ஒப்பந்தம்
பூமி வெப்பத்தை
கட்டுப்படுத்த..
எகிப்து நாட்டில் நடக்கும் பருவநிலை பாதுகாப்புக்கான ஐநாவின் 27 வது சர்வதேச மாநாட்டில் முக்கியமான பேசும் பொருளாக இருந்தது என்ன ? ஒண்ணரை டிகிரி சென்டிகிரேட் வெப்ப இலக்கு என்றால் என்ன ? 58.8% ஜிகா டன் பசுமை இல்ல வாய்யுக்கள் என்றால் என்ன ? ஜி 20 நாடுகளுக்கும் இந்த இந்த மாநாட்டுக்கும் என்ன தொடர்பு என்பதை பற்றிய 14 செய்திகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பருவ கால மாற்றத்தால் பூமியின் வெப்பநிலையை (GLOBAR WARMING) 1.5 சென்டிகிரேடுக்குமேல் போக அனுமதிக்க கூடாது. இந்த நூற்றாண்டு முடிவுக்குள் நாம் இதனைச் சாதித்தாக வேண்டும்.
2. இந்த 1.5 சென்டிகிரேட் வெப்ப ஒப்பந்தம் தான் எகிப்தில் நடக்கும் எகிப்து பருவநிலை பாதுகாப்பு மாநாட்டின் பிரதான பேசுபொருளாக உள்ளது.
3. ஆனால் 1.5 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் இந்த பூமி வெப்பமாகாமல் தடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது என ஐநா சபை தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.
4. அகில உலக அளவில் 2021 ஆம் ஆண்டு வெளியான பசுமை இல்ல வாயு 52.8 ஜிகா டன். என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பசுமை இல்ல வாயுவுக்கு 70% காரணமாக உள்ள நாடுகள் அத்தனையும் ஜி 20 அமைப்பில் உள்ளவை என்று இங்கு குறிப்பிடப்பட்டது. இந்தியாவையும் சேர்த்து 19 நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன.
5. தற்போது 52.8 டன் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்திற்கு காரணமாக இருப்பது வளர்ந்த நாடுகள் மட்டுமே என்று சொல்லுகிறார்கள்.
6. வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யவும், நிவாரண பணிகளுக்கு உதவவும் வளர்ந்த நாடுகள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளன.
7. அதற்கான ஒப்பந்தத்திலும் உலக நாடுகள் அனைத்தும் கையெழுத்தும் இட்டன. பாரிசில் நடந்த மாநாட்டின் போது இது நடந்தது.
8. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பருவக்கால பாதுகாப்புக்கான சிறப்பு தூதுவர் ஜான் கெர்ரி அவர்கள் சனிக்கிழமை அன்று எகிப்து மாநாட்டில் கலந்து கொண்டார்.
9. "வளரும் நாடுகளில் ஏற்படும் பருவகால மாற்ற விளைவுகளால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய தனியாக ஒரு நிதியம் வேண்டும் என்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் அமைப்புகளே இதற்கு உதவலாம். தனித்த ஓர் அமைப்பு தேவை இல்லை என்பது எங்கள் கருத்து" என்றார் ஜான் கெர்ரி.
10. “பூமியின் வெப்பம் இரண்டு டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரித்தால் கிரீன்லாந்தின் பணிப்பாறைகள் உருகி உடைந்து நொறுங்கும். இதனால் வெப்பமண்டல பவழப்பாறைகள் கூட அழிந்து போகும்” என்றார் பேராசிரியர் ஜோகன் ராக்ஸ்டாம் என்பவர்.
11. “இவை அத்தனையும் புவி வெப்பம் 1.5 டிகிரி சென்டிமீட்டர் உயரும் போது நடக்கும்” என்றார்.
12.”தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த வெப்பநிலையை விட தற்போது 1.2 என்றும் 1.3 டிகிரி சென்டிகிரேட் என்று அதிகரித்துள்ளது.”
13. “பன்னிரண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட 1.2 டிகிரி முதல் 1.3 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்துள்ளது. அதனால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அந்த வெப்பநிலை 1.5 சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்காமல் தடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல” என்றார் ஜோகன்.
14. பருவநிலை மாற்றத்திற்குக் காரணமான வளர்ச்சி அடைந்த நாடுகள், அதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்பதைத்தான் எகிப்தில் நடக்கும் இந்த சர்வதேச மாநாடு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
வளர்ந்த நாடுகள் தாங்கள் அளித்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்குவது குறித்த உங்கள் கருத்தினை எனக்குச் சொல்லுங்கள்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
#UNITEDNATIONSCLIMATECHANGECONFERENCE
#UNCLIMATESUMMITAFRICA
#1.5DEGREECENTIGRADE
#58.8GIGATONGASEMISSION
#CLIMATEJUSTICEHELPDEVELOPING COUNTRIES
#UNFCCCCOP27
#CLIMATECHANGEACTION
#CLIMATEIMPLEMENTATIONSUMMIT
#CONFERENCE OF PARTIES
#INTERNATIONALCONFERENCEONCLIMATECHANGE
No comments:
Post a Comment