பர்கூர் எருமை
இந்தியாவின் 17 எருமை இனங்களில் ஒன்று, தமிழ்நாட்டில், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் ஈரோடு மவட்டத்தில் பர்கூர் பகுதியில் லிங்காயத்து இன மக்களால், சாணம், பால், இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாட்டினம் இந்த பர்கூர் பால்எருமை பற்றிய 14 செய்திகளை இங்கு பார்க்கலாம்.
1. குறைவான பால் தரும் எருமை இனம். ஒரு நாளில் 1.5 முதல் 2 லிட்டர் பால்தான் பீய்ச்ச முடியும். இதன் பால் மருத்துவ குணம் நிறைந்தது.
2. முக்கியமாக சாணம், பால், மற்றும் இறைச்சிக்காக இவற்றை வளர்க்கிறார்கள்.
3. ஆண் எருமைக் கன்றுகளை கேரா பீப் (KERA BEEF) என்ற இறைச்சிக்காக விற்பனை செய்கிறார்கள். இந்தியாவில் இதனை ரெட்பீஃப் (RED BEEF) என்று சொல்லுகிறார்கள். கேரா பீப் வெளி நாடுகளில் பிரபலமானது.
4. பர்கூர் எருமை மாடுகள் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வட்டத்தைச் சேர்ந்த பர்கூர் பகுதிக்குரிய எருமை இனம். இது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைக்கு சொந்தமான மாட்டினம்
5. இவை கருப்பு நிறமாக இருக்கும். சில வெளிர் காவி நிறமாகவும் காவி கலந்த கருப்பு நிறத்துடனும் இருக்கும். கால்களின் அடிப்பகுதி வெளிர் நிறமாக இருக்கும்.
6. அதிகபட்சமாக 104 செ.மீ. அளவுக்கு குறைவான உயரமுடைய சிறிய மலைப்பகுதிகளுக்கு ஏற்ற எருமை இனம்.
7. இந்த எருமைகளின் கழுத்து மற்றும் தலைப்பகுதி அடர்த்தியான கருப்பு நிறத்தில் இருக்கும்.
8. கொம்புகள், திமிள் வரை நீண்டு தட்டையாக உட்புறம் வளைந்த வடிவத்தில்
இருக்கும்.
9. தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தால் இந்திய எருமை என அங்கீகரிக்கப்பட்டு.வெளியிடப்பட்ட மாட்டினம் இது.
10.ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் தாலுகா பகுதியில் மலைப்பகுதிகளில் வசிக்கும் இந்த லிங்காயத்துக்கள் இந்த எருமைகளை வளர்க்கிறார்கள்.
11. இந்த லிங்காயத்து இன மக்களுக்கு இந்த எருமைப்பால் மிக முக்கியமான உணவாக உள்ளது.
12. இதனை வளர்ப்பவர்கள் இதற்கு தீவனம் எதுவும் போடுவது இல்லை. மலைச்சரிவுகளில் மெய்வதோடு சரி. மிகவும் அரிதாக கேழ்வரகுத் தட்டைகளைப் போடுகிறார்கள்.
13. பர்கூர் எருமைகள் முரட்டு குணம் கொண்டவை. அவற்றை பழக்கப்படுத்துவது சிரமமான காரியம்.
14. கன்னடம் பேசும் லிங்காயத்துக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த எருமைகளை மந்தை மந்தையாகப் பார்க்கலாம்.
அன்பு நண்பர்களே தமிழ்நாட்டிற்கு சொந்தமான இந்த பர்கூர் எருமைகள் பற்றிய செய்திகள் ஏதும் இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்.
பயன் தரும்
செய்திகளைப் பகிர்வோம் பலபயன் பெறுவோம்.
மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம்
நன்றி,
வணக்கம்.பூமி ஞானசூரியன்
#CATTLE
#BARGURMILCHFUFFALOES
#CATTLECATEGORIES
#ERODEINDIANBUFFALO
#BUFFALOMILKCOWSMILK
#WESTERNGHATS
#MILKPRODUCTS
#SKIMMEDMILK
#YOGURTBUTTERCREAM
#MILKPASTURIZATION
#VALUEADDITION
#MILKPRODUCTIONININDIA
No comments:
Post a Comment