Friday, November 25, 2022

INDIA PAKISTAN MILK BUFFALO NILIRAVI


நீலிராவி எருமை 

நீலிராவி எருமை இனம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. ஒரு கவை காலத்தில் 1500 முதல் 1850 கிலோ பால் தரும். இதன் பாலில் 12 சதம் கொழுப்பு சத்து உள்ளது. இது பற்றிய 16 செய்திகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. நீலிராவி மாட்டினம் பஞ்சாபில் பெரோஜ்பூர் மாவட்டத்தில் சட்லஜ் பள்ளத்தாக்கும், பாகிஸ்தானின் சாகிவால் மாவட்டத்திற்கும் சொந்தமானது. 

2. ராவி என்பது இந்த பகுதியில் உள்ள ஒரு ஆறு. இந்த ஆற்றங்கரை பகுதிகளில் உள்ளது தான் இந்த இனம். இந்த ஆறு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஓடும் ஆறு.

3. ராவி எருமைகள் பெரும்பாலும் கருப்பு நிறமாக இருக்கும். இதன் தலையின் முன்புறம், முகம், மேல் உதட்டு பகுதி, கால்கள் மற்றும் வால் பகுதிகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் இருக்கும். 

4.ஒரு கவைக் காலத்தில் 1500 முதல் 1850 கிலோ வரை பால் தரும். முதல் கன்று ன்ற பின் இரண்டாவது கன்று ஈனுவதற்கு 550 முதல் 550 நாட்களாகும்.

5. முதல் கன்று போட 45 முதல் 50 மாதங்கள் பிடிக்கும். இதன் தலை சற்று நீண்ட வடிவத்தில், தலையின் மேல் பகுதி சட்டென எழும்பியது போலவும், இரு கண்களுக்கும் இடையே உள்ள பகுதி உட்குழிவாகவும் இருக்கும். 

6. பெரும்பாலான பெண் எருமைகள் வெண்மையான புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் தென்படும்.

7. இதன் உடல்  நடுத்தரமான அளவிலும், கொம்புகள் சிறியதாக இறுக்கமாக சுருண்டு இருக்கும், கழுத்து நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும். 

8. நீலி ராவி எருமைகள் கறவைக்காலத்தில் 3000 முதல் 5 ஆயிரம் லிட்டர் வரை பால் தரக்கூடியவை. 

9. சராசரியாக 305 நாட்கள் பால் கறக்கும், ஒரு நாளில் குறைந்தபட்சம் 7.3 லிட்டர் பாலும், அதிகபட்சமாக 15.9 லிட்டர் பாலும் தரும்.

10. இது முக்கியமாக முரா எருமை இனத்திற்கு ஏறத்தாழ சமமானது. நீலிராவி எருமை முழுக்க முழுக்க பால் எருமை என்பது முக்கியமான அம்சம். 

11. இதன் பாலில் 12 சதம் கொழுப்பு சத்து உள்ளது.  முர்ரா எருமை இனத்திற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. நீலி ராவி காளைகள், உடல் எடை 700 கிலோவும், கறவை மாடுகள் அதாவது பெண் மாடுகள் 600 கிலோவும் இருக்கும். அதுபோல காளை எருமைகள் உயரம் அதிகமாக இருக்கும்.

12. நீலிராவி எருமைகள் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பிலிப்பைன்ஸ், வெனிசுலா, ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

நண்பர்களே, நீலிராவி எருமை பற்றி வேறு பயனுள்ள தகவல் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள். மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம். 

பூமி ஞானசூரியன்

#MILKBUFFALONILIRAVI

#UP&MATHYAPRADESHBUFFALO

#DAIRYANIMAL

#NILIRAVIBUFFALOPRICE

#INDIANBUFFALOCHARACTERISTICS

#MILKINPRODUCTIONININDIA

#MILKWITHMOREBUTTER

#BUFFALOMILK

#RIVERBUFFALOES

#TYPESOFMILKCATTLE

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...