செய்தி எண் 5
அடிமரம்
பருத்த மரங்கள்
1.ஒரு மரத்தில் அதிக இலைகள் இருந்தால் அதிக ஒளிச் சேர்க்கை நடக்கும். அதன் மூலம் அதிகமான கரிமில வாயுவை அது எடுத்து தனக்குள் சேமித்துக் கொள்ளும்.
2.அப்படி என்றால் நம்ம ஊர் அரச மரம், அத்திமரம், ஆலமரம் போன்ற அதிகப்படியான தழை அமைப்பு கொண்ட மரங்கள் அத்தனையும் அதிக கரிமில வாயுவைக் கட்டுப்படுத்தும்.
3. இந்த ஆராய்ச்சியை 38 ஆராய்ச்சியாளர்கள் 15 நாடுகளில் 400 மர வகைகளில் செய்தார்கள்.
4.சிறிய தலை அமைப்பை உடைய குறைவான இலைகள் கொண்ட மரங்கள் குறைவான கரியமல வாயுவை மட்டுமே கட்டுப்படுத்தும், என்கிறார் ஸ்டிபன் அவர்கள். இவர் கலிபோர்னியாவில் த்ரீ ரிவர்ஸ் பகுதியில் உள்ள வெஸ்டர்ன் ஈகாலஜிக்கல் ரிசர்ச் சென்டரில் வேலை பார்க்கும் விஞ்ஞானி.
5.ஒரு மரத்தின் அடி மரம் பத்து மடங்கு பருத்தால் அதன் இலைகள் 100 மடங்கு அதிகரிக்கும் என்கிறார் ஸ்டீபன் அவர்கள்.
6. வயது முதிர்ந்த மரங்கள் அதிகப்படியான கரிமில வாயுவை தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளுகின்றன. அது மட்டுமல்ல அவற்றை மீண்டும் சுற்றுச்சூழலுக்கு செல்ல அனுமதிப்பதும் இல்லை.
7.ஸ்டீபன் அவர்களின் ஆராய்ச்சிப் படி 20 ஆண்டு மரங்களை விட 90 ஆண்டு மரங்கள் அதிக அளவு கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துகின்றன.
8. அதுமட்டுமல்ல இன்னொன்றையும் சொல்லுகிறார்கள். அதாவது உயரமான மரங்கள் அதிகப்படியான கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துகின்றன.
9.ஒரு சுவாரசியமான தகவல் 450 முதல் 500 ஆண்டு வயது முதிர்ந்த ஒரு தேக்கு மரம் தான் உலகின் பழமையான தேக்கு மரம் என்கிறார்கள்.அது கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது இதன் உயரம் 156 அடி.
10.இன்னொரு ஆச்சரியமான தகவல் உலகிலேயே மிக அகலமான பெரிய இலைகளை உடைய மரம் அமேசான் காடுகளில் உள்ளது.இதன் இலைகள் நீளம் எட்டடியும் அகலம் நான்கடியும் உள்ளது.
11. இதன் தாவரவியல் பெயர் கோகோ லோபா ஜெய்ஜாண்டி ஃபோலியா என்பது. இது வடக்கு பிரேசிலுக்கு சொந்தமான மரம்.
பிரேசிலுக்கு போனால் மறக்காமல் கோக்கோ லோபா மரத்தை பார்த்து விட்டு வாருங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் வணக்கம் நன்றி.
பூமி ஞானசூரியன்
#TREESREDUCECARBONINATMOSPHERE
#BIGBOTTOMTREESCARBONSEQUESTRATION
#SEQUESTERCARBON
#ONEACRETREESSEQUESTER
#CLIMATECHANGE
#GLOBALWARMING
#GREENHOUSEGASES
#NATURALDISASTERS
#PHOTOSYNTHESIS
#CARBONSINKS
#TEAKTREESEQUESTERMORECARBON
#LARGECROWNMORELEAVES
#BROADLEAVESMOREBIOMASS
#FORESTTREES
#MIYAWAKIMINIFORESTS
No comments:
Post a Comment