செய்தி எண்: 2
அலையாத்தி மரங்களும்
கரியமில வாயுவும்
1.என்ன மரங்கள் எல்லாம் அப்படி கரியமல வாயுவை வாயுவை எடுத்துக் கொள்ளும் ? நேரடியாக இதற்கு பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அலையாத்தி மரங்கள் இதற்கு மிகவும் பொருத்தமான மரங்கள் என்கிறார்கள்.
2.பருவநிலை மாற்ற விளைவுகளை தடுப்பதில் அலையாத்தி மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு அலையாத்தி மரம் தனது வாழ் நாளில் 308 கிலோ கரியமிலவாயுவை நீக்குகின்றன. ஒரு மரம் ஒரு ஆண்டில் 12.3 கிலோ கரியமிலவாயுவை நீக்குகின்றன.
3. அலையாத்தி மரங்கள் அதிகமான கரியமில வாயுவை எடுத்துக் கொள்வதோடு மரத்தை சுற்றி இருக்கும் மண்ணின் மூலமாகவும் இந்த காரியத்தை செய்கிறது. இதர மரங்களைவிட இந்த மரங்கள் 10 மடங்கு அதிக கரியமில வாயுவை சூழலிலிருந்து நீக்குகின்றன.
4. அலையாத்தி மரங்கள் வெள்ளத்தையும், மண் அரிப்பையும் தடுக்கும். மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கும். மேலும் தண்ணீரில் கலந்திருக்கும் மாசுபொருட்களை அவை கட்டுப்படுத்துகின்றன.
5. பைன் மரங்களும் அதிகப்படியான கரியமல வாய்மை சூழலில் இருந்து பிரித்து எடுக்கும் சக்தி படைத்தவை. குறிப்பாக சிவப்பு பாண்டிரோசா வெள்ளை பாண்டிரோசா ஹிஸ்பானியன் பைன் மரங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். இந்த பைன் மரங்கள் உலகம் முழுவதும் அதிகம் இருக்கின்றன.
6. பசுமை மாறா மரங்கள் கூட அதிகப்படியான
கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் தன்மை உடையவை. உதாரணமாக உயரமான டவ்க்ளஸ் ஃபிர்
மரங்களையும் பால்டு சைப்ரஸ் மரங்களையும் சொல்லலாம்.
நம்ம ஊர் மரங்களைப் பற்றி சொல்லவில்லை என்று நினைக்க வேண்டாம். இதே அடிப்படையில் நம்ம ஊர் மரங்களையும் நாம் பார்க்கலாம்.
அடுத்த பதிவில்
சந்திக்கலாம் நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
#TREESREDUCECARBONINATMOSPHERE
#CARBONSEQUESTRATION
#SEQUESTERCARBON
#TREESSEQUESTER
#CLIMATECHANGE
#GLOBALWARMING
#GREENHOUSEGASES
#NATURALDISASTERS
#PHOTOSYNTHESIS
#CARBONSINKS
#FORESTSTORECARBON
#CARBONDIOXIDE
#MANGROVETREES
#CONTROLPOLLUTIONSOILEROSION
#MIYAWAKIMINIFORESTS
No comments:
Post a Comment