Wednesday, November 23, 2022

ACHIEVE MASTERY OF ANY-SECTOR


                                                         

பூமி ஞானசூரியன்
 

மா ஸ் ட ரி

ராபர்ட் கிரீன் என்பவரால் 2012 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் இது.ஒரு குறிப்பிட்ட துறையில் தலைமைத்துவம் அடைவது எப்படி அல்லது புலமை அடைவது எப்படி என்பதை பற்றிய நூல் தான் இது. வெற்றியைத் தேடி தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்கு இந்த நூல் ஒரு அரிய நூலாக இருக்கும்.

அமெரிக்காவில் நல்ல பகுதியில் ஒரு புத்தகக் கடைக்கு நான் போயிருந்தேன்.அந்த சமயம் என் மகன் இந்தப் புத்தகத்தை வாங்கி எனக்கு பரிசாகத் தந்தான். இந்த “மாஸ்டரி” புத்தகத்தை எழுதியவர் ராபர்ட் கிரீன் என்பவர்.  

அந்தப் புத்தகத்தில் உள்ள சாராம்சமான 19 செய்திகளை உங்களுக்கு நான் இங்கு தந்துள்ளேன் படியுங்கள். உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

1.ஒரு வேலையைச் செய்வதில் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில் அதே உன்னதமான திறமைகளைப் பெறுவது அல்லது அதனை அடைவது தான் மாஸ்டரி அல்லது நிபுணத்துவம் பெறுதல் என்று நான் இதை புரிந்து கொண்டேன். 

2. மாஸ்டரி அல்லது நிபுணத்துவம் அடைய ராபர்ட்கிரீன் மூன்று நிலைகளைச் சொல்லுகிறார். ஒன்று கற்றுக் கொள்ளும் நிலை, இரண்டு படைப்பாற்றலுடன் வேகமாக வளரும் நிலை, மூன்றாவதாக நிபுணத்துவம் அடைதல்.

3. ஒன்று தொடக்கம். இன்னொன்று வளர்ச்சி நிலை, அதாவது தொடர்ந்து வளரும் நிலை. மூன்றாவது நிலை அந்த குறிப்பிட்ட துறையின் உச்சியை அடைதல். அதுதான் நிபுணத்துவம் அல்லது மாஸ்டரி என்பது.

3.ஒரே ஒரு காரியத்தில் அல்லது துறையில் தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள பெரிய திறமை எதுவும் தேவையில்லை. அதற்கு பெரிய புத்திசாலித்தனமும் தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்வது மட்டுமே தேவையானது 

4. உலக சரித்திரத்தில் யாரெல்லாம் நிபுணத்துவம் அடைந்தார்கள் தெரியுமா ? இப்படி ஒரு பெரிய பட்டியலைத் தருகிறார்.

5.அதில் மிகவும் பிரபலமான ஏழு பெயர்களை மட்டும் இங்கு தந்துள்ளேன். ஒன்று லியர்னடோ டாவின்சி, இசைமேதை மோசாத், பெரும் கவிஞர் ஜான் கிட்ஸ், சார்லஸ் டார்வின், தாமஸ் எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மற்றும் ஹென்றி ஃபோர்ட்.

6.வேலை என்பது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழி. நிபுணத்துவம் பெறுவதற்கான வேலை என்பது வேறு. அதுதான் நம்மை முன்னெடுத்துச் செல்வது அல்லது நம்மை உயர்த்திப் பிடிப்பது. சம்பாதிக்கும் வழி நம்மை நிபுணத்துவம் அடைய சம்மதிக்காது.

7.குறிப்பிட்ட ஒரு துறையில் நம் கவனம் முழுவதையும் செலுத்த, அதனை நாம் முழுமையாக நேசிக்க வேண்டும். அத்துடன் ஒருவிதமான உறுதியான பிணைப்பு அல்லது இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

8. நிபுணத்துவம் என்பதை அடைய மிகவும் பொறுமை வேண்டும். உங்கள் முனைப்பான கவனத்தை 5,10 ஆண்டுகள் செலுத்தும் போது நீங்கள் கண்டிப்பாக அதன் பயனை அறுவடை செய்வீர்கள்.

 

9. நிபுணத்துவத்தை இலக்காகக் கொண்டு அதனை தன் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் போது, பணம், வெற்றி, புகழ் அனைத்தும் அவர்களைத் தேடி வரும். 

10.திறமைகளை வளர்த்துக் கொள்வது என்பது ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் எண்ணற்ற முறையில் செய்து பார்ப்பதுதான். அதுதான் உங்களுக்கு பாண்டியத்துவத்தை நிபுணத்துவத்தைத் தரும். 

11. ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது, அதிகமான நேரம் படிப்பதால் வராது. அதிகமான புத்தகங்கள் படிப்பதால் வராது. அதிகம் பேசிப் பார்க்க வேண்டும். அதனால் மட்டுமே அந்த மொழியில் புலமை பெற முடியும்.  

12. ஒரு குறிப்பிட்ட ஒரு துறையில் நிபுணத்துவம் அடைய வேண்டுமானால், அதனை அடைய குறைந்தது பத்தாயிரம் மணி நேரம் நீங்கள் உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று கணக்கிட்டால் 416.66 நாட்கள் ஆகும் அதாவது ஒரு ஆண்டும் 51 நாட்களும் ஆகும் 

13. நான் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 16 மணி நேரம் வேலை பார்ப்பேன். என்னை மாதிரி ஒரு ஆள் 10000 மணி நேரம் ஒரு குறிப்பிட்ட துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் 625 நாட்கள் பிடிக்கும். இதற்கு ஒரு ஆண்டும் 260 நாட்களும் ஆகும்.

14. ஒரே துறையில் கவனம் செலுத்தி எவ்வித கவனச் சிதறலும் இல்லாமல் உழைக்கும் போது கண்டிப்பாக நிபுணத்துவம் என்பது கனிந்து தானாய் நம் மடியில் விழும். அதனை யாராலும் தடுக்க முடியாது.

15. வகை வகையான மனிதர்களுடன் பழகுங்கள். உங்கள் வட்டம் நாளாக நாளாக அது விரிவடையும். பலவகையான மனிதர்களின் பழக்க வழக்கம் உங்கள் சக்தியை அதிகரிக்கும், பல மடங்காக பெருக்கும். உங்கள் ஆளுமை எல்லையை அது விரிவாக்க பரவலாக்க உதவும்.

16.நிபுணத்துவம் அடைவதற்கு சமூக நுண்ணறிவு அவசியம் வேண்டும். அப்படி என்றால், யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? எப்படிப் பேச வேண்டும் ? போன்ற இங்கிதங்களை தெரிந்து நடப்பதுதான் சமூக நுண்ணறிவு.

17. நிபுணத்தும் அடைவதற்கு என்னவெல்லாம் நம்மிடம் அறவே இருக்க கூடாது என்று ஒரு பட்டியலைத் தருகிறார் ராபர்ட் கிரீன் அவர்கள். 

18. அந்தப் பட்டியல் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். அது மோசமான குணங்களின் பட்டியல். 

19. அவை 1.பொறாமை(envy), 2.சோம்பேறித்தனம்(laziness), 3.இறுக்கமான குணம்(rigidity), 4.கட்டுபெட்டித்தனம்(conformism)5. சுயநலம்(self-obsessiveness) 6.)ஸ்திரமான தன்மையில்லாதது(flightiness) 7.உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் தன்மை(passive-aggression).

இதில் சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நினைக்கிறேன். மாஸ்டரிபற்றி இதுபோல நீங்கள் படித்த நல்ல புத்தகங்கள் இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம், நன்றி வணக்கம். 

பூமி ஞானசூரியன்.

#selfdevelopmentbooks

#bestselfdevelopmentbooks

#booksofaltime

#bestbooktoread

#goodbooktoread

#selfimprovementbooks

#bestpersonaldevelopmentbooks

#topsellingselfdevelopmentbooks

#lifechangingbooks

#selfhelpbooks


 

1 comment:

Yasmine begam thooyavan said...

நல்ல விஷயங்களை சிந்தனை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. Mastry புத்தகம் பற்றி தெரிந்து கொண்டேன். அருமை சார்.

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...