குஜராத் மாநிலத்தின் கிர் காட்டிற்கு சொந்தமான எருமை இனம், கட்ச் மற்றும் ஜாம்நகர் பகுதிக்கு சொந்தமானது, பாலும் கறக்கலாம், உழவும் ஓட்டலாம், வண்டியிலும் கட்டலாம், முதன்முதலாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆன இனம், இறைச்சிக்கும் பயன்பட்ட எருமை என்னும் பல பெருமைகளுக்கும் உரியது இந்த ஜாஃப்ராபாடி எருமை இனம்.
1.குஜராத்தின் கிர் காட்டிற்கு சொந்தமான எருமை இனம். இது ஒரு ஆற்று எருமை இனம்.
2.குஜராத்தின் எந்த பகுதி என்று கேட்டால் குறிப்பாக கட்ச் மற்றும் ஜாம்நகர் பகுதிக்குரிய மாட்டினம் என்று சொல்லலாம்.
3.ஆனாலும் இது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உரிய எருமை இனம்.
4.இதன் கொம்புகள் தலையில் இரண்டு பக்கமும் ஆங்கில எழுத்து "சி"மாதிரி இருக்கும்.
5.ஜாஃபராபாடி எருமைகள் பெரும்பாலும் கருப்பு நிறமாகவே இருக்கும்.
6.ஒரு கறவைக் காலத்தில் ஜாஃப்ராபாடி எருமைகள் 1000 முதல் 1200 கிலோ வரை பால்
தரும். ஒரு நாளில் 6.8 கிலோ பால் தரும்.
(ஒரு கிலோ பால் என்றால் 1.03 லிட்டர் பால் என்று அர்த்தம்)
7.ஜாஃப்ராபாடி எருமைகளை பெரும்பாலும் மால்தாரிஸ் என்னும் பழங்குடி மக்கள்தான் வளர்க்கிறார்கள். இவர்கள் நாடோடி இனத்தை சேர்ந்தவர்கள்.
8.ஜாஃப்ராபாத்தின் காளைகளை உழவு ஓட்ட, வண்டி இழுக்க பயன்படுத்தலாம்.
9.இந்தியாவிலிருந்து பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் எருமை இனம் ஜாஃப்ராபாடி தான்.
10.ஜாஃப்ராபாடி எருமை இனம் கூட ஒரு கலப்பின எருமை தான். இது "ஆப்பிரிக்கன் கேப்" என்பதையும் "இந்தியன் வாட்டர் பஃப்பலோ" என்பதையும் சேர்த்து உருவாக்கியதுதான் ஜாஃபராபாடி எருமை இனம்.
11.ஆப்பிரிக்கன் கேப் எருமை இறைச்சிக்காக வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
12.வெள்ளைக்காரர்களின் ஆட்சி காலத்தில் ஜாஃபராபாத் என்பது ஒரு தனி மாநிலமாக இருந்தது, இன்று குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் கத்தியவார் பகுதிதான் அது.
13.ஜாஃபராபாத் எருமைக்கு எவ்வளவு தீனி போடுகிறீர்களோ அதை அப்படியே பாலாக மாற்றி தரும் சக்தி உடையது.
14.இதன் காளைகள் நல்ல உழைப்பாளிகள், நிறைய உழவு செய்யும், வண்டிகளில் எவ்வளவு சுமை வைத்தாலும் இழுக்கும்.
நீங்கள் யாராவது இந்த ஜாஃராபாத் எருமை மாடுகளை வளர்க்கிறீர்களா என்று சொல்லுங்கள்.
மீண்டும் அடுத்த பதிவில்
சந்திக்கலாம். நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
#CATTLEBUFFALO
#INDIANMILKBUFFALO
#JAFFRABADIBUFFALO
#GUJRATJAFRABADIDAIRYBUFFALO
#WATERBUFFALOMOREMILKBREED
#COUNTRYBUFFALOSUITABLEDAIRYANIMAL
#MOREMILKBUTTERGHEEBUFFALO
#BUFFALOFACTSANIMALHUSBANDRY
#IMPORTANTMILKBUFFALOBIGGESTBULLS
No comments:
Post a Comment