தோடா எருமை
தோடா எருமை நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர்கள் எனும் பழங்குடி மக்களுக்கு சொந்தமானது. அது பால் தரும் மாடு என்பதை விட அதனை தெய்வீகமான மாடாக கருதுகிறார்கள். அது பற்றிய 18 செய்திகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. தோடா எருமை எனும் நீலகிரி மாவட்டத்தில் தோடா பழங்குடி மக்களுக்கு சொந்தமானது.
2. தோடா பழங்குடி மக்கள் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமான பழங்குடிகள்.
3. தோடா எருமைக் கன்றுகள் பெரும்பாலும் செம்மஞ்சள் நிறமாக இருக்கும். வளர்ந்த எருமைகள் செம்மஞ்சளுடன் சாம்பல் நிறமும் கலந்தது போல் இருக்கும்.
4. இவை இதர எருமை இனங்களில் இருந்து வேறுபட்டவை. நீண்ட உடல் அமைப்பும், விரிந்த மார்பினையும், குட்டையான ஆனால் உறுதியான கால்களையும் உடையவை,
5. இவற்றின் தலை பெரிதாக, அதிக எடை கொண்டதாக, கொம்புகள் அகன்றும், உடன் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், சில முன்புறமாகவும் சுருண்டு இருக்கும்.
6. இதன் உடல் முழுக்க அடர்த்தியான ரோமத்தால் முழுவதுமாக போர்த்தியபடி மூடி இருக்கும்.
7. தோடா எருமைகளை தோடா இனத்து பழங்குடி மக்கள், தெய்வீக சக்தி படைத்ததாக கருதுகிறார்கள்.
8. தோடாஎருமைகள் இன்று எண்ணிக்கையில் குறைந்துவிட்டன
9. ஆசிய நீர் எருமைகளில் ஒன்று தான் இந்த தோடா எருமைகள். இவை ஆரம்ப காலத்தில் நாள் ஒன்றுக்கு ஐந்து லிட்டர் பால் என்று கறந்த இந்த எருமைகள் தற்போது ஒரு லிட்டர் என்ற அளவுக்கு குறைந்துவிட்டன.
10. இதற்குக் காரணம் அதற்கான புல்வெளிகள் மற்றும் காடுகள் குறைந்ததுதான் என்கிறார்கள் தொடர் இனத்து பழங்குடி மக்கள்.
11. தோடர்களின் ஒவ்வொரு குடியிருப்பிலும் எருமை மாடுகளுக்கான ஒரு கொட்டடி இருக்கும். ஒரு குடியிருப்பில் நான்கு முதல் பத்து குடும்பங்கள் வசிக்கும்.
12. தோடர்களின் கலாச்சார வாழ்க்கையில் இந்த எருமைகளுக்கு ஒரு தனி இடம் உண்டு. இந்த எருமைகளுக்கென்று கோயில் கட்டி அதனை வழிபடுகிறார்கள்.
13. தோடர்கள் தங்கள் வசிப்பிடங்களில் ஆண் எருமைகளை வளர்ப்பதில்லை. அவை காடுகளில் திரிந்தபடி இருக்கும்.
14. நான்கு ஆண்டுகள் வளர்ந்த எருமைகள் கன்று போட ஆரம்பிக்கின்றன. அதன் பிறகு 14 மாதங்களுக்கு ஒரு முறை அவை கன்றுகளை ஈனுகின்றன.
15. தோடா எருமைகள் ஒரு கறவைக் காலத்தில் 500 லிட்டர் பால் மட்டுமே தருகின்றன. இதன் பாலில் எட்டு சத கொழுப்புச் சத்து உள்ளது.
16. தோடா எருமைகள் இனவிருத்தி அடைய வேண்டும் என்பதற்காக இவர்கள் முன்போ மற்றும் உடையாள் என்ற கோயில்களில் பண்டிகை நடத்துகிறார்கள்.
நண்பர்களே, தோடா எருமை இனத்தை பற்றி இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம். பூமி ஞானசூரியன்.
#CATTLE
#MILCHANIMALS
#CATTLECATEGORIES
#INDIANCATTLE
#BUFFALOMILKCOWSMILK
#A1&A2 MILK
#MILKPRODUCTS
#SKIMMEDMILK
#YOGURTBUTTERCREAM
#MILKPASTURIZATION
#VALUEADDITION
#MILKPRODUCTIONININDIA
No comments:
Post a Comment