தார்வாடி எருமை
அங்கீகரிக்கப்பட்ட இந்திய எருமை இனம், தானாய் மேய்ந்துவிட்டு வந்து தானாய் பால் தந்து, சரித்திரப் புகழ்பெற்ற பாரம்பரிய பால்பேடா இனிப்புக்கு நெய்தந்ததோடு, அதற்கு பூகோள அடையாள எண்ணும் பெற்றுத்தந்தது இந்த தார்வடி எருமை, இதுபற்றிய இருபது செய்திகளை இங்கு தந்திருக்கிறேன்.
1. இந்தியாவின் பாரம்பரியமான எருமை இனங்களில் ஒன்று இந்த தார்வாடி இன எருமை.
2. கர்நாடக மாநிலத்தில் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று தான் தார்வாட் பேடா என்பது. தார்வாட் பேடா இனிப்பு வகை செய்வதற்கு பயன்படுத்துவது இந்த எருமைப் பாலின் நெய்தான், அந்த எருமையின் பெயர்தான் தார்வாடி எருமை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
3.தார்வாட் எருமை பற்றிய ஆச்சரியமான ஒரு செய்தியைச் சொல்லுகிறேன் கேளுங்கள், தார்வாட் எருமைகளை வளர்ப்பவர்கள் யாரும் அவற்றை கட்டி வைத்து தீனி போடுவது கிடையாது.
4. தானாக மேய்ந்து விட்டு வந்து தானாக வீடுகளில் அடங்கும் எருமை இனம்.அடுத்தவர் கையை எதிர்பார்க்காத எருமை இனம்.
5. தார்வாட் எருமை இனங்கள் 17 முதல் 20 மாதங்களில் கன்றுபோட ஆரம்பிக்கும்.
6. ஒரு ஈற்றுக்காலத்தில் தார்வாட் இன மாடுகள் 1500 லிட்டர் வரை பால் தரும்.
7. நல்ல தீவனம் தந்தால் அதிகமாகவும் கறக்கலாம். இதன் பாலில் ஏழு சதவிகித கொழுப்பு சத்து அடங்கியுள்ளது.
8. பிறை நிலா மாதிரியான இதன் கொம்புகள் அரை வட்டமாக அமைந்திருக்கும். இரண்டு கொம்புகளையும் இணைத்தால் ஒரு வட்டம் முழுமையாகும்.
9. இந்த எருமை மாடுகளின் உடல் கருப்பு நிறமாக இருக்கும். கருப்பு நிறத்தில் கூடவும் இருக்கும் சில குறைவாகவும் இருக்கும்.
10. வடக்கு கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 1.4 மில்லியன் தார்வாட் மாடுகள் இருக்கின்றனவாம்.
11. இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லும் படியான 50 வகை மாட்டினங்கள் உள்ளன. அவற்றில் எருமைகள் மட்டும் 17 இனங்கள்.
12. தார்வாட் எருமை அங்கீகரிக்கப்பட்ட 17 வது எருமை இனம்.உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தாக்கூர் குடும்ப உறுப்பினர் ஒருவர் கர்நாடகாவில் பிழைப்பு தேடி வந்தார். வந்தவர் இங்கு வந்து ஒரு இனிப்பு பலகாரம் செய்து பிரபலமானார்.
13. அந்த இனிப்பின் பெயர் பேடா, தார்வாட்டில் பிரபலமானதாலும் என்பது தார்வாட் எருமைப் பால் நெய்யில் செய்ததாலும், அது தார்வாட் பேடா ஆனது.
14. தார்வாட் பேடா இனிப்பை அறிமுகம் செய்த, உ.பி. ராம் ரத்தம் சிங் தாகூர்’ பெயரும், அவர் தயார் செய்த பேடாவும், தார்வாட் எருமை மூன்றும் பிரபலமாகிவிட்டது.
15. இதுதான் தார்வாட் எருமை பிரபலமானதன் நதிமூலம்.
16. “தார்வாட் எருமை பாலில் தயாரித்த சுத்தமான நெய்யினால் செய்த பேடா” என்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு சொன்னவிலை தந்து வாங்குகிறார்கள். அதனால்தான் அதற்கு பூகோள அடையாள எண்ணையும் (GEOGRAPHICAL INDICATION TAG NUMBER 80)கண்ணை மூடிக்கொண்டு தந்துள்ளது இந்திய அரசு,
17. ஒரு கறவைக் காலத்தில் தோராயமாக 335 நாட்கள் பால் தரும். தார்வாட் எருமைகள் கர்நாடகாவில் மட்டும் 14 மாவட்டங்களில் வளர்க்கிறார்கள்.
18. இந்த இன எருமைகள் அதிக அளவு பால் தரவில்லை எனினும் “இந்தப் பால் மருத்துவப் பயன் உடையது.. “பேடா செய்ய மட்டும் பால் தந்தால் போதும் போய்யா“ என்கிறார்கள்.
19. “குறைவான மழை பெறும் மானாவாரிப் பிரதேசங்களில்கூட வளர்க்கலாம் பிரச்சினை இல்லை”எங்கிறார்கள்.
அன்பு நண்பர்களே இதுவரை இந்த தார்வாடி எருமை இனம் பற்றிய 19 சுவாரஸ்யமான செய்திகளைப் பார்த்தோம்.
ஆமாம், நீங்கள் யாராச்சும் தார்வார்பேடா சாப்பிட்டு இருக்கிறீர்களா? எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
பயன் தரும் செய்திகளை பகிர்வோம் ! பலன்பலப் பெறுவோம் !
பூமி ஞானசூரியன்
#CATTLE
#DHARWADIMILCHFUFFALOES
#CATTLECATEGORIES
#KARNATAKADHARDWADINDIANBUFFALO
#BUFFALOMILKCOWSMILK
#GEOGRAPHICALINDICATIONTAGNUMBER
#MILKSWEETPEDA
#BUFFALOBREEDS
#YOGURTBUTTERCREAM
#MILKPASTURIZATION
#VALUEADDITION
#MILKPRODUCTIONININDIA
No comments:
Post a Comment