ஒண்ணரை டிகிரி சென்டிகிரேடில்
நிறுத்த வேண்டும்
எகிப்தில் நடக்கும் பருவநிலை பாதுகாப்பு மாநாடு
(நவம்பர் 6 முதல் 18 வரை)
ஐ நா வின் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில், பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதை 45 சதமாகக் குறைக்க வேண்டும், புவி வெப்பமயமாவதை 1.5 டிகிரி சென்டிகிரேடுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும், வளர்ந்த நாடுகள் தங்களால் உருவான பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுக்க நிதி உதவி அளிக்க யோசிக்கக்கூடாது என்பதுபற்றி பேசப்படுகிறது. யார் பேசினார்கள் என்ன பேசினார்கள் என்று இப்போது பார்க்கலாம்.
1. 27 வது ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றப் பாதுகாப்பு மாநாடு எகிப்தில் நடந்து வருகிறது (நவம்பர் 6 முதல் 18 வரை).
2. இந்த சர்வதேச மாநாட்டிற்கு தலைமை வகித்த சமேக் சவுரி அவர்கள் எகிப்து நாட்டின் அமைச்சர். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த அவர் தனது தலைமை உரையில் பணக்கார நாடுகள் தாங்கள் தந்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்று தெரிவித்தார்.
3. வளர்ந்த நாடுகள் பருவநிலை பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை வளரும் நாடுகளில் செயல்படுத்த ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் உதவியாக அளிக்க ஏற்கனவே சம்மதித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
4.இப்படித் திரட்டப்படும் இந்தத் தொகை சர்வதேச அளவில் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களைத் தடுக்கவும் பொருளாதார நிலையில் ஏழ்மையாக உள்ள நாடுகளில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களுக்கான நிவாரணத் தொகையாகவும் பயன்படுத்தப்படும்.
5. ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை பாதுகாப்பிற்கான நிர்வாகச் செயலாளர் சைமன் ஸ்டீல் அவர்கள் பணக்கார நாடுகள் தங்கள் தந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
6.சைமன் ஸ்டீல் அவர்கள் பேசும்போது தற்போதைய பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதை 45 சதமாகவும் புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவிலும் தடுத்து நிறுத்த வேண்டிய நமது இலக்கை நினைவு படுத்தினார்.
7. புதியதாக அவ்வப்போது அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றங்கள், உணவு தட்டுப்பாடு, படிம எரி பொருட்களின் விலை உயர்வு, உயர்ந்து வரும் வாழ்க்கை செலவினங்கள், ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய வண்ணம் பருவநிலை மாற்றப் பாதுகாப்பின் 27 வது சர்வதேச மாநாடு எகிப்தில் நடந்து வருவதை நாம் அறிவோம்.
8. இந்த மாநாட்டில் 196 உலக நாடுகள் பங்கு பெறுகின்றன.இந்த நாடுகளை சேர்ந்த 45 ஆயிரம் பேரும் 120 உலக தலைவர்களும் இதில் கலந்து கொள்ளுகிறார்கள்.
9.கான்பரன்ஸ் ஆப் பார்ட்டிஸ் (COP)எனும் இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதன் முதல் மாநாடு 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெர்மனியில் "பான்" நகரில் நடந்தது.
10. எகிப்து நாட்டில் நடக்கும் இந்த இரண்டு வார மாநாட்டின் செலவுகளை "ரிபப்ளிக் ஆப் ஈஜிப்ட் அரசு" ஏற்கிறது.
11.இந்த சர்வதேச மாநாடு எகிப்து நாட்டில் ஷாம் எல் ஷேக் என்ற நகரில் ரெட் சி ரிசார்ட் என்ற இடத்தில் நடைபெறுகிறது.
அடுத்த பதிவில் இந்த சர்வதேச மாநாடு பற்றிய கூடுதலான பல செய்திகளை பார்க்கலாம்.நன்றி வணக்கம் ! மீண்டும் சந்திப்போம்!
- பூமி ஞானசூரியன்
#COP27EGYPTSHARMELSHEIKH
#UNITEDNATIONSCLIMATECHANGECONFERENCE
#UNCLIMATESUMMITAFRICA
#ADAPTATIONAGENDA
#DEVELOPINGCOUNTRIES
#CLIMATEJUSTICE
#UNFCCCCOP27
#CLIMATECHANGEACTION
#CLIMATEIMPLEMENTATIONSUMMIT
#CONFERENCE OF PARTIES
#INTERNATIONALCONFERENCEONCLIMATECHANGE
No comments:
Post a Comment