ஒரு மரம் எவ்வளவு கரியமில வாயுவை உறிஞ்சி தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும் ? எந்த மரங்கள் அதிகபட்சமான கரியமில வாயுவை தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும் ? மரங்கள் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கரியமில வாயுவை சேமித்து வைத்துக் கொள்ளும் ?
இந்த இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இப்போது பார்க்கலாம்.
1.பொதுவாக மரங்கள் தனது அடி மரப்பகுதி கிளைகள், இலைகள், வேர்கள், எல்லாவற்றிலும் கரியமில வாயுவை தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
2. பெரிய அடி மரம், நிறைய நெருக்கமான கிளைகள், அகலமான இலைகள், அகன்ற தலைஅமைப்பு (CROWN)கொண்ட மரங்கள், அதிகமான கரியமில வாயுவை சுற்றுச்சூழலில் இருந்து அகற்றுகின்றன.
3. வேகமாக வளரும் மரங்கள் தனது முதல் 10 ஆண்டுகளில் அதிகப்படியான கரியமில வாயுவை எடுத்துக் கொள்ளும்.
4.மண்ணுக்குரிய மரங்களாக (NATIVE TREES) இருந்தால் நன்றாக வளர்ந்து நிறைய கரியமிலவாயுவை கட்டுப்படுத்த முடியும்.
5. குறைவான பராமரிப்பு தேவைப்படும்
சாதாரண மரங்களும் நன்றாக வளர்ந்து கூடுதலான காரியமில வாயுவை சூழலில் இருந்து
கபளிகரம் செய்யும்.
மீண்டும் அடுத்தப் பதிவில்
பார்க்கலாம்.
வணக்கம் !
பூமி ஞானசூரியன்
#TREESREDUCECARBONINATMOSPHERE
#CARBONSEQUESTRATION
#SEQUESTERCARBON
#TREESSEQUESTER
#CLIMATECHANGE
#GLOBALWARMING
#GREENHOUSEGASES
#NATURALDISASTERS
#PHOTOSYNTHESIS
#CARBONSINKS
#FORESTSTORECARBON
#CARBONDIOXIDE
#METHANE
#NITROUSOXIDE
#MIYAWAKIMINIFORESTS
No comments:
Post a Comment