நாகபுரி எருமை
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாகபுரி அகோலா மற்றும் அமராவதி மாவட்டங்களுக்கு உரிய எருமை இனம், ஒரு நாளில் 10 முதல் 20 லிட்டர் பால் கறக்கும், இந்தியாவின் 10 முக்கிய எருமை இனங்களில் ஒன்று, நாகபுரி எருமை.
1.நாகபுரி எருமை இனம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சொந்தமானது. இந்திய எருமை இனங்களில் பிரபலமானது.
2. ஒரு நாளில் 12 முதல் 20 லிட்டர் பால் கறக்கும். மகாராஷ்டிராவில் விதர்ப்பா பகுதிக்கு உரியது நாகபுரி எருமை இனம்.
3. இன்று நீங்கள் பால் கறக்கும் நாகபுரி எருமை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 85 ஆயிரம் ரூபாய் மடியில் இருக்க வேண்டும்.
4. எருமை இனங்களில் இரண்டு வகை உண்டு. அவை ஆற்றங்கரை எருமை இனங்கள், இன்னொன்று சேற்று எருமை இனங்கள்.
6.எருமைகள் எல்லாமே காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு நாட்டுப்புறங்களில் பழக்கப்படுத்தப்பட்டவைதான். அப்படி கிழக்கிந்திய பகுதிகளில் இப்படிப்பட்ட காட்டெருமைகள் இன்னும் பல காட்டில் திரிகின்றன.
7.ஆற்று எருமைகள் மற்றும் சேற்று எருமைகள் இரண்டுமே பூபாலஸ் புபாலிஸ் (BUBALUS BUBALIS) என்ற அறிவியல் பெயரை உடைய எருமைகள்தான்.
8.நாட்டு மாடுகளை விட நாட்டு எருமை இனங்கள் மூன்று மடங்கு அதிகமான பால் கறக்கக்கூடியவை.
9. இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் 55 சதம் பாலை எருமை இனங்கள் தான் தருகின்றன. சுமார் 10 எருமை மாட்டு இனங்கள் இந்தியாவில் உள்ளன.
10. நாகபுரி எருமை இனங்கள் கருப்பு நிறமாக இருக்கும். அவற்றின் முகம் வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத் திட்டுக்கள் இருக்கும்.
11. நாகபுரி எருமைகளின் வேறுபெயர்கள் எலிட்சபுரி மற்றும் பராரி.
12. இதன் கொம்புகள் நீளமாக, தட்டையாக, பின்புறமாக சுருண்டு தோராயமாக விலாபுறத்தைத் தொட்டபடி இருக்கும்.
13. காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த கொம்புகளின் அமைப்பு உதவியாக உள்ளது.
14. இதன் முகம் நீளமாக இருக்கும். கழுத்தும் நீளமாக ஒல்லியாக இருக்கும்.
15. 45 முதல் 50 மாதங்கள் வளர்ந்த எருமைகள் தான் கன்று போடும். மறுகன்று போட 450 முதல் 550 நாட்களாகும்.
16. நாகபுரி எருமை மாடுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாகபுரி அகோலா மற்றும் அமராவதி மாவட்டங்களுக்கு உரிய எருமை இனம் இது.
17. ஒரு கறவைக் காலத்தில் 700 முதல் 1200 கிலோ பால் கறக்கும் (ஒரு கிலோ பால் = 1.03 லிட்டர் பால்)
நாகபுரி எருமைகள் பற்றி இன்னும் கூடுதலாக சுவையான தகவல்கள் ஏதும் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள், மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
#CATTLEBUFFALO
#MEHSANAINDIANBUFFALO
#GUJRATBUFFALO
#WATERBUFFALOMOREMILKBREED
#COUNTRYBUFFALOSUITABLEDAIRYANIMAL
#MOREMILKBUFFALO
#BUFFALOFACTSANIMALHUSBANDRY
#IMPORTANTMILKBUFFALO
No comments:
Post a Comment