சைபீரியன்
ரூபித்ரோட் பறவை.
பனிப்பிரதேசத்திலிருந்து மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா வந்திருக்கும் பறவை, சுமார் 4760 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சைபீரியாவில் இருந்து ஒரு மணிக்கு 50 கிலோமீட்டர் என 95 மணி நேரம் பறந்து இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் நீலகிரிக்கு, சுற்றுலா வந்துள்ளது சைபீரியன் ரூபித்ரோட் என்னும் பறவை.
பறவைன்னா பறக்கணும், சாதா பறவைன்னா அஞ்சி பத்து கிலோமீட்டர் பறந்தா போதும், வலசை வரும் பறவைன்னா ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பறக்கணும். அதுல ஏகப்பட்ட ஆபத்துக்கள் இருக்கு. அதையெல்லாம் தாண்டிப் பறக்கணும். அது சும்மா இல்ல.
இந்த சைபீரியன் குருவியின் குலங்கோத்திரம் என ஒரு 14 செய்திகளை உங்களுக்காக தேடிப்பிடித்துத் தந்திருக்கேன். இந்தச் செய்திகள் எல்லாம் புதுசு..
1. சைபீரியாவின் பனிப் பிரதேசத்தில் உள்ள ஊசி இலைக் காடுகளில் வசிக்கும் பறவைகளில் ஒன்று இந்த ரூபித்ரோட் பறவை.
2. இது வலசைவரும் பறவை(Migrating Birds) இனத்தைச் சேர்ந்தது, பறவைகள் பருவநிலை ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயர்கின்றன. பெரும்பாலான பறவைகள் வட திசையிலிருந்து தென்திசைக்கு இடம் பெயர்கின்றன.
3. உணவு இருப்பு, தங்கும் இடவசதி, நிலவும் தட்ப-வெப்ப-நிலை, இவற்றைத் தேடி பறவைகள் புலம் பெயர்கின்றன. அதைத்தான் வலசைப் போவது என்கிறார்கள்.
4. கொக்குகள், ஒருவகை புறாக்கள், தகைவிலான் குருவிகள், போன்றவை வலசை போகும் பறவைகள் என வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
5. உலகில் உள்ள பத்தாயிரம் வகையான பறவை இனங்களில் 1800 வகைகள் மட்டுமே வலசை போகும் பறவைகள். இவை ஊர்விட்டு ஊர் போகும் பறவைகள் அல்ல, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள்.
6. அப்படி இந்த சைபீரியா ரூபித்ரோட் பறவை இனங்கள் குளிர்காலத்தில் இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு சென்று இனப்பெருக்கம் செய்கின்றன. இது பறவைகளின் சுற்றுலா, இல்லை இல்லை, இது பறவைகளின் ஹனிமூன்.
7. இந்தப் பறவைகள் சாம்பல் நிறமாக இருக்கும் ஆண் பறவைகளின் தொண்டை பகுதி சிவப்பு நிறமாக இருக்கும். இதை வைத்துதான் இதனை “ரூபித்ரோட்” என்கிறார்கள்.
8. கி ஸ்டோன் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகர தாஸ் ஒரு பறவை ஆர்வலர், இவர் நீலகிரி கோத்தகிரியில் தேயிலைத் தோட்டத்தில் இந்த சைபீரியாரூபி சுற்றித் திரிவதைப் பார்த்து இதனைப் பதிவு செய்துள்ளார்.
9. இந்த சைபீரியாரூபியின் அறிவியல் பெயர் கேலியோப் கேலியோப் (Calliope Calliope), இதனை பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கும் பறவைகளில் ஒன்று (Old World Fly Catchers).
10. இந்த வகை பறவைகளை பாசரின் பறவைகள் (Passerine Birds) என்னும் வகையினை சேர்ந்ததும் கூட. அதாவது மரங்களின் கிளைகளில் உட்காருவதற்கு வாகான விரல் அமைப்பை உடைய பறவைகள் என்று அர்த்தம்.
11. இந்த “கிளை அமர் பறவை” வகைகளில் மூன்று விரல்கள் முன் பக்கமும் ஒரு விரல் பின்பக்கமும் இருக்கும்.
12. இந்தியாவில் இது மாதிரியான “ரூபித்ரோட்” செங்கழுத்துப் பறவைகள் இருக்கா என்றால், இருக்கு. இந்தியாவில் இமாலயன் ரூபித் த்ரோட் (Himalayan Ruby Throat) என்று ஒரு செங்கழுத்துப் பறவை உண்டு.
13. இந்த “ஹிமாலயன் செங்கழுத்து” பறவையின் அறிவியல் பெயர் கேலியோப் பெக்டோரலிஸ் (Calliope Pectoralis) என்பது.
14. இந்த ஹிமாலயன் பறவை இந்தியா உட்பட மத்திய ஆசியாவின் 12 நாடுகளில் உள்ளதாக சொல்லுகிறார்கள். இவை ஒரு குறிப்பிட்ட பருவத்தில் இனப்பெருக்கத்திற்காக பல ஆயிரம் மைல்கள் பறந்து போகும்.
இந்த ரூபிக் ரோட் என்னும் செங்கழுத்து பறவை பற்றிய வேறு சுவாரசியமான செய்திகள் இருந்தால் எனக்கு சொல்லுங்கள். மீண்டும் அடுத்த பதிவில் பார்க்கலாம் நன்றி வணக்கம்.
பயனுள்ள செய்திகளைப் பகிர்வோம் ! பலன்பலப் பெறுவோம் !
பூமி ஞானசூரியன்
#RUSSIANBIRD
#SIBERIANRUBYTHROAT
#CALLIOPECALLIOPE
#PASSERINEBIRD
#MIGRATORYBIRDS
#OLDWORLDFLYCATCHERS
#INSECTIVORUS
#CHATSWEEKSONGSTRONGVOICEBIRD
#HIMALAYANRUBYTHROAT
#SWALLOSTUTLEDOVES
No comments:
Post a Comment