CLIMATEJUSTICE

#UNFCCCCOP27

#CLIMATECHANGEACTION

#CLIMATEIMPLEMENTATIONSUMMIT

#CONFERENCE OF PARTIES

#INTERNATIONALCONFERENCEONCLIMATECHANGE


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...