கரியமில வாயுவை
கட்டுக்குள் வச்சிக்கணும்
எகிப்து நாட்டில் நடக்கும் பருவநிலை பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது செய்தித் தொகுப்பு இது, ஐ நா சபையில் இணையாத இரண்டு நாடுகள், பாரீஸ் ஒப்பந்தம் எப்படி கேள்விகுறி ஆனது, ஐநாவின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் என்ன பேசினார், 2015 ம் ஆண்டின் ஒப்பந்தம் என்றால் என்ன?, என்றெல்லாம் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
1.ஆண்டுதோறும் நடக்கும் இந்த மாநாடு, ஒவ்வொரு நாட்டுக்கும், உதவியாக இருக்கும். தங்கள் நாட்டில் எப்படி பருவ கால மாற்ற பாதுகாப்பு தொடர்பான பணிகளைச் செய்ய, இதர நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து, அந்த பணிகளை மேம்படுத்த இது உதவும்.
2.ஐக்கிய நாடுகள் சபையில் இதுவரை இணையாமல் உள்ள இரண்டு நாடுகள் ஒன்று சுவால் பார்டு (Norway) இரண்டாவது தைவான்.
3. எகிப்து என்பது ஆப்பிரிக்க நாடு என்று நமக்கு தெரியும். இது ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது.
4. இந்த சர்வதேச மாநாட்டின் இரண்டாவது நாள் ஐநாவின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பேசும் போது உலக நாடுகளின் கடமை என்ன என்று குறிப்பிட்டார்.
5. “புவி வெப்பமாதலை 1.5 டிகிரி சென்டிகிரேடுக்குள், கட்டுப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்ற பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் கேள்விக்குறியாகி விட்டது” என்று தன் வருத்தத்தை தெரிவித்தார்.
6. “பருவநிலை மாற்ற பாதுகாப்புக்கு நாம் ஒத்துழைப்புத் தரலாம் அல்லது தற்கொலை செய்து கொள்ள ஒப்பந்தம் போடலாம்” என்று கடுமையாக உலக நாடுகளை அவர் எச்சரித்தார்.
7. "வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகியவைதான் தாவரங்களுக்கும் உயிரினங்களுக்கும் தேவைப்படும் வெப்பத்தை சூரியனிடமிருந்து பெற்றுத் தருகின்றன. அதனால்தான் அவற்றை பசுமை இல்ல வாயுக்கள் என்று சொல்லுகிறோம்"
8.”உலகம் முழுக்க ஏற்படும் வெள்ளம், சூறாவளி, வெப்பம், வெப்ப அலை, மற்றும் இவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் பருவநிலை மாற்றம்தான் காரணம்" என்று குறிப்பிட்டார்.
9. “2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில், தொழில் புரட்சிக்கு முன்பிருந்த வெப்பநிலை விட 1.5 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருக்குமாறு வைத்திருக்கவும் அதற்கு ஏற்ற கரியமில வாயுவை கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொண்டன” என்று 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஐநா பொதுச் செயலாளர் நினைவு படுத்தினார்.
10. “உலக நாடுகளுக்கு தேவை இருக்கும் வரை எங்கள் நாடு படிம எரி பொருட்களை விநியோகம் செய்வோம்” என்றார் "யுனைடெட் அராப் எமிரேட்ஸ்" அதிபர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நகியா அவர்கள்.
11. "2050 ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதை பூஜ்ஜியம் என்று கொண்டு வர அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். 2040 ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி உபயோகத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்" என்றும் இறுதியாக தனது கோரிக்கையை முன்வைத்தார் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் அவர்கள்.
வளரும் நாடுகளுக்கு உதவுவோம் என்று சொல்லிவிட்டு மவுனமாக இருக்கும் வளர்ந்த நாடுகள்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.
எகிப்து நாட்டில்
நடைபெறும் பருவகால மாற்ற பாதுகாப்பு குறித்த மாநாடு தொடர்பான கூடுதலான செய்திகளை
அடுத்த பதிவில் பார்க்கலாம் நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
#COP27EGYPTSHARMELSHEIKH
#UNITEDNATIONSCLIMATECHANGECONFERENCE
#UNCLIMATESUMMITAFRICA
#ADAPTATIONAGENDA
#DEVELOPINGCOUNTRIES
#CLIMATEJUSTICE
#UNFCCCCOP27
#CLIMATECHANGEACTION
#CLIMATEIMPLEMENTATIONSUMMIT
#CONFERENCE OF PARTIES
#INTERNATIONALCONFERENCEONCLIMATECHANGE
No comments:
Post a Comment